இந்த
ஆண்டு (2016) சூன் 1 முதல் 13 வரை சென்னையில் புத்தகக் கண்காட்சி தீவுத்
திடலில் நடைபெறுகின்றது. வாசிப்பு எந்த அளவுக்கு ஒரு மனிதனுக்குத் தேவை
என்பதை பல அறிஞர்கள் கூறியுள்ளனர். வாசிப்பு புதிய கருத்துகளை
அறிமுகப்படுத்துகின்றது. புதிய சிந்தனையை உருவாக்குகின்றது. நம்மை நாமே
உணர்ந்து கொள்ள, எண்ணங்களை மெருகேற்றிக்கொள்ள வாசிப்பு உதவுகின்றது.
மற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றினைப் படிக்கும்போது, நமக்கு அதிலிருந்து
கிடைக்கும் அனுபவம் நம் வாழ்வினை செம்மையாக்க உதவுகின்றது. வாசிப்பு,
நமக்கு மற்றவர்களிடம் உரையாடும் பயிற்சியைத் தருகின்றது. நம்முடைய கற்பனையை
உயர்த்துகின்றது.
நல்ல
நூல்களைத் தேடித் தேடி வாசியுங்கள். உடலுக்கு எப்படி நாம் உடற்பயிற்சி
செய்கின்றோமோ அதுபோல, மனதிற்கு சிறந்த பயிற்சி நல்ல நூல்களை வாசிப்பது
மட்டுமே. நல்ல புத்தகம் நல்ல நண்பன் என்பார்கள். வாசிப்பு மட்டுமே மனிதனின்
அறிவை விரிவாக்கும், குழம்பிய மனதினை தெளிவாக்கும், ஒருநிலைப்படுத்தும்.
மனிதனைப் போலத்தான் புத்தகமும் ஒரு வாழ்வின் தோற்றமாகும், அதற்கும்
உயிருண்டு, அதுவும் பேசும். மனிதன் இதுவரை படைத்த, இன்றைக்கும் படைத்து
வருகிற மற்ற பொருட்கள் போன்ற அளவுக்கு அது ஒரு “பொருள்” மட்டும் அல்ல
என்றார் புகழ் பெற்ற
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment