Monday, 13 March 2017

அருட்பா – மருட்பா போர் – ஒரு பார்வை


Siragu arutpa3

சைவ சமயத்தில் பக்தி இலக்கியங்களாகப் போற்றப்பட்டவை திருமந்திரம், திருவாசகம், திருப்புகழ். அதன் பிறகு எழுதப்பட்ட பாடல்கள் யாவும் பிரபந்த திரட்டுகள் எனவும், பின் இயற்றப்பட்டப் பாடல்கள் வெறும் திரட்டு எனவுமே அழைக்கப்பட்டன.
கோயில்களில், பசனைகளில், உற்சவங்களில் இப்பாடல்கள் மட்டுமே மிகுந்த சிரத்தையோடு பாடப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் 1867 ஆம் ஆண்டு வள்ளலார் அவர்கள் இயற்றிய பாடல்கள் அருட்பா எனும் தலைப்பில் வெளிவந்தது.

ஆரம்பத்தில் சொற்பொழிவுகளுக்கு முன்னர் பாடப்பட்ட அருட்பா மக்களிடம் வரவேற்பு பெற்றபோது கோயில்களில் பன்னிரண்டு திருமுறைகளோடு பாடப்பெறும் அளவுக்கு உயர்ந்தது. இது பலருக்கு வெறுப்பினைத் தந்தது. ஏனெனில் இராமலிங்க அடிகளின் பாடல்கள் அனைத்தும் தேவை இல்லாத சமயக் கோட்பாடுகளை கேள்வி கேட்டது. சாதிய வேறுபாடுகளை களைய அவர் இயற்றியப் பாடல்கள் பலரின் கவனத்தைப் பெற, சாதி மதங்களில் ஊறிய மனங்கள் அதை எதிர்த்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 12 March 2017

கல்வியையும் அதன் அவசியத்தைப் பற்றிக் கூறும் நூல்கள்


siragu-new-education4

கல்வி கற்கவேண்டியதன் அவசியத்தை சங்க இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. எனினும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் கல்வியின் நிலை அறிந்து கொள்ள நாம் அவற்றை ஆய்வு செய்வது என்பது வேண்டியதாகிறது. மேலும் தற்காலத்தில் கல்வியின் நிலை என்ன என்பதனை நாம் அறிந்துகொள்ளவும் வேண்டியதாகிறது.
கல்வியே செல்வம்:
உலகப்பொதுமறை என உலகோர் யாவராலும் போற்றி வழங்கப்படுகின்ற திருக்குறளில் வள்ளுவப் பெருந்தகை யாவற்றையும் விட கல்வியைத்தான் செல்வம் என்று,
“கேடில் விழுச்செல்வங் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை”

என ஒரு மனிதன் தன் வாழ்வில் பெறவேண்டிய செல்வங்களில் முதன்மையான செல்வம் என்று குறிப்பிடுகிறார். மேலும் பெற்றோர்களது கடமையாகவும் குறிப்பிடுகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 7 March 2017

கவிதைச் சோலை (சுவைத்தேன்!, எல்லோரும் வாழ்க வாழ்கவே!)


சுவைத்தேன்!

Siragu tamil1

சுவைத்தேன் ஒருதேன் சுவைத்தேன் அதில்
என்நெஞ்சும் மயங்கிடச் சுவைத்தேன்- நாளும்
அதிலொரு துளிசுவைத் தேன்மது சுவைத்தேன்
குறிஞ்சியில் செம்புலப் பெயரார் வரைந்த
அன்புடை நெஞ்சம் கலக்கும் ஓவியக்
காட்சியை சுவைத்தேன்!-கலித்தொகை நூலில்
காதலறம் அளித்திடும் இல்லறம் சுவைத்தேன்

மணக்கும் முல்லையில் இயற்கையின் ஒளியை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=26207

Monday, 6 March 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -15


siragu-panjathandhira-kadhaigal

பின்னொரு நாள், சண்டை மூண்டதால், ஒரு பணியாளன் தன் கையிலிருந்த ஒரு தடியை சமையல்காரன்மீது வீசி எறிந்தான். சமையல்காரன், தன் கையிலிருந்த கொள்ளிக்கட்டையினால் அவனைத் திருப்பி அடித்தான். அது அருகிலிருந்த வைக்கோல் குவியல்மீது விழுந்ததால் அது தீப்பற்றி எரிந்தது. அந்தத் தீ குதிரை லாயத்திற்கும் பரவியது. சில குதிரைகள் தீயினால் இறந்தன. பல குதிரைகளுக்குப் பலவித தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனே அரசன் விலங்கு மருத்துவரை வரவழைத்தான்.
அரசன்: காயம் பட்ட குதிரைகள் பிழைப்பதற்கு என்ன வழி?
மருத்துவர்கள்: குரங்குக் கொழுப்பிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயைத் தடவி வந்தால் இந்தக் காயங்கள் பூரண குணமாகும்.
அரசன்: நமது தோட்டத்திலிருக்கும் குரங்குகளைக் கொன்று இந்த வைத்தியத்தை உடனே செய்யுங்கள்.

வைத்தியர்களும் அவ்விதமே குரங்குக் கூட்டத்தை முற்றிலுமாகப் பிடித்துக் கொன்று குதிரைகளின் தீப்புண்களை ஆற்றினர். இந்தச் செய்தி அறிந்த முதுகுரங்கு, இதற்குப் பழிவாங்கவேண்டும் என்று முடிவுசெய்தது. அது காட்டிலிருந்து நகர்ப்புறம் வரும் வழியில், ஒரு ஏரியைக் கண்டது. அதில் மனிதர்கள் வந்துசெல்வதற்கான அறிகுறி எதுவுமே இல்லை. ஆகவே இந்த ஏரியில் ஏதாவது பேய் இருக்கலாம் என்று கருதித் தயங்கியது குரங்கு. ஆனால் தாகம் அதிகமாக இருந்ததால், ஒரு தாமரைத் தண்டினை எடுத்து அதன் தூம்புவழியாக ஏரியின் நீரை உறிஞ்சிக் குடிக்கலாயிற்று. குளத்திலிருந்த பேய் அந்தக் குரங்கின் முன் தோன்றியது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 5 March 2017

மூடநம்பிக்கைகளை வளர்த்தெடுக்கும் தனியார் பள்ளி நிறுவனங்கள்.!


Siragu moodanambikkai3
கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகத்திலுள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள், இந்த பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு சமயத்தில், சில குறிப்பிட்ட மதத் தொடர்பான மூடநம்பிக்கைகளை மாணவர்களிடம் திணிக்கிறது என்றே சொல்லலாம். இது ஒரு ஆபத்தான செயலாகும். நம் வருங்கால சமூகம் இம்மாணவர்களையே நம்பியிருக்கும் நடைமுறையில், இம்மாதிரி சமூக சீர்கேடுகளை நாம் உடனே தடுத்து நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பல தனியார் கல்வி நிறுவனங்கள் இந்தப் பொதுத் தேர்வு சமயத்தில், பெற்றோர்களுக்கு பாதபூசை செய்ய நிர்பந்திக்கிறது, மென்மேலும், ஆசிரியர்களும் பாதப்பூசை செய்ய வேண்டும், கல்வி கொடுக்கும் ஆசிரியர்கள் தெய்வத்திற்குச் சமம் என்ற ஒரு தோற்றத்தை மாணவர்களிடம் அறிமுகம் செய்கிறது. இதற்கெல்லாம் மிகப்பெரிய உச்சகட்டமாய், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம்தான் நம் எல்லோரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது எனலாம். சில நாட்களுக்கு முன், கோவை மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்று, பத்தாம் வகுப்பில் படிக்கும் நாற்பத்தியெட்டு மாணவர்களை மொட்டை அடிக்கச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறது. இதற்கு ஆசிரியர்களும் ஒரு காரணமாம். தேர்வில், தேர்ச்சிப்பெற வேண்டுமென்பதால் தான் இந்த மொட்டை அடிக்கும் சம்பவமாம்.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 2 March 2017

போக்கத்தப் பயல்களும் பொறுப்பற்ற அரசியலும் (கவிதை)


Siragu-chair

நாற்காலிப் போருக்காய்
‘நா’காலி ஆன
வீண் வெற்று
வாய்ச்சொல் வீரர்கள்-
மண்ணின் மைந்தர்களை
மன்னராக்கிய ஏழைகளை
வாழவழி ஏதுமின்றி
மாளும் விவசாயிகளை-
பொங்கிவந்த காளையரை-
போர் தொடுத்த இளைஞர்களை என
என்னடா நினைத்தீர்கள்
என்னரும் மக்களை?

ஓடு காலிகளாய்ப் பேருந்து ஏறி
தன்னறிவுச் சிந்தையுன்றி
தாய்நாடு பற்று இன்றி
அடுத்தது தாண்டும்
செம்மறி ஆடுகளாய்
அடிமையுற்று அடைபட்டீர்
நூற்றுக்கும் மேல் பட்டியிலே!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=26074

Wednesday, 1 March 2017

சிறகை விரித்தப் பறவை (சிறுகதை)


siragu-natural-guardian5

பேருந்து,   அண்ணாசாலை வழியே சென்று  கொண்டிருந்தது. சாலையில் சில பள்ளி மாணவிகள் சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் செல்கின்றனர். ஒரு வயதான தாத்தா பேரனை பள்ளிக்கு அழைத்துக்கொண்டு போகிறார். இளவயது தாய் ஒருவர் தோளில் ஒரு பையுடன், தன்  குழந்தையை தூக்கியபடி  வேகமாக நடந்து கொண்டிருக்கிறார். எங்கோ மெலிதாக, ‘நான் தேடும் செவ்வந்திபூவிது’ என்ற இளையராஜாவின் மெலடி பாடல் கேட்கிறது… இவைகளை  எல்லாம் கடந்து, பேருந்து சென்று கொண்டிருக்கிறது. இத்தனையும் தாண்டி, தனக்கு பிடித்த சன்னலோர இருக்கையில்  அமர்ந்திருந்தாலும், பூங்குழலிக்கு மனம் சாலையில் லயிக்கவில்லை. கண்களில் கண்ணீர் வருவதற்குத் தயாராக உள்ளது… காலையில் வீட்டில் நடந்த சம்பவமே மீண்டும், மீண்டும் மனதில் வந்து தொல்லைப்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாக அவளுடைய நினைவலைகள் பின்னோக்கிச் செல்கின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.