Wednesday, 14 August 2019

இந்திய செய்தி நிறுவனங்களின் சாதீய முகம்


siragu saadhi1
மக்களாட்சியின் அடிப்படை அதன் பன்முகத்தன்மை கொண்ட மக்களின் உரிமைகளின் மேல் கட்டமைக்கப்படுகிறது. அதனால் மக்கட்தொகையின் உண்மையான பிரதிநிதியாக இருக்க வேண்டியது மக்களாட்சி முறையைப் பின்பற்றும் அரசு ஒன்றின் கடமையாகிறது. பன்முகத்தன்மை கொண்ட மக்களின் விகிதாச்சாரம் மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்படுபவரிடம் இல்லாத பொழுது அதை நீக்க நடவடிக்கை எடுக்க அரசு முயல வேண்டும். சிறுபான்மையினர், விளிம்புநிலை மக்கள், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் எனப் பாலின, வர்க்க, வயது, சமயம், இனம், நிற எந்த வேறுபாடாக இருப்பினும் அவர்களது பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் பொழுது அவர்கள் உரிமையைத் தேவையை அரசுக்குத் தெரிவிக்கும் வாய்ப்பும் இல்லாது போகும். அந்த நிலை வாய்ப்பிழந்தவர்களின் முன்னேற்றத்தையும் பெரிதும் பாதிக்கும். மக்களாட்சியின் அரசுத்துறை, நீதித்துறை, சட்டமன்றம் போன்றவற்றில் இன்றுவரை தலித் மற்றும் பழங்குடியினர் தேவையை உரைக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறது. மக்களாட்சியின் நான்காவது தூண் எனப்படும் ஊடகத்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதைத்தான் ஒரு புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.
ஊடகத்துறையில் நாட்டு மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தாலே அது மக்களாட்சிக்குச் சரியான தகவலைத் தந்து கடமையாற்ற முடியும். ஆனால் … பன்னாட்டு ‘சிவில் சொசைட்டி நிறுவனமான’ ஆக்ஸ்ஃபாம் இந்தியாவும் வலைத்தளத்தில் இயங்கி வரும் செய்தி நிறுவனமான நியூஸ் லாண்டரியும் இணைந்து ஆகஸ்ட் 2 ஆம் நாளன்று புது டெல்லியில் நடந்த மீடியா ரம்பிள் (Media Rumble) என்ற ஊடகச் சூழல் பற்றிய கருத்தரங்கில் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று இந்திய ஊடகங்களில் ஒடுக்கப்பட்ட செய்தியாளர்களின் பிரதிநிதித்துவம் என்ன என்பதை விவரிக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 13 August 2019

பிரிவு 370 நீக்கியது சரியா?


siragu-pirivu-370-2
அண்மையில் நரேந்திர மோடி அரசு பிரிவு 370 ஐ நீக்கி ஜம்மு & காஷ்மீர் மாநில உரிமையை தடை செய்து அதனை யூனியன் டெரிட்ரீயாக அறிவித்து உள்ளது. யூனியன் டெரிட்ரீகளை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கும் நேரத்தில் ஒரு மாநிலத்தின் உரிமைகளை நடுவண் அரசு பறித்திருப்பது மக்களாட்சியின் தோல்வி.
அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் பிரிவு 370 ஐ பற்றி நிறைய விவாதங்கள் நடைபெற்றன. அன்று அதிகாரத்தில் இருந்த காங்கிரசு கட்சிக்கு தனி அந்தஸ்த்து தரும் பிரிவு 370 இல் விருப்பம் இல்லை என்ற போதும், பாகிஸ்தானின் தலையீடு காரணமாகவும், ஐ.நா வின் தலையீடு காரணமாகவும் அப்போதைய பிரதமர் நேரு இதற்கு ஒத்துக்கொண்டார். மேலும் இந்தியாவோடு ஜம்மு & காஷ்மீர் இணைக்கப்பட வேண்டும் என்பதை மகாராஜா ஹரி சிங் தான் கையெழுத்திட்டார், அவருக்கு மக்களின் ஆதரவு இல்லாத நிலையில் சிறப்பு அதிகாரம் கொண்ட மாநிலமாக ஜம்மு & காஷ்மீரை இந்தியா அங்கீகரித்தது.

ஆர்.எஸ்.எஸ் காந்தியின் கொலையில் தொடர்பிருந்த காரணத்தினால் மறைமுகமாக இயங்கிக் கொண்டு இருந்தது. அதனால் ஆர்.எஸ்.எஸ் இந்து மகா சபையின் மூலமாக எதிர்ப்பை பதிவு செய்தது என்ற போதும் அவர்களால் தடுக்க முடியவில்லை. அன்று செய்ய முடியாத அநீதியை முழு பலத்துடன் ஆட்சிக்கு வந்துவிட்டதால் இன்று செய்ய துணிகின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 8 August 2019

தொகுப்பு கவிதை (ஊசி போட்டுக்கோ அம்மு, எனது நண்பன் ஒரு பத்ரிகைக்காரன்)

ஊசி போட்டுக்கோ அம்மு


                                                -இல.பிரகாசம்
siragu oosi pottukko1
ஊசியை போட்டுக் கொள்
வேண்டாம்.
போட்டுக் கொண்டால் தான் சரியாகும்.
வலிக்குமே.
வலிக்காது அம்மு நான் இருக்கிறேன்
வேண்டாம்.
நான் போட்டுக் கொள்ளட்டுமா?
வேண்டாம். உனக்கு வலிக்கும்ல

முதலில் நான் போட்டுக் கொள்கிறேன் அப்புறம் நீ

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 7 August 2019

மக்கள் தகவல் தொடர்பியல்

 மனிதன் சமுதாயமாக வாழ முற்பட்டபோது முதல் தகவல் தொடர்பு முறை அமைந்திருக்க வேண்டும். மொழி தோன்றுவதற்கு முன்பே தகவல் தொடர்பு சைகைகளால் அமைந்திருக்க முடியும். இவ்வகையில் தற்காலத்தில் பெருவளர்ச்சி பெற்றுள்ள மக்கள் தகவல் தொடர்பியல் துறை செம்மொழி இலக்கிய காலத்தில் ஓரளவிற்கு அச்சமுதாய தேவைக்கு ஏற்ப அமைந்திருந்தது. அரசன், அவனுக்குக் கீழ் அமைச்சர்கள், ஐம்பெருங்குழு, எண்பேராயம், வரி வசூல் செய்பவர்கள் என்று அரச சுற்றம் செம்மொழி காலத்தில் இருந்தது. இந்தச் சுற்றம் எடுக்கும் முடிவுகள், கட்டளைகள் மக்களுக்கு அறிவிக்கப்பெற்றன. அவை நடைமுறைக்கு வந்தன.
siragu thagaval thodarbu
சங்க காலத்தில் முரசு அறைந்து செய்தி அறிவிக்கும் நடைமுறை இருந்துள்ளது. இது தவிர பறை முழக்குதல், முழவு கொட்டுதல், மணி அடித்தல் போன்ற செயல்பாடுகள் வழியாக மக்கள் அதிகாரக் குழுக்களுடன் இணைவு பெற்றனர். இவ்வடிப்படையில் சங்ககாலத்திலேயே தமிழர்கள் மக்கள் தகவல் தொடர்பியல் கூறுகளைச் சிந்தனைகளைப் பெற்றிருந்தனர் என்பது தெரியவருகிறது.

மக்கள் தகவல் தொடர்பியல் இன்று பல்வகை நிலைகளில் விரிந்து பரவி ஆழ் நிலையில் சமுதாயத்திற்குத் தொண்டாற்றி வருகிறது. ‘‘தொடர்பியல் உலகின் ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகளையும் நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி உலக நாடுகளை எல்லாம் அளவில் சுருக்கி நெருக்க வைத்துள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவும் தொடர்பியல் கருவியாகப் பயன்படுகிறது” என்று தகலியலுக்கான விளக்கம் தரப்பெறுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 6 August 2019

குருட்டாட்டம்


siragu kuruttaattam1
பெரியார் பொதுவாழ்வில் நுழைந்தபோது, இந்நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சிசெய்து கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்களை வழிநடத்தும் அதிகார பீடங்களில் பார்ப்பனர்களே ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டின் நலன்களுக்காக இந்தியமக்களைச் சுரண்ட வேண்டுமானால் பார்ப்பனர்களின் வழிகாட்டுதலிலும், ஒத்துழைப்பிலும்தான் செய்யமுடிந்தது. ஏனெனில் அதிகாரக்கல்வி முழுவதும் பார்ப்பனர்களின் வசமே இருந்தது. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உழைப்புக்கல்வியையும், தொண்டுக்கல்வியையும் மட்டுமே பெறமுடிந்தது. பெறமுடிந்தது என்பதைவிட, பெற்றேதீர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் கிறித்துவ சமயப்பரப்பாளர்கள் சாதிவேறுபாடு பாராமல் அனைத்து மக்களுக்கும், அனைத்து வகைக்கல்வியையும் அளித்தனர். அவர்களின் அறிவுரைகளைக்கேட்டு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவில் அதிகாரக்கல்வியும், அதிகார வேலைகளும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு மறுக்கப்படுவதை எதிர்த்து நடவடிக்கைகளை எடுக்க முயன்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 2 August 2019

தினா சனிசார்


siragu dina sanichar1
ருட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling) எழுதிய ஜங்கிள் புக் (Jungle Book) இந்தியாவில் வாழ்ந்த உண்மைக் கதை என நாம் அறிவோமா? jungle Book-ல் வரும் மௌக்லி (mowgli) பாத்திரம் போலவே, தினா என்ற சிறுவன் ஓநாய்களால் வளர்க்கப்பட்டச் சிறுவன்.
தினா நான்கு கால்களுடன் ஓநாய்கள் நடுவில் நடந்து கொண்டுச் செல்வதை வேட்டையாடிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எப்படி அந்தச் சிறுவன் ஓநாய் கூட்டத்துடன் சேர்ந்திருக்க முடியும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் உண்மையில் ஓநாய்கள் அந்த மனிதக் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்திருக்கின்றன. அவனை மீட்க அந்த வேட்டையாடிகள் பெரும் முயற்சி செய்தனர். அனைத்து முயற்சியும் வீணாகிப்போனது. இறுதியில் அந்தச் சிறுவனை பாதுகாத்து வந்த ஓநாயை கொன்று அவனை மீட்டனர்.

வேட்டையாடிகள் அந்தச் சிறுவனை கிறித்துவ மிசினரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தான் அவனுக்கு தினா சனிசார் (Dina Sanichar) என பெயரிட்டனர். Sanichar என்றால் உருது மொழியில் சனிக்கிழமை என்று பொருள். அந்த சிறுவன் அந்த ஆதரவற்ற இல்லத்திற்கு சனிக்கிழமை அன்று சேர்த்துவிடப்பட்ட காரணத்தினால் அந்தப் பெயர் கொடுத்தனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

கருத்து நயத்திற்கு ஓர் காளமேகம்


siragu kalamegam1
சங்ககாலம் முதல் பெரும்பாலான இலக்கியங்கள் அவை கூறும் கருத்தின் அடிப்படையில் திரட்டப்பட்டவையே. இத் திரட்டு நூல்கள் தொகை நூல்கள் என அழைக்கப்பட்டன. அவ்வாறே, கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரும், பாடல்கள் தொகுக்கப்பட்ட 19 ஆம் நூற்றாண்டு காலம் வரையில் வாழ்ந்த புலவர்கள் பலரின் தனிப் பாடல்கள் பல ‘தனிப்பாடல் திரட்டு’ எனத் தொகுக்கப்பட்டன. இராமநாதபுரம் புரவலர் பொன்னுசாமித் தேவர் (1837-1870, இவர் பாண்டித்துரைத் தேவரின் தந்தை) முன்னெடுக்க, தில்லையம்பூர் சந்திரசேகரக் கவிராயர் தேடித் தொகுத்தவை தனிப்பாடல் திரட்டு நூலில் உள்ள பாடல்கள். இந்த நூலில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைத் திரட்டிக் கொடுத்தவர் திருக்காட்டுப்பள்ளி இராமசாமி முதலியார் என்பவராகவும் அச்சிட்டவர் பெரியதம்பி என்பவராகவும் அறியப்படுகிறார்கள். இதுவே முதல் தனிப்பாடல் திரட்டு நூலாகும். பின்னர் மேலும் சில தொகுப்புகளும் தொடர்ந்து பலரால் வெளியிடப்பட்டன. தனிப்பாடல் திரட்டுத் தொகுப்பு நூல்களின் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ஒவ்வொன்றிலும் வேறுபட்டே உள்ளன.
தனிப்பாடல்களை எழுதினாராகக் கம்பர் ஒளவை முதற்கொண்டு 97 புலவர்களின் தனிப்பாடல்கள் காணக்கிடைத்தாலும், தனிப்பாடல் எனில் இலக்கியச் சுவைக்காகத் தனிச்சிறப்புடன் கூறப்படுபவர் காளமேகப்புலவரே என்றால் அது மிகையன்று. தனிப்பாடல் திரட்டு என்றாலே காளமேகப் புலவரால் பாடப்பெற்ற பாடல்களே பலருக்கும் நினைவு வரும் அளவிற்குச் சிறப்புப் பெற்றவர் காளமேகம். இவர் நாகைக்கருகே உள்ள திருமலைராயன் பட்டினம் பகுதியை ஆண்ட சிற்றரசன் திருமலைராயன் (பொது ஆண்டு 1455-1468) என்பவரின் காலத்தில் வாழ்ந்தவர் என அவர் பாடல் குறிப்பின் மூலம் தெரிய வருகிறது. திருமலைராயன் ஆட்சிக்காலத்தின் அடிப்படையில் இவரும் 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்தவர் என்றே கணிக்கப்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.