Thursday, 14 September 2017

ஏன் கண்மூடினாய்…? (கவிதை)


Siragu-en-kanmoodinaai1
பொங்கச்சோறு தினமும்
கிடையாது
நல்ல துணி உடுத்தவும்
முடியாது
பள்ளிக்கூடப் பையும்
பொத்தலாத்தான் இருக்கும்
புதுசா வாங்குன புத்தகம்
தரும் வாசணை
அறிஞ்சதே கிடையாது
பக்கத்து வீட்டு அக்கா
போன வருஷம்
தந்த புத்தகம்தான்

கிழிசலோட அடிக்கோடோட

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Wednesday, 13 September 2017

அணைக்கும் கரங்கள் (சிறுகதை)


Siragu anaikkum karangal2

”பத்மலட்சுமி குழந்தைகள் காப்பகம்“ அன்று கோலாகலமாயிருந்தது. அங்கு ஒரு வயதிலிருந்து நான்கு வயது வரை உள்ள பிஞ்சுக் குழந்தைகள் தன் பிஞ்சுப் பாதங்களுடன் அங்குமிங்கும் குதித்தோடிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்துக் கொள்ளும் ஆயாக்களோ மூச்சு வாங்க அவர்கள் பின்னால் ஒடிக்கொண்டிருந்தனர். மேடை போட்டு பந்தல் கட்டி வண்ண வண்ண பலூன்களால் அலங்கரித்து விழா ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. பார்வையாளர்கள் உட்கார நாற்கலிகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. ஒரு ஆயா இன்னொரு ஆயாவைக் கேட்டாள், ”இன்னைக்கு என்ன விசேசம்? நம்ம டாக்டர் அம்மாவுக்குப் பிறந்த நாளா?


நீ வேறே…………. இன்னிக்குக் குழந்தைகள் காப்பகத்தின் மூன்றாவது ஆண்டு முடிந்து நான்காவது ஆண்டு ஆரம்பிக்கிறதாம். டாக்டர் அம்மாவைப் போல இந்த உலகத்திலே யாரும் இருக்க மாட்டாங்க. தன்னலம் கருதாமே இந்த அநாதை குழந்தைகள் காப்பகத்தை நடத்திக்கிட்டு இருக்காங்க.”.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 12 September 2017

மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் அருங்காட்சியகம், அட்லாண்டா


Siragu Martin1

மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் (1929 -1968) அறிமுகம் தேவையற்ற ஓர் உலகத் தலைவர். அமெரிக்க கறுப்பின வரலாற்றில் மறக்கமுடியாத திருப்புமுனையை ஏற்படுத்திய ஆப்ரிக்க-அமெரிக்க மனித உரிமைப் போராளி. மகாத்மா காந்தியின் வழியில், அவர் கையாண்ட வன்முறையற்ற போராட்ட முறையை அமரிக்க மண்ணில் நிகழ்த்திக் காட்டி இந்திய மக்களின் உள்ளங்களிலும் நீங்காத இடம் பிடித்தவர். பிற உலகநாடுகளுக்குப் பயணிப்பதை சுற்றுலா எனக் கருதுவதாகவும், தனது இந்தியப் பயணத்தை யாத்திரையாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டவர். 

ஆப்பிரிக்க-அமெரிக்க மனித உரிமை இயக்கத்தின் தலைவராகவும், அட்லாண்டா நகரின் வரலாற்றுப் புகழ் மிக்க எபினேசர் பாப்டிஸ்ட் தேவாலயத்தின் சமயத் தலைவராகவும் பணியாற்றியவர். கறுப்பின மக்களின் சமவுரிமைக்காக இறுதிவரை போராட்டம் நிகழ்த்தியவர் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங். இவரது பணியைப் பாராட்டி, 1964-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட இவரும், மகாத்மா காந்தி எதிர்கொண்ட முடிவைப் போலவே, ஏப்ரல் 4, 1968 அன்று மெம்ஃபிஸ் நகரில் இனவெறியன் ஒருவனால் சுடப்பட்டு, 40 ஆம் அகவையை எட்டும் முன்னரே உயிரிழந்தார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 11 September 2017

நீட் எனும் தூக்குக்கயிறு.!


Siragu neet exam3

ஒரு அற்புதமான, திறமையான மருத்துவரை தமிழகம் இழந்திருக்கிறது. இழக்க வைத்திருக்கிறார்கள். இந்த கொடுமையை நம்மால் தடுக்க முடியவில்லையே என்று எண்ணும்போது நம் மனம் குற்றயுணர்ச்சியில் தவிக்கிறதே. அதுவும் சமூகநீதியில் முன்னே நிற்கும் நம் மாநிலம் இப்படிப்பட்ட ஒரு தவற்றை இழைத்திருக்கிறது என்றால், நம் வருங்கால சந்ததியினர் நம்மை குற்றவாளிகளாக, துரோகிகளாக அல்லவா பார்ப்பார்கள்.


இந்தியாவிலேயே மருத்துவக்கல்வியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது என புள்ளிவிவரங்கள் நமக்கு சொல்கின்றன. நம் மாநிலத்தில்தான் மிக அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. நம் மாநில மாணவர்கள் படித்து அதிக அளவில் ஒவ்வொரு ஆண்டும் வெளி வருகின்றனர். கிராமப்புற சேவைகளில் தங்களை அர்பணித்துக்கொள்கின்றனர். ஆரம்ப சுகாதர மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள். ஆனால், இவ்வாண்டு நம் மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்த்து எறிந்திருக்கிறது இந்த நீட் எனும் நுழைவுத்தேர்வு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 6 September 2017

க.நா.சு கவிதைகள் ஒரு பார்வை


Siragu ka.na.su1

20-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் பாரதியாரால் மேற்கொள்ளப்பட்ட மரபை மீறிய புதிய வகையிலான கவிதை அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் “free verse”என்று மேலை நாட்டினரால் மேற்கொள்ளப்பட்ட வசனகவிதை முறையை தமிழில் பாரதிக்குப் பின் ந.பிச்சமூர்த்தி மேற்கொண்டு பல சோதனைகளைச் செய்தார். அவற்றில் வெற்றியும் பெற்றார்.

இந்நிலையில் செத்துக் கொண்டிருந்த பழைய யாப்புக் கவிதை மரபிற்கு மாற்றாக புதிய முறை அவசியம் என்று ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன், க.நா.சு ஆகியோர் கணித்திருந்தனர். இவர்களில் ந.பிச்சமூர்த்திக்குப் பின் புதிய சோதனைகளை புதுமைபித்தன் தீவிரமாக கைகொண்டார். எனினும் இப்புது ரீதியான கவிதை முறைக்கு பண்டிதர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.


எந்த ஒன்றும் புதியதாக வருகிறபோது அவை எதிர்ப்பை சந்திக்கும் என்று இலக்கியத்தில் பரவலாகக் காணப்பட்டு வருகிறது. அது போல் மரபை மீறி முயன்ற கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்த நிலையில் அதனைக் கையாண்டு வெற்றி பெற்றவர்களுள் க.நா.சு குறிப்பிடத்தக்கவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 5 September 2017

கக்கூஸ் ஆவணப்படத்தின் மதிப்பாய்வு


Siragu kakoos1

துப்புரவுத் தொழிலாளர்களை அரசாங்கமும், நீதித்துறையும் படுத்தும் கொடுமைகளையும், அவர்கள் இந்த நச்சுச்சூழலில் சிக்கி வெளியே வரமுடியாமல் இருக்கும் சமூகச்சூழலையும் விளக்கி, தோழர் திவ்யாபாரதி “கக்கூஸ்” என்ற ஆவணப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இப்படம் துப்புரவுத் தொழிலாளர்களின் அவலங்களை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமல்ல, அரசாங்கத்தின், நீதித்துறையின் மனிதாபிமானம் அற்ற போக்கையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. துப்புரவுத் தொழிலாளர்கள் இத்தொழில் வேண்டாம் என்று வேறு தொழில்களுக்குப் போய்விடலாம் என்று கடுமையாக முயன்றாலும், அவர்களால் வெளியே வரமுடியாதபடி, இச்சமூகம் அவர்களை வலுக்கட்டாயமாக அழுத்திவைத்து இருப்பதும் இதில் காட்டப்பட்டு உள்ளது.


“இப்பொழுதெல்லாம் யார் சாதியைப் பார்க்கிறார்கள்?, அப்படியே இருந்தாலும் கிராமப்புறங்களில் ஓரளவு இருக்கலாமே ஒழிய நகர்ப்புறங்களில் இல்லவே இல்லை” என்று அதிமேதாவித்தனமாகப் பேசும் அறிவுஜீவிகளை இப்படம் நார்நாராகக் கிழித்துத் தொங்கப்போட்டு இருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4/

Monday, 4 September 2017

வாசிங்டன் டி.சி. பகுதியில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு!


Siragu kurundhogai maanaadu4

ஆகஸ்ட் 26‍-ஆம் நாள் சனிக்கிழமை அன்று மேரிலாந்து மாநிலம் ஒரு புதுமையான தமிழ்விழாவைக் கண்டது! எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையை முறையாக மூன்று ஆண்டுகளாகப் படித்துமுடித்து ஒரு பன்னாட்டு விழா நடைபெற்றது! காலை 9 மணிக்கு,  தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கியது விழா. அடுத்து குத்து விளக்கு ஏற்றுதலை திருமதி கீதா பிரபாகரன்,  திருமதி ஜெயந்தி சங்கர், திருமதி கல்பனா மெய்யப்பன், நளினி முத்துவேல், இரமா செந்தில்முருகன் முதலியோர் முன்னின்று நடத்தினர்.  தொடர்ந்து வாசிங்டன் தமிழ்ச்சங்க இளையோர் பலர் இணைந்து தாய் மொழியே வணக்கம் , யாமறிந்த மொழிகளிலே, மற்றும் குறுந்தொகைப் பாடல்களுக்கு பரத நாட்டியம் ஆட, விழா களை கட்டியது.


மாநாட்டை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம். வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டம், மற்றும் சில தமிழ் அமைப்புகளும் இணைந்து நடத்தின.  பேரவையின் துணைத் தலைவர் திரு. சுந்தர் குப்புசாமி ஆற்றிய துவக்க உரையில், பன்னாட்டு திருக்குறள் மாநாடு, பன்னாட்டுப் புறநானூறு மாநாடு என்ற வரிசையில் இந்த அமைப்புகள் இணைந்து நடத்தும் மூன்றாவது மாநாடு இது என்று குறிப்பிட்டார். அடுத்ததாக வரவேற்புரை நிகழ்த்தி,  விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களை அறிமுகமும் செய்தார் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் இர. பிரபாகரன். குறுந்தொகை சார்ந்து நடத்தப்பட்ட, பாட்டு மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பாடவும் பேசவும் செய்து மக்களை வியப்பில் ஆழ்த்தினர். அவர்களுக்கு சிறப்பு விருந்தினர், திரு. கலியமூர்த்தி IPS (பணி நிறைவு) அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.