Tuesday, 16 October 2018

கீழடி தமிழ் இனத்தின் முதல் காலடி


siragu keezhadi1
புதுப்புது நூல்கள் பல நாள்தோறும் வெளியிடப்படுகின்றன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நோக்கத்துடன் நூலாசிரியர்கள் படைக்கின்றனர். அந்த நோக்கத்தைக் கொண்டும், அதை அந்நூலாசிரியர் வெளிப்படுத்தும் திறமையைக் கொண்டும் அந்நூலின் சிறப்பு அமைகிறது. அவ்வகையில் “கீழடி தமிழ் இனத்தின் முதல் காலடி” எனும் இந்நூல் நோக்கத்திலும் அதை வெளிப்படுத்தும் திறமையிலும் மிக உயர்வானது.

இந்நூல் தமிழ் இனத்தின் தொன்மையை மிகத் தெளிவாகவும், அழகாகவும் அதே சமயம் எளிமையாகவும் பறை சாற்றுகிறது. ஆகவே தமிழ் அறிந்த மக்கள் அனைவரும் இந்நூலை வரவேற்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர். அது மட்டுமா? மறைந்து கிடக்கும் உண்மை வெளி வருகின்றது என்றால் அதை வரவேற்க உலக மக்கள் அனைவருமே கடமைப்பட்டவர்கள் ஆவர். இந்நூல் மறைந்து கிடக்கும் பல உண்மைகளை வெளிக் கொணர முயலும் கீழடி அகழாய்வு பற்றி முழுவதுமாக விளக்குவதால் உலக மக்கள் அனைவருமே வரவேற்க வேண்டிய ஒரு நூலாகும். ஆகவே வாய்ப்பு கிடைப்பவர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடுவது மனித குலததிற்குச் செய்யும் உண்மையான வரலாற்றுத் தொண்டாக அமையும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 15 October 2018

மொழியாக்கம் எனும் கலை!


siragu translate 2
எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்.
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு
தெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.
புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள்! மொழிப்பெயர்ப்பு என்பது ஒரு கலை என்கிறார் The Art of Translation நூலின் ஆசிரியர் தியோடோர் சேவொரி. தமிழ் மொழியை பொறுத்தவரையில் அது இன்றளவும் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டு வரும் செம்மொழி, சில நூற்றாண்டுகளுக்கு முன் வெறும் பக்தி மொழி என்ற நிலையில் மட்டுமே சுருங்கிவிட்ட அவல நிலையில் இருந்து, மீட்டெடுத்து அறிவியல் கருத்துகள் ஒரு மொழியில் உருவாக்கப்படும்போது தான் மக்களின் மொழியாக மக்களுக்கு தேவையான கருத்துகளை கூறும் மொழியாக நிலைக்கும் என்பதை வலியுறுத்திய இயக்கம் திராவிடர் இயக்கம். மேட்டிமை தமிழறிஞர்களின் வீட்டுப் பரனில் உறங்கிக்கிடந்த திருக்குறளைப் பொதுமறையாக மக்களிடம் தவழ விட்ட தலைவர் தந்தை பெரியார்! அன்று மக்களின் மொழியாக தமிழை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே மொழிபெயர்ப்பினை நாம் பார்க்க வேண்டும். நம் மொழியில் உள்ள இலக்கியங்கள் மட்டுமல்ல பிற மொழிகளின் இலக்கியங்களை மொழிபெயர்த்து மக்களிடம் கொண்டுசேர்க்கின்றபோது, பல மொழி பேசும் மக்களின் அனுபவங்களை நம் மொழியில் படித்து உணர முடிகின்றது. குறிப்பாக மற்ற நாடுகளில் உள்ள விஞ்ஞான கண்டுபிடிப்புகள், அவர்களின் அரசியல் சூழல், அந்த மக்களின் வாழ்வியல் என பலவற்றை படித்தறிந்து ஒப்புநோக்கி அறியும் வாய்ப்பு கிடைக்கின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

பா.ச.க ஆட்சியின் தோல்வியும், தற்போதைய ரபேல் ஊழலும்!


Siragu avasara kaala2
மத்தியில் பா.ச.க-வின், மோடி ஆட்சி வந்ததிலிருந்தே, நாட்டின் வளர்ச்சி படிப்படியாக குறைந்துகொண்டே வந்து, இன்று முழுவதும் தோல்வியை கண்டிருக்கிறது என்பது அனைவராலும்  ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை.  ஊழலை ஒழிக்கப்போகிறோம், கள்ளப்பணத்தை கண்டுபிடிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, மிகப்பெரிய ஊழலை செய்து முடித்தது பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற பெயரில்.! இறுதியில், அதன்முலம் அவர்களால் மீட்கமுடிந்தது சொற்ப அளவே.!
இதனையடுத்து, அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு, ரூ. 73/- என  மிகவும் சரிந்துள்ளது.  மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது அன்றாடம், சாமானிய மக்கள் கழுத்தை நெறிப்பதாக இருக்கிறது. வேலைவாய்ப்பு எடுத்துக்கொண்டோமானால், தேர்தலின்போது சொன்னபடி, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டமாதிரி, பாதியளவு கூட வழங்க முடியவில்லை. படித்த பட்டதாரிகளை, பகோடா வியாபாரம் செய்யுமாறு மோடி அவர்களே ஆலோசனை கூறினார். மேலும், மத்தியப்பிரதேசத்தில்,  பா.ச.க ஆட்சியில் ஏற்பட்ட வியாபம் ஊழல், அதி பயங்கரமானது. மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கையில் மிகப்பெரிய ஊழல். இதில் தொடர்புடையவர்கள், விசாரிக்கப்படுபவர்கள், விசாரிக்க வருபவர்கள் என பலரை மரணமடைய வைத்திருக்கிறது. பலரின் மர்மமான மரணத்திற்கு, இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அடுத்து,  பா.ச.க-வின் இந்த 4 ஆண்டு ஆட்சியில், வாராக்கடன் தள்ளுபடி மட்டும் 7 மடங்கு அதிகரித்திருப்பதாக  ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/

Thursday, 4 October 2018

‘பாரதி’ கவிதை (கவிதை)


siragu bharadhiyar1

பூத்திருக்கும் பூவிற்கும்
உனக்கும்
எத்தனை ஒற்றுமை?
பூவின் வாழ்நாளும்
புவியில் நீ
வாழ்ந்த நாளும்
சிலவே.
தென்றலும் நீயும்
ஒன்றுதான்,
வாடியோர் வாட்டம்
தீர்ப்பதில்,
தீயும் நீயானாய்
சாத்திரம் பேசுவோர்
மூடத்தனம் சாடி,

நதியாய் ஓடி
நாட்டினர்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Wednesday, 3 October 2018

பாச பேதம் (சிறுகதை)


father daughter dispute conflict
மனைவிக்குப் பிடித்திருப்பது கணவனுக்குப் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்று நம் குழந்தைகளிடம் காட்டும் அன்பில் வித்தியாசம் இருக்கக் கூடாது. ஆனால் கணவர் குழந்தைகளிடம் காட்டும் அன்பில் பேதம் இருக்கிறதே” என்று சங்கரி சிந்தித்துக் கொண்டே மருத்துவமனையில் அவள் கணவர் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள். ”நித்யா அப்பாவுக்கு இப்போ எப்படிமா இருக்கு?”
”அப்படியேதான் இருக்குமா. இன்னும் கண்ணைத்திறக்கல”.
அப்போது, “சிற்றம்பலம், சிற்றம்பலம்” என்று உரத்தக்குரலில் கூப்பிட்டுக் கொண்டே மருத்துவர் அறைக்குள் நுழைந்தார்..
”அவர் தூங்குகிறார் போலிருக்கு” என்றாள் சங்கரி.

மருத்துவர் சிற்றம்பலத்தின் மருத்துவ அறிக்கையைப் பார்த்துவிட்டு நகரும்போது, ”இப்போது அவருக்கு எப்படியிருக்கு மருத்துவர். எப்போ குணமாகும்” என்று கேட்டாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 2 October 2018

தமிழாக வாழ்ந்த அண்ணலுக்கு அகவை தொண்ணூறு


siragu thamizhannal 2
சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூர் நெற்குப்பை. ஆனால் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத்தக்கப் பணிகளை ஆற்றிய பல இலக்கியவாணர்களைக் கொண்ட பேரூர் இவ்வூராகும். செட்டிநாடும் செந்தமிழும் என்ற நூலினை எழுதிய சோம.லெ, தினமணியின் ஆசிரியராக விளங்கிய சம்பந்தம் (இராம.திருஞானசம்பந்தம்), முதுபெரும் தமிழறிஞர் தமிழண்ணல், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இயங்கு சக்தியாக விளங்கிய லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் போன்ற பலர் பிறந்த மண் நெற்குப்பையாகும்.
அங்குப் பிறந்த இராம.பெரியகருப்பன் என்ற தமிழண்ணல் தமிழ் ஆய்வுலகிலும், ஒப்பிலக்கியத்துறையிலும், சங்க இலக்கியத் தனித்திறன் ஆய்விலும் சிறந்து விளங்கியவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை அவர் வாழ்ந்த ஆண்டுகளைப் போலவே எண்பத்தெட்டினைத் தொடும்.

தமிழண்ணல் செட்டிநாட்டு வழக்கப்படி இராமசாமிச் செட்டியார் கல்யாணி ஆச்சி ஆகியோருக்குப் பிள்ளையாக வந்தவர். தமிழ் பண்டிதர் பட்டம் பெற்று அதன் பின் பொருளாதாரப் பட்டம் பெற்று அதன்பின் தமிழ் உயர்கல்வி பெற்று முனைவர் பட்டம் பெற்றவர். அடிப்படையில் இருந்து உயர்ந்தவர். காரைக்குடி மீனாட்சி சுந்தரேசர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர் மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக விளங்கி அதன் பின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கி, பின்னாளில் தேசியப் பேராசிரியராக முன்நின்றவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 1 October 2018

புறநானூற்றுப் பாடல்கள் குறித்து உ.வே.சா அவர்களின் கருத்து


siragu u.v.swaminatha iyer2
எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறென்பது எட்டாவதாகும். புறநானூறு என்பது கடவுள்வாழ்த்துச் செய்யுள் முதலிய 400 அகவற்பாக்களை உடையது. பண்டைய காலத்தில் 400 பாடல்களைக் கொண்ட ஒரு தொகை நூலாக இதனைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் யாரென்று அறிய இயலவில்லை.
உ.வே.சாமிநாத ஐயர்:
siragu u.v.swaminatha iyer1

புறநானூற்றுப் பாடல்களின் முதற்பதிப்பு 1894 இல் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களால் அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1923, 1935, 1950, 1956, 1962- ஆண்டுகளிலும் மறுபதிப்புக்களாக மொத்தம் ஆறு பதிப்புகள் அவராலும் அவரது குடும்பத்தாராலும் வெளிவந்துள்ளன. தொடர்ந்து பின்னர் பல பதிப்புகளும் இன்றுவரை வந்துள்ளன. பற்பல ஓலைச் சுவடிகளைப் படித்து, அவற்றைக் கையெழுத்துப் படியாக உருவாக்கி, பாட வேறுபாடுகளைக் கவனத்தில் கொண்டு, அவற்றைப் பல பிரதிகளுடனும் ஒப்பிட்டு சீர்தூக்கிப் பார்த்துச் செப்பனிட்டு, சரியான வரிகளைக் கண்டறிந்து அச்சுப் பதிப்பாக வெளியிட்ட உ.வே.சா அவர்களின் பணியைப் போற்றாத தமிழர் இருக்க வழியில்லை. முதல் மூன்று பதிப்புகள் உ.வே.சா அவர்களாலும், நான்காவது பதிப்பு 1950 அவர் மகனாலும், பின்னர் வெளியான பதிப்பு பேரன் எழுதிய முகவுரையுடனும் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.