Tuesday, 2 April 2019

காவிரிப்படுகையின் மொழி


Siragu tanjaore1
தஞ்சை என்றாலே எப்போதும் புத்துணர்ச்சி வந்துவிடுகிறது. அதற்குக் காரணங்களும்ஏராளம் இருக்கின்றன. சிலர் நினைப்பது போல் இராஜராஜ சோழன், அவருடைய மகன் இராஜேந்திரசோழன், சுங்கம் தவிர்த்த சோழனான குலோத்துங்க சோழன் முதல் பல சோழர்கள் பல்லாண்டுகளாகதங்களது ஆட்சியை நடத்தினார்கள். தமிழர்களின் சிறந்த கட்டடக் கலையான பெரிய கோபுரம் கொண்டபிரகதீஸ்வரர் கோயிலும், புகழ்பெற்று விளங்கி வருகிற அரண்மனையும் அதனுள் மராட்டிய மன்னர் இராஜாசரபோஜியின் காலத்தில் அமைக்கப்பட்ட நூலகமும் ஓவியங்களும் கலைச் சிற்பங்களும், சிவகங்கைப் பூங்காவும் அதனுள் இருக்கும் அகழியும் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அவர்களைக்கண்டு புன்னகை செய்யும் மக்களும் அவர்களின் சிரிப்பும் தன்பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்பதாலும் அத்தகைய புத்துணர்ச்சி வரவே செய்கிறது.


நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக்கவிதையில் தடம்பதித்த ந.பி, கு.பரா-வின் தஞ்சையும், தமிழ் நாவல் வரலாற்றில் தனக்கென தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்ட தி.ஜானகிராமனின் “மோகமுள்” நாவலில் சித்திர எழுத்துக்களால் வரைந்த தஞ்சையும் காவிரியும் அக்கதையில் வரும் பாபுவும் அவனுடைய யமுணாவின் மீதான காதலும் இசையும் தம்புராவும், பாபுவின் மீது காதல் கொள்ளும் தங்கத்தின் அன்பும் ஒருசேர இழைந்து கொண்டே இருக்கிறதோ என்ற பிம்பம். “மீனின் சிறகுகள்”, “கரமுண்டார் வீடு” போன்ற நூல்களையும் எழுதி வாழ்ந்த தஞ்சை பிரகாஷின் இயல்பான தஞ்சை. இவையெல்லாம் இலக்கியத்தில் ஒன்று.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 1 April 2019

நாசாவின் பெண்கம்ப்யூட்டர் காத்தரைன் ஜான்சன்


Siragu katherine2
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான உலகப் புகழ்பெற்ற நாசா நிறுவனம் சமீபத்தில் தனது நிறுவனத்தின் பகுதி ஒன்றுக்கு புதிய பெயரைச் சூட்டியது. நூறுவயதான ‘காத்தரைன் ஜான்சன்’ என்ற கறுப்பின விஞ்ஞானியை கௌரவிக்கும் பொருட்டு இந்த மாற்றம் முன்னெடுக்கப்பட்டது.
காத்தரைன் கணிதத்தில் வல்லவர். அமெரிக்கா முதன்முதல் விண்வெளி ஆய்வுக்கு அனுப்பிய ராக்கெட்டின் பாதையைக் கணக்கிடுவதில் பெரும்பங்காற்றியவர். அதன் பிறகு பல அப்பல்லோ ராக்கெட் பயணங்களிலும் இவரின் கணித உதவி அமெரிக்க விண்வெளி வீரர்களுக்கு உதவியது. அவர்கள் வெற்றியுடன் புவிக்குத் திரும்ப பயணப்பாதையை வகுத்தவர் காத்தரைன். சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் நிலவில் காலடி வைக்க வகுத்த பயணத்தின் பாதையை கணக்கிடுவதிலும் இவர் உதவி செய்துள்ளார். முப்பத்தைந்து ஆண்டுகள் இவர் நாசாவின் கணிதத்துறை விஞ்ஞானியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது பணியைப் பாராட்டி, 2015 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடிமக்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான ‘மெடல் ஆஃப் ஃப்ரீடம்” என்ற விருதை அதிபர் ஒபாமா அளித்து இவரை சிறப்பித்தார்.

‘ஹிடன் ஃபிகர்ஸ்’ என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு ஒரு நூலாகவும், திரைப்படமாகவும் 2016ம் ஆண்டு வெளிவந்தது. இவர் நாசாவில் பணிபுரியத் துவங்கிய காலம் 1950களில். அக்காலத்தில் அமெரிக்காவில் நிறவெறியும் இனவெறியும் கறுப்பர்களை ஒடுக்கி இருந்தது. அறிவியல் கல்வி, உயர்கல்வி, அவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற பணிகளும் பெண்களுக்குக் கிடைக்காது. தவறி வேலையே கிடைத்தாலும் அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியமும் வழங்கப்பட்டதில்லை. அறிவியல் துறையில் உள்ள பணிகளில் பெண்கள் வரவேற்கப்பட்டதுமில்லை. இந்த சூழ்நிலையில் நிறபேதம், பாலின பேதம் என இருவகையிலும் பாதிக்கப்பட்டிருந்தனர் அமெரிக்காவின் கறுப்பினப் பெண்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மலர்கள்


siragu malargal1
மலர்கள் என்றாலே மங்கையர் சூடுவதும், மணம் தருவதும் மட்டுமல்ல. அதில் பல்வேறு குணங்கள், தன்மைகள் பொதிந்துள்ளன என்று சங்க இலக்கியங்களில் தங்கள் பாடல் வரிகளில் பதிவு செய்துள்ளனர் பண்டைத் தமிழ் புலவர்கள். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த அவர்கள் தங்கள காலத்தில் நிலவிய காலச்சூழல்களையும் இயற்கை தன்மையையும் குறிப்பிட்டுள்ளனர். அவ்வகையில் சங்க இலக்கியங்களில் குறிப்பாக நற்றிணையில் காணலாகும் மலர்கள் குறித்து இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
மலர்கள் என்பது செடி, மரம், கொடி ஆகிய தாவர வகையின் உறுப்பாகும். ஒவ்வொரு தாவரத்திலும் பல்வேறு வண்ணங்களில் காணப்படும். மலருக்கு ஏழுவகை பருவங்கள் உண்டு. அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் ஆகும். மலர்கள் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்பு. மலர்கள் மனித வாழ்க்கையில் எல்லா நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சுப நிகழ்வு முதல் துக்க நிகழ்வு வரை முதல் இடம் பெறுவது மலர்கள்.
தமிழர்களின் சிறப்பாக ஒழுக்கத்தை கூறுவர். அவ்வொழுக்கம் அகவொழுக்கம், புறவொழுக்கம் என இரண்டாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது. இவ்விரு ஒழுக்கங்களின் இன்றியமையா கூறாக மலர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைவன் தலைவி இருவரிடை முகிழ்க்கும் உறவையும் மேற்கொள்ளும் இல்வாழ்க்கையையும் பிறர்க்கு அறிவிக்கவொண்ணாப் பேரின்பத்தை அகம் என்பர். அந்த அகத்திணையை அன்பின் ஐந்திணையாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற திணைகளின் பெயர்களிலே பூக்களும் உள்ளன. அதனால்தான் சங்க கால புலவர்கள் கருப்பொருள்களில் ஒன்றாக மலரையும் சேர்த்துள்ளனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 29 March 2019

சாதியில்லாச் சான்றிதழ்


siragu saadhiyillaa1
திருமதி சிநேகா சாதியில்லாச் சான்றிதழைப் பெறுகிறார்
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர் திருமதி எம்.ஏ.சிநேகா. இவருடைய பெற்றோர்கள் சாதி மத நம்பிக்கைகளைக் கடந்த மனிதநேயச் சிந்தனையாளர்கள். இவரும் பெற்றோர்கள் வழியில் சாதி மத நம்பிக்கைகள் இல்லாமல் வளர்ந்து, சட்டப்படிப்பை முடித்து, வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். இவருடைய கணவரும், தமிழ்ப் பேராசிரியருமான திரு பார்த்திபராசாவும், சாதி மத நம்பிக்கைகளைத் துறந்தவரே.
திருமதி சிநேகா 2010-ஆம்ஆண்டு முதல், தான் எந்த சாதியையும் மதத்தையும் சாராதவர் என்று சான்றிதழ் வழங்கும்படி கேட்டுப் போராடினார்.

இதற்கு முன் இதுபோன்ற சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறி அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 2017-ஆம்ஆண்டு முதல் அவர் ஒவ்வொரு அதிகாரியையும் நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததன் பயனாக 5.2.2019 அன்று அவருக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்வாறு ஒரு சான்றிதழ் பெற்றதன் மூலம் சமூக முன்னேற்றத்தில் ஒரு படி ஏறி உள்ளதாக அவர் 13.2.2019 அன்று கூறினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 26 March 2019

வாக்களித்தல் நம் சனநாயக கடமை !


Siragu By-election-in-RK-Nagar
2019 – ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலும், தமிழகத்திற்கான 18 தொகுதிகளின் இடைத்தேர்தலும் ஒருசேர அடுத்த இரு மாதங்களில் அதாவது, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறயிருக்கின்றன. இது நமக்குக் கிடைத்திருக்கும் பொன்னானதொரு வாய்ப்பு. இதனை நாம் நல்லமுறையில், பயன்படுத்திக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தற்போதைய இந்திய அரசியல் சூழலில், தமிழ்நாடு அரசியல் சூழலில், மக்கள் வாக்களிக்கும் இந்த தேர்தல் தருணம் மிகவும் முக்கியமானது. இதனை மக்கள் மிகவும் கவனமாக சிந்தித்து, செயல்படுத்தவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். வருங்காலத்தில் தங்கள் சந்ததியினர் எதிர்கொள்ளும் வாழ்க்கை முறையை தீர்மானிக்கும் கட்டத்தில் இருக்கிறார்கள். இதை உணர்ந்து மக்கள் யாரை வெற்றிபெற செய்ய வேண்டும், யாரை படுதோல்வியடைய வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்க வேண்டும். எந்தக்கட்சி வெற்றிபெறுகிறது என்பதைவிட, எந்தக்கட்சி வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதில் ஒரு தெளிவு இருக்கவேண்டும். மத்தியில் பா.ச.க-வும், மாநிலத்தில் அதனுடன் கூட்டணி வைத்திருக்கும், அதிமுகவும் அதன் கூட்டணிக்கட்சிகளும் படுதோல்வியை காணவேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
ஏன் பா.ச.க மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது..?
பா.ச.க வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதற்கான காரணங்கள் மட்டுமே அதிகளவில் நம் முன்னே இருக்கின்றன!

முதலில் மனிதகுலம் காப்பற்றப்பட வேண்டும். பசுமாட்டிற்கு கொடுக்கப்படும் மரியாதை மனிதனுக்கு இங்கு கொடுக்கப்படவில்லை என்பது மிகப்பெரிய அவலநிலை. கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக சாதிரீதியாகவும், கடந்த சில நூற்றாண்டுகளாக மத ரீதியாகவும், நம்மை பிரித்தாளும் வேலையை செய்துமுடித்த ஆரியம், அடுத்தகட்ட நடவடிக்கையான, தங்களின் மனுதர்ம ஆட்சியை நிறுவுவதற்கு துடித்துக்கொண்டிருந்தது. அதனை கடந்த 5 ஆண்டுகளில் பாதிக்கு மேல் அதனை செய்தும் விட்டது. மீண்டும் ஒருமுறை ஆட்சி, அதிகாரம் கிடைத்துவிட்டால், முழுவதையும் செய்துவிடும் என்பது மட்டும் உறுதி!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 22 March 2019

ஊருணி நீர் நிறைந்தற்றே… (சிறுகதை)


siragu ooruni neer1
ஒரு ஊரில் இரண்டு செல்வந்தர்கள் இருந்தார்கள். இருவரும் நறுமணப்பொருட்கள் வாசனைத் திரவியங்கள் முதலானவற்றை ஏற்றுமதி செய்து பெருஞ்செல்வம் ஈட்டிவந்தார்கள். இருந்தாலும் முதலாவது செல்வந்தரைக் காட்டிலும், இரண்டாவது செல்வந்தருக்கே ஊர் மக்களிடம் மதிப்பு, மரியாதை இருந்தது. இது குறித்து முதலாவது செல்வந்தர் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தார்.

நாட்கள் நகர்ந்தன. இரண்டாவது செல்வந்தரை சிறந்த சமூக செல்வாக்கு உள்ளவராக அரசன் தேர்வு செய்தான். அதற்கான விருது வழங்கும் விழாவில் முதலாவது செல்வந்தரும் கலந்துகொண்டார். விழாவில் இரண்டாவது செல்வந்தரிடம் மன்னர் காட்டிய பரிவும் அன்பும் முதலாவது செல்வந்தர் மனத்தில் பொறாமையை உண்டு செய்தது. இருவருமே ஏற்றுமதி வணிகத்திற்காக அரசுக்கு வரி செலுத்துகிறார்கள். சொல்லப்போனால் முதலாவது செல்வந்தரே இரண்டாமவரைக் காட்டிலும் கூடுதல்வரி செலுத்துகிறார். அரசுக்குக் கூடுதல் வருவாயை ஈட்டித்தரும் தன்னைக் காட்டிலும் அவர் எந்த விதத்தில் உயர்ந்தவர் என்ற எண்ணம் முதலாவது செல்வந்தருக்கு வந்தது.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 21 March 2019

தந்தை பெரியார் பார்வையில் கற்பு !!


siragu karpu2
கற்பெனப்படுவது யாது எனின் அது சொற்றிறம்பாமை !! அதவாது சொல் தவறாமை. இன்னும் விளக்கி சொல்ல வேண்டும் என்றால் நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திற்கு விரோதமில்லாமல் இருப்பது என்ற கருத்துகள் கொண்டதாக இருக்கின்றது என்கிறார் பெரியார். கற்பு என்பதை பகுபதமாக்கி பார்க்கின்றபோது கல் -கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்பட்டு வருகின்றது. இந்த இடத்தில் அந்த சொல்லை பகாப்பதமாக (பிரித்தால் பொருள் தராதது) மகளிர் நிறை என்று காணப்படுகின்றது. இந்த இடத்தில் மகளிர் என்பது பெண்களையே குறிக்கும் பதமாக எப்படி ஏற்பட்டது என்று விளங்கவில்லை என்கிறார். கற்பு என்பதற்கு அழிவில்லாதது, உறுதியுடையது என்கின்ற பொருள்கள் உண்டு. அழிவில்லாதது என்கின்ற சொல்லுக்கு, உண்மையான கருத்துப் பார்க்கும்போது, சுத்தமான அதாவது கெடாதது, மாசற்றது என்பதாகத்தான் கொள்ளலாம். இந்த சுத்தம் என்ற சொல்லும் ஆங்கிலத்தில் கெடாதது என்கின்ற கருத்தில்தான் காணப்படுகின்றது. அதாவது chastity என்கிற ஆங்கில சொல்லுக்கு virginity என்பதே பொருள். அதை அந்தப் பொருளின்படி பார்த்தால் இது ஆணுக்கென்றோ அல்லது பெண்ணுக்கென்றோ சொல்லாமல் பொதுவாக மனித சமூகத்திற்கே – எவ்வித ஆண், பெண் புணர்ச்சி சம்மந்தமே சிறிதும் இல்லாத பரிசுத்த தன்மைக்கே உபயோகப்படுத்தி இருப்பதை காணலாம். ஆகவே கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரமானது அல்ல, குறிப்பாக ஆணோ, பெண்ணோ ஒரு தடவை கலந்த பின்பு எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் கற்பு போய்விடுகிறது என்கின்ற கருத்தை கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.