Monday, 15 April 2019

பெத்தவன் -நூலும் வாசிப்பும்


siragu peththavan1
தலித்தியம் பற்றிய புரிதல் ஏற்படுவது எப்போது?
நெடுங்காலமாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் தங்ளுடைய மேடைகளில் பேசிவருகிற சமூக நீதி, சமூக சமத்துவம், சமூகத்தில் புரையோடியுள்ள சாதியத்தின் தன்மையானது பெரியாரின் காலத்திற்குப் பின்னும் தற்போது மாறிவரும் அரசியல் சூழலில் எத்தகைய நிலையில் உள்ளன என்பதை ஆழ அழுத்தமாக எவ்விதக் கறார் தன்மையிலிருந்தும் விலகிவிடாது, விமர்சனம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஏன்? என்ற தேவைக்கான அளவீடுகளாக நாம் எவற்றையெல்லாம் கணக்கில் எடுக்க வேண்டும் என்றுகூட சில திராவிட ஆய்வாளர்கள் ஆய்ந்து வருகின்றனர். அல்லது திராவிடத்தின் கொள்கைகள் பரிதாப நிலையில் உள்ளனவா? அல்லது நாம் அவற்றை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய கட்டத்தின் பேரில் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதையாவது நாம் இப்போதாவது உணர்ந்து கொள்ளமறுக்கக் கூடாது.

தலித்திய இலக்கியங்கள் திராவிடக் கூறுகளுக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஒருவாறு மகிழ்ந்து வரவேற்கிறோமா என்பதை வாசகர்களிடத்தில் எழுப்ப வேண்டிய கேள்வி. அல்லது தமிழ் இலக்கியங்களில் எழுந்துள்ள பல இசங்கள் தமிழின் சமூகக் கட்டமைப்பிற்கு துணை செய்கின்றனவா என்பதை தீவிரமாக விவாதம் செய்யவேண்டும். சிலர் அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றும் செய்கின்றனர். என்றாலும் தற்காலத்தில் தீவிரமடைந்து விட்ட தலித்திய படைப்புகளை சேர்ப்பதிலும் எங்கோ ஒரு மூலையில் ஏற்பட்டுள்ள சுணக்கம் தான் என்ன என்பதையாவது நாம் விவாதிக்கத் தவறிவிடக் கூடாது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 12 April 2019

இந்திய பாராளுமன்றம் – 2019


siragu election-commission3
இன்றைய கமல்ஹாசன், நேற்றைய விஜயகாந்த் என போட்டி போட, தேசிய கட்சிகள் மாநில கட்சிகளுடன் கூட்டணியமைக்க, மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை நெருங்குகிறது. ஏழு தேசிய கட்சிகள் உட்பட மொத்தம் 2000 கட்சிகள் போட்டியிடுகின்றன. 90 கோடி வாக்காளர்களைக் கொண்ட உலகின் மாபெரும் சனநாயகத்தின் 543 தொகுதிகளுக்கு சுமார் 8000 வேட்பாளர்கள் களமிறங்குகிறார். இதில் 272 என்ற மாயாஜால எண்ணை அடையும் கட்சிக்கே அடுத்த ஐந்து ஆண்டுகள் பாரத துணைக்கண்டத்தை கட்டியாளும் அரிய வாய்ப்பு வழங்கப்படும்.

இதில் எந்த ஒரு தனிக் கட்சியும் அறுதிப்  பெரும்பான்மை பெறுவதாகத் தெரியவில்லை. எனவே, மீண்டும் ஒரு கூட்டாட்சியயை நோக்கியே 2019 தேர்தல் செல்வது உறுதியாகிறது. குறைந்தபட்ச அரசாங்கத்தில் சில குழப்பங்கள் இருந்தாலும் அதில் பல நன்மைகளும் இருக்கின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 11 April 2019

தேர்தல் ஆணையம் நேர்மையுடன் செயல்படட்டும்!


siragu election-commission1
உலகிலேயே மக்கள்தொகையின் அடிப்படையில், மிகப்பெரிய சனநாயக நாடு, நம்முடைய நாடு இந்தியா என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ளல் வேண்டும். இந்த 2019 – ஆம் ஆண்டு, 17 – வது மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறப்போகிறது. அத்தகைய சிறப்புமிக்க இத்தேர்தலை நாம் பெருமையுடன் சந்திக்க இருக்கிறோம். இந்தியா விடுதலைப்பெற்று முதல் தேர்தலின் போது, உலகத்தின் பார்வை நம்மீது பரவலாகக் காணப்பட்டது. அப்போதே, எவ்வித கட்டமைப்பும் இன்றி, ஊடக வசதிகளின்றி நாம் வெற்றிகரமாக தேர்தலை நடத்தி, மக்களவை உருவாக்கி மிகச்சிறந்த சனநாயக நாடு என்பதை மெய்ப்பித்திருக்கிறோம். இதற்காக நாம் ஒவ்வொருவரும் இந்தியன் என்ற வகையில் பெருமைகொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

நடந்து முடிந்திருக்கும் 16 மக்களவைத் தேர்தல்களும், சில குறைகள் இருந்தாலும், பல நிறைகளோடு மிக நன்றாகவே நடந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இம்முறை 2019 மக்களவைத் தேர்தல், மக்களின் மனதில், சிறிது ஐயத்தை கொடுத்திருக்கிறது என்பது வருந்தத்தக்க உண்மை. ஏனென்றால், இந்திய தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பு. இதில் மத்திய அரசோ, மாநில அரசுகளோ எந்த விதத்திலும் குறுக்கீடு செய்ய முடியாது என்பது தான் அதனுடைய முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பாகும். ஆனால் 2014 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, பா.ச.க மோடியின் ஆட்சியில், பல குற்றசாட்டுகள் எழுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில், பல குற்றசாட்டுகள் வைக்கப்பட்டன. பணப்பட்டுவாடா நடக்கிறது என்று தேர்தல் தேதியையே தள்ளிவைக்கக் கூடியளவிற்கு புகார்கள் குவிந்தன. வருமானவரி சோதனைகள், அ.தி.மு.க அமைச்சர் வீட்டிலேயே நடந்தது. இன்னும் பல இடங்களில் சோதனைகள் நடந்தன. மூன்று கண்டெய்னர் லாரிகளில் 560 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அது யாருடைய பணம் என்றே தெரியாத நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு பாரத வங்கி தங்களுடையது என்று கூறியது. அ.தி.மு.க அமைச்சர்களின், எம்.எல்.ஏ-க்களின் வீடுகளிலும், அவர்களின் பினாமி வீடுகளிலும் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது. இருப்பினும் அவைகள் பற்றி எந்த தகவலும் அதன்பிறகு வரவில்லை. விசாரிக்கப்படவுமில்லை. அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகவும் தெரியவில்லை!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.


Wednesday, 3 April 2019

மார்த்தா (சிறுகதை)


siragu maarththaa1
சாலையோரம் படுத்துறங்கிய மார்த்தா இடுப்பின் பின் எலும்பில் ஊசிக்குத்துவது போன்ற வலியால் துடித்தெழுந்தாள். கிழக்கே உள்ள மணிக்கூண்டில் மணி 6-ஐ தொட்டுக்கொண்டிருந்தது. டிசம்பர் மாத குளிர், வரலாறு காணாத அளவு சிகாகோவை வாட்டிக்கொண்டிருந்தது. குளிரில் நடுங்கியபடி கால்களை இறுக்கக் கட்டிக்கொண்டு முட்டியில் முகம் புதைத்துப் படுத்துக்கொண்டாள். மீண்டும் இடுப்பெலும்பை உருவி வெளி எடுப்பது போன்ற வலி. தன் பையை அருகிழுத்து தேடிப்பார்த்தாள். அவள் தேடியது அகப்படவில்லை. என்ன செய்வது? என்று யோசித்துக்கொண்டே சாலைகளில் வேகமாக சீறிப்பாயும் மகிழுந்துகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மார்த்தாவிற்கு வயது 20. மார்த்தாவின் அம்மா குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு மனநிலை பிறழ்ந்து அரசு நடத்தும் விடுதியில் இருக்கிறார். தன் 17 வயதில் அம்மா மனநல காப்பகத்தில், அப்பா வேறு ஒரு துணையுடன் வாழ்க்கை என சென்றுவிட, வீட்டிற்கு வாடகை கட்ட பணமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறினாள் மார்த்தா. இந்த மூன்று ஆண்டுகளில் தெருவோரமே அவள் வீடானது. மகிழுந்துகள் சமிக்ஞைகிற்கு நிற்கும் போது, ஒவ்வொரு மகிழுந்துவின் கதவருகில் நிற்பாள். யாரவது பணம் தந்தால் starbucks சென்று காலை காபி குடிப்பாள். மதியம் ஏதாவது ஒரு சிறு உணவு விடுதியில், இருக்கும் பணத்தில் ஒரு சிறு ரொட்டித் துண்டை வாங்கிக்கொள்வாள். அதுவே அவளுக்கு பல நேரங்களில் நாள் முழுவதற்குமான உணவு. ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் community hall இல் இலவசமாக பலர் சேர்ந்து சமைத்து வழங்கும் உணவை வாங்கிக்கொண்டு வருவாள். அதை பத்திரப்படுத்தி செவ்வாய்க்கிழமை வரை கூட வைத்துக்கொள்வாள். சில நேரங்களில் எங்காவது வேலைக்குச் செல்வாள்; ஆனால், அங்கு யாரேனும் அவளிடம் வரம்பு மீறி நடந்தால் அவளுக்கு பிடிப்பதில்லை, அதனால் வேலையும் நிலைப்பதில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 2 April 2019

காவிரிப்படுகையின் மொழி


Siragu tanjaore1
தஞ்சை என்றாலே எப்போதும் புத்துணர்ச்சி வந்துவிடுகிறது. அதற்குக் காரணங்களும்ஏராளம் இருக்கின்றன. சிலர் நினைப்பது போல் இராஜராஜ சோழன், அவருடைய மகன் இராஜேந்திரசோழன், சுங்கம் தவிர்த்த சோழனான குலோத்துங்க சோழன் முதல் பல சோழர்கள் பல்லாண்டுகளாகதங்களது ஆட்சியை நடத்தினார்கள். தமிழர்களின் சிறந்த கட்டடக் கலையான பெரிய கோபுரம் கொண்டபிரகதீஸ்வரர் கோயிலும், புகழ்பெற்று விளங்கி வருகிற அரண்மனையும் அதனுள் மராட்டிய மன்னர் இராஜாசரபோஜியின் காலத்தில் அமைக்கப்பட்ட நூலகமும் ஓவியங்களும் கலைச் சிற்பங்களும், சிவகங்கைப் பூங்காவும் அதனுள் இருக்கும் அகழியும் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அவர்களைக்கண்டு புன்னகை செய்யும் மக்களும் அவர்களின் சிரிப்பும் தன்பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது என்பதாலும் அத்தகைய புத்துணர்ச்சி வரவே செய்கிறது.


நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக்கவிதையில் தடம்பதித்த ந.பி, கு.பரா-வின் தஞ்சையும், தமிழ் நாவல் வரலாற்றில் தனக்கென தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்ட தி.ஜானகிராமனின் “மோகமுள்” நாவலில் சித்திர எழுத்துக்களால் வரைந்த தஞ்சையும் காவிரியும் அக்கதையில் வரும் பாபுவும் அவனுடைய யமுணாவின் மீதான காதலும் இசையும் தம்புராவும், பாபுவின் மீது காதல் கொள்ளும் தங்கத்தின் அன்பும் ஒருசேர இழைந்து கொண்டே இருக்கிறதோ என்ற பிம்பம். “மீனின் சிறகுகள்”, “கரமுண்டார் வீடு” போன்ற நூல்களையும் எழுதி வாழ்ந்த தஞ்சை பிரகாஷின் இயல்பான தஞ்சை. இவையெல்லாம் இலக்கியத்தில் ஒன்று.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 1 April 2019

நாசாவின் பெண்கம்ப்யூட்டர் காத்தரைன் ஜான்சன்


Siragu katherine2
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான உலகப் புகழ்பெற்ற நாசா நிறுவனம் சமீபத்தில் தனது நிறுவனத்தின் பகுதி ஒன்றுக்கு புதிய பெயரைச் சூட்டியது. நூறுவயதான ‘காத்தரைன் ஜான்சன்’ என்ற கறுப்பின விஞ்ஞானியை கௌரவிக்கும் பொருட்டு இந்த மாற்றம் முன்னெடுக்கப்பட்டது.
காத்தரைன் கணிதத்தில் வல்லவர். அமெரிக்கா முதன்முதல் விண்வெளி ஆய்வுக்கு அனுப்பிய ராக்கெட்டின் பாதையைக் கணக்கிடுவதில் பெரும்பங்காற்றியவர். அதன் பிறகு பல அப்பல்லோ ராக்கெட் பயணங்களிலும் இவரின் கணித உதவி அமெரிக்க விண்வெளி வீரர்களுக்கு உதவியது. அவர்கள் வெற்றியுடன் புவிக்குத் திரும்ப பயணப்பாதையை வகுத்தவர் காத்தரைன். சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் நிலவில் காலடி வைக்க வகுத்த பயணத்தின் பாதையை கணக்கிடுவதிலும் இவர் உதவி செய்துள்ளார். முப்பத்தைந்து ஆண்டுகள் இவர் நாசாவின் கணிதத்துறை விஞ்ஞானியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவரது பணியைப் பாராட்டி, 2015 ஆம் ஆண்டில் அமெரிக்கக் குடிமக்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான ‘மெடல் ஆஃப் ஃப்ரீடம்” என்ற விருதை அதிபர் ஒபாமா அளித்து இவரை சிறப்பித்தார்.

‘ஹிடன் ஃபிகர்ஸ்’ என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு ஒரு நூலாகவும், திரைப்படமாகவும் 2016ம் ஆண்டு வெளிவந்தது. இவர் நாசாவில் பணிபுரியத் துவங்கிய காலம் 1950களில். அக்காலத்தில் அமெரிக்காவில் நிறவெறியும் இனவெறியும் கறுப்பர்களை ஒடுக்கி இருந்தது. அறிவியல் கல்வி, உயர்கல்வி, அவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற பணிகளும் பெண்களுக்குக் கிடைக்காது. தவறி வேலையே கிடைத்தாலும் அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியமும் வழங்கப்பட்டதில்லை. அறிவியல் துறையில் உள்ள பணிகளில் பெண்கள் வரவேற்கப்பட்டதுமில்லை. இந்த சூழ்நிலையில் நிறபேதம், பாலின பேதம் என இருவகையிலும் பாதிக்கப்பட்டிருந்தனர் அமெரிக்காவின் கறுப்பினப் பெண்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மலர்கள்


siragu malargal1
மலர்கள் என்றாலே மங்கையர் சூடுவதும், மணம் தருவதும் மட்டுமல்ல. அதில் பல்வேறு குணங்கள், தன்மைகள் பொதிந்துள்ளன என்று சங்க இலக்கியங்களில் தங்கள் பாடல் வரிகளில் பதிவு செய்துள்ளனர் பண்டைத் தமிழ் புலவர்கள். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த அவர்கள் தங்கள காலத்தில் நிலவிய காலச்சூழல்களையும் இயற்கை தன்மையையும் குறிப்பிட்டுள்ளனர். அவ்வகையில் சங்க இலக்கியங்களில் குறிப்பாக நற்றிணையில் காணலாகும் மலர்கள் குறித்து இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
மலர்கள் என்பது செடி, மரம், கொடி ஆகிய தாவர வகையின் உறுப்பாகும். ஒவ்வொரு தாவரத்திலும் பல்வேறு வண்ணங்களில் காணப்படும். மலருக்கு ஏழுவகை பருவங்கள் உண்டு. அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் ஆகும். மலர்கள் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்பு. மலர்கள் மனித வாழ்க்கையில் எல்லா நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சுப நிகழ்வு முதல் துக்க நிகழ்வு வரை முதல் இடம் பெறுவது மலர்கள்.
தமிழர்களின் சிறப்பாக ஒழுக்கத்தை கூறுவர். அவ்வொழுக்கம் அகவொழுக்கம், புறவொழுக்கம் என இரண்டாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது. இவ்விரு ஒழுக்கங்களின் இன்றியமையா கூறாக மலர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைவன் தலைவி இருவரிடை முகிழ்க்கும் உறவையும் மேற்கொள்ளும் இல்வாழ்க்கையையும் பிறர்க்கு அறிவிக்கவொண்ணாப் பேரின்பத்தை அகம் என்பர். அந்த அகத்திணையை அன்பின் ஐந்திணையாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற திணைகளின் பெயர்களிலே பூக்களும் உள்ளன. அதனால்தான் சங்க கால புலவர்கள் கருப்பொருள்களில் ஒன்றாக மலரையும் சேர்த்துள்ளனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.