Tuesday, 28 February 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-14


siragu-panjathandhira-kadhaigal
சக்கரம் தலையில் சுழன்று கொண்டிருந்தவனை நோக்கி, நாலாவது வேதியன் துணுக்குற்றான். “நீ யார்? உன் தலைமேல் இந்தச் சக்கரம் சுழல்வதன் காரணம் என்ன?” என்று அவனைப் பார்த்துக் கேட்டான். கேட்ட அளவிலே அந்தச் சக்கரம் அவனை விட்டு இந்த வேதியன் தலைமேல்வந்து சுற்றலாயிற்று. “இதென்ன? கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக இருக்கிறதே” என்று கவலையுற்றான் நாலாவது ஆள். பழைய ஆளைப் பார்த்து, “இது ஏன் இப்படி ஆயிற்று? உன் தலைமீதிருந்த சக்கரம் என் தலைமேல் சுற்றக் காரணம் என்ன?” என்று கேட்டான்.

பழைய ஆள்: பலப்பல ஆண்டுகளாக இப்படித்தான் என் தலையில் இச்சக்கரம் சுற்றியவாறு இருந்தது. “இந்தச் சாலையில் மற்றொருவன் வந்து உன்னை விசாரிப்பான். அப்போது உன் தலையில் உள்ள இந்தச் சக்கரம் அவன் தலையில் பற்றிக் கொள்ளும்” என்று குபேரன் எனக்குக் கூறினான். அதன்படி ஆயிற்று.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=26073

Monday, 27 February 2017

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்


Siragu Moovalur_ramamirtham2
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சுயமரியாதை இயக்க முன்னோடிகளில் ஒருவர். 1883-ஆம் ஆண்டு தந்தை கிருஷ்ணசாமிக்கும் தாய் சின்னம்மாளுக்கும் மகளாக இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். சில வருடங்களுக்கு முன் முன்னாள் தமிழ் நாட்டின் முதல்வர் கலைஞர் ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம்’ என்கிற திட்டத்தை அறிவித்தது நினைவிருக்கலாம். இவரின் புகழை பறைசாற்றும் விதமாகவே அந்தத் திட்டத்திற்கு இவர் பெயர் வைக்கப்பட்டது. ‘மூவலூர் மூதாட்டி’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் அவர்.
Siragu Moovalur_ramamirtham4

‘தேவதாசி’ என்னும் முறை, தமிழகத்தில் சோழர் காலம் தொட்டு இருந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை மிகச் சிறு வயதிலேயே கடவுளுக்குக் காணிக்கையாக்குகிறோம் என்கிற பெயரில், கோயில்களுக்கு ‘நேர்ந்து விட்டு, அவர்களை ஊர்ப் பெரிய மனிதர்களின் ஆசை நாயகிகளாகவும், ஊராரை மகிழ்விக்கும் நடனப் பெண்மணிகளாகவும் ஆக்கியிருந்தது சமூகம். அவர்கள் ‘பொட்டு கட்டப்பட்டவர்களாகவும்’ ‘தேவரடியார்களாகவும்’ இழிவாகப் பேசப்படும் பிரிவினராகவும் வைக்கப்பட்டிருந்தார்கள். ‘நித்ய சுமங்கலி’ என்று பெயர் கொடுத்து, அவர்களைப் ‘புனிதப்படுத்தி’ ஏமாற்றினார்கள். உடலை விற்கும் தொழிலை அவர்களின் மீது திணித்து விட்டு, அதற்குச் சடங்குகளின் பெயரால் புனிதப் போர்வை போர்த்தினர் சனாதனம் பேசும் உயர்சாதியினர். இந்த அவலம் பல நூற்றாண்டுகளாக நடந்து வந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 26 February 2017

தமிழும் தமிழ் சார்ந்த நிலமும்

Picture1-tamil nadu natural boundary
“நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமுந்
     தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு”
      “குமரி வேங்கடங் குணகுட கடலா
     மண்டினி மருங்கினிற் றண்டமிழ் வரைப்பில்”
என்பார் இளங்கோவடிகள். இதன் மூலம் வடக்கில் திருவேங்கடம் முதல், தெற்கில் குமரிமுனை வரை, கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லையாகக் கொண்டு திகழ்ந்த நிலம் தமிழ் பேசும் தமிழ்நாடாக இருந்ததை அறிகிறோம். அவ்வாறே இந்த எல்லைகளுக்குட்பட்டத் தமிழ் மண்ணை ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட நிலங்களின் எல்லைகள் குறித்தும் பாடல்கள் உள்ளன.

தமிழகத்தின் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்த, அவர்களது நாடுகளின் எல்லைகளைக் குறிக்கும் பாடல்கள் என கம்பர் இயற்றியதாகக் குறிப்பிடப்பட்டு நான்கு தனிப்பாடல்கள் ‘தனிப்பாடற்றிரட்டு’ என்ற நூலில் (பக்கம் 124-126) இடம் பெற்றுள்ளன. தனிப்பாடற்றிரட்டு (முதல் பாகம்), என்ற இந்த நூல், பல புலவர்கள் எழுதிய தனிப்பாடல்களைத் தொகுத்து, 1908 ஆம் ஆண்டு கா. இராமசாமி நாயுடு அவர்கள் வெளியிட்ட நூல். இந்நூலில் காளமேகப்புலவர் முதற்கொண்டு, கம்பர் உட்பட 29 புலவர்கள் இயற்றிய சுமார் 750 தனிப்பாடல்கள் கா. இராமசாமி நாயுடு அவர்களால் தொகுத்து உரை எழுதப்பட்டு பார்த்தசாரதி நாயுடு அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

‘தனிப்பாடற்றிரட்டு’ நூலில் கம்பரின் தனிப்பாடல்கள் எனத் தொகுக்கப்பட்டுள்ள பாடல்கள் 69. கம்பர் (கி.பி. 1180-1250) 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சோழமன்னனின் அவையை அலங்கரித்த, 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த   ‘ஒட்டக்கூத்தர்’, நளவெண்பா பாடிய ‘புகழேந்திப் புலவர்’ மற்றும் ‘ஒளவையார்’ ஆகியோருடன் போட்டியிட்டும், தனது மகன் அம்பிகாபதியுடனும் சோழ மன்னனுடனும் பாடிய பாடல்கள் என இத்தொகுப்பில் கம்பரின் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இக்குறிப்புகள் இப்பாடல்கள் எழுதியவரைக் கம்பர் எனச் சுட்டுகின்றன. எனினும் எழுத்து நடை, இலக்கிய நயம் கொண்டு இப்பாடல்கள் ‘கம்பராமாயணம்’ இயற்றிய கம்பரால் பாடப்பட்டவையல்ல என்ற கருத்தும் உள்ளது. மேலும் இடைக்காலச் சோழர்கள் காலத்திலேயே, அதாவது, 9 ஆம் நூற்றாண்டிலேயே பல்லவர் ஆட்சி முடிவு பெற்றுவிட்டது. கம்பர் காலம் 12 ஆம் நூற்றாண்டு என்றால் அது பிற்காலம். சாளுக்கிய சோழர்கள், குறிப்பாக 3 ஆம் குலோத்துங்க சோழன் காலம். ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர்கள் காலத்தில் கம்பர் வாழ்ந்ததாகக் கூறப்படும் கதைகளில் உண்மை இருக்கலாம் என்றால் அது 2ஆம் குலோத்துங்க சோழன் காலம் எனக் கொள்ள வேண்டும். இக்காலத்தில் பல்லவ நாடு பேர் சொல்லும் வகையில் சிறப்புடன் இருக்கவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ் நிலத்தை ஆண்ட மன்னர்களின் நாடுகளின் எல்லைப்பகுதிகள் ‘தமிழகத்தின் இயற்கை அமைப்பு’ அடிப்படையில் இயற்கையாக அமைந்த நில எல்லைகளான ‘மலைத்தொடர்கள்,’ ‘ஆறுகள்,’ ‘கடல்கள்’ போன்றவற்றால் வரையறுக்கப்பட்டோ அல்லது ‘பெருவழிகள்,’ ‘ஊர்கள்’ ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டோ அமைந்திருப்பதை நிலவரைபடம் தெளிவாகக் காட்டுகிறது.


சுருக்கமாக, ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 22 February 2017

என்றும் வாழும் தலைமகனார்! (கவிதை)


Siragu-ellaam-kodukkum-tamil1


(தமிழறிஞர் மணவை முஸ்தப்பா)
அகரமுதல் னகரம்வரை தமிழில்
அறிவியல் சிந்தையை தேடியவர்
மாசறத் தாம்கற்றுத் தெளிந்த
மாத்தமிழ் நுட்பம் யாவையும்
அறிவியல் சிந்தைக்கு உட்படுத்தியவர்
அண்ணார் அறிந்த அருந்தமிழ்
அறிவுக் களஞ்சிய மணைத்தும்
அறிவியல் இலக்கியச் சமுதாயத்தை
விளைத்திடவே; அல்லும் பகலும்
அயராது அண்ணைத் தமிழுக்கு
அருந்தவத் தொண்டினை ஆற்றினார்


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=25890

Tuesday, 21 February 2017

கூடா நட்பு (சிறுகதை)


Siragu koodaa natpu

ஒரு ஊருக்கு வெளியே தூர்ந்த குளம் ஒன்று இருந்தது. அந்தக் குளத்தில் சர்ப்பம் ஒன்று வசித்து வந்தது. குளத்தில் பெயரளவிற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. குளத்தைச் சீந்துவார் யாருமிலர். அந்த குளத்திலிருந்து கூப்பிடும் தூரத்தில் தடாகம் ஒன்று இருந்தது. அதில்தளும்பத் தளும்பத் தண்ணீர் கட்டி கிடந்தது. தடாகத்தில் தாமரை மலர்களும் அல்லிமலர்களும் நிறையப் பூத்துக் கிடந்தன. தடாகத்தில் அன்னம் ஒன்று வசித்து வந்தது. அது பூக்களோடு உறவாடிக் கொண்டும், சுவைமிகு தடாகநீரைப் பருகிக் கொண்டும், ஆடியும் பாடியும் மகிழ்ச்சியுடன் இருந்து வந்தது. சர்ப்பம் அன்னத்தின் வாழ்க்கையோடு தனது வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்தது. அன்னத்திற்குத்தான் எத்தனை சொகுசான வாழ்க்கை? அன்னத்தை யாரும் எந்தத் தொந்தரவும் செய்வது இல்லை. ஆனால் சர்ப்பத்தைக் கண்டாலே கல்லெறிந்து கொல்ல வருகிறார்கள். சர்ப்பத்திற்கு அன்னத்தின் மீது பொறாமை வந்தது. அன்னத்தை காணும்போதெல்லாம் அதன் பொறாமைத் தீ வளர்ந்தது. அன்னத்தின் மகிழ்ச்சியைக் கெடுக்க வேண்டும் என சர்ப்பம் நினைத்தது. அதற்கு ஓரேவழி உறவாடிக் கெடுப்பதுதான் என முடிவு செய்தது.

தடாகத்தில் அன்னம் வசித்து வருவது சர்ப்பத்திற்குத் தெரியும். ஆனால் குளத்தில் சர்ப்பம் இருப்பது அன்னத்திற்குத் தெரியாது. ஒருநாள் அன்னம் குளக்கரையில் வந்தமர்ந்தது. அப்போது சர்ப்பம் அன்னத்திடம் பேச்சுக் கொடுத்தது. சர்ப்பத்தை கண்டதும் அன்னம் அஞ்சி பின்வாங்கியது. 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 20 February 2017

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13


இவ்வாறு கதைகூறிய குரங்கு, “சரி, நீ உன் இடத்துக்குப் போ” என்று முதலையை அனுப்பியது. அது தன் இடத்திற்குச் சென்று பார்த்தபோது வேறொரு முதலை அங்கு இருந்தது. அதைக்கண்டு மீண்டும் “நம் நண்பனாகிய குரங்கிடமே உபாயம் கேட்கலாம்” என்று திரும்பிவந்தது. “நண்பனே நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்டது. முதலையைக் கடிந்து கொண்ட குரங்கு, “உனக்கு புத்தி சொல்வதே வீண். மூடனுக்கு உபதேசித்தால் வீடு உடையவனையும் வீடு இழக்கச் செய்வான்” என்றது.
முதலை: அது எப்படி?

Siragu pancha thandhir kadaigal 13-1

குரங்கு: இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு மரத்தின்மேல் கூடுகட்டி வாழ்ந்து கொண்டிருந்தன. ஒருநாள் ஆலங்கட்டியுடன் கூடிய பெருமழை பெய்யலானது. அப்போது அந்த மரத்தின் கீழ் மழையில் ஒரு குரங்கு பற்கள் கிட்டி, குளிரால் மிகவும் நடுங்கிக் கொண்டிருந்தது. குருவிகள் அதைக் கண்டு இரக்கம் கொண்டன.
குருவி: உனக்குக் கைகால்கள் இருந்தும் குளிர்காற்று முதலிய துக்கத்தை நீ அனுபவிக்கக் காரணம் என்ன? நீ ஏன் வீடுகட்டிக் கொள்ளவில்லை?
துஷ்டக் குரங்கு: ஊசிமூஞ்சி மூடா! வல்லவர்களுக்கு புத்தி சொல்லும் அளவுக்கு வந்துவிட்டாயா நீ? எனக்கு வீடு கட்டுகிற சக்தி இல்லை; ஆனால் அதைப் பிரித்தெறிகின்ற சாமர்த்தியம் உண்டு.
என்று கூறி, தூக்கணாங்குருவிகளின் கூட்டைப் பிய்த்தெறிந்தது. ஆகவே உன்னைப் போன்றவர்களுக்கு உபதேசம் செய்யலாகாது” என்றது குரங்கு.
முதலை: நண்பனே, நான் குற்றவாளி என்பதும் மூடன் என்பதும் மெய்யே, ஆனால் பழைய சிநேகிதன் என்ற முறையில் உன்னை உதவி கேட்கிறேன்.
குரங்கு: நீ உன் இடத்திற்கே திரும்பப் போ. உன் பகைவனோடு போர் செய். இறந்தால் சொர்க்கம் அடைவாய். வென்றால் உன் வீடு உனக்குத் திரும்பக் கிடைக்கும். முன்பு ஒரு புத்திசாலி, உத்தமனுக்குக் கும்பிடும், சூரனுக்கு பேதமும், காரியக்காரனுக்கு தானமும், ஈடானவனுக்கு தண்டமும் செய்து தன் காரியத்தில் வெற்றி அடைந்தது. அதுபோல நடந்துகொள்ள வேண்டும்.

முதலை: அது எப்படி, சொல்வாயாக.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 19 February 2017

ஆசீவகத்தின் வண்ணக் கோட்பாடும் வள்ளலாரின் ஏழுதிரைகளின் மறைப்பும்

இந்திய மெய்ப்பொருளியல் பெரும்பரப்பு கொண்டது. பல்வேறு சமயக் கொள்கைகளை உள்ளடக்கியது. வேத மரபும், வேத மறுப்பு மரபும் இந்திய மெய்ப்பொருளியலின் முரண். அல்லது இணை வளர்ச்சி என்றே கொள்ளவேண்டும். ஆசீவகம், சமணம், பௌத்தம், பூதவாதம் போன்றன வேதமரபினை மறுத்த இந்திய மெய்ப்பொருளியல் தத்துவங்கள் ஆகும்.

Siragu-vallalaar6

இவற்றில் அசீவகம் தமிழகத்தின் தொன்மைச் சமயமாகக் கருதத்தக்கது. இந்திய அளவில் பூரணகாசிபர், மர்கலி கோசலர், பகுதகச்சானர் என்ற மூவரும் ஆசீவகக்கொள்கை பூரணகாசிபர், மர்கலி கோசலர், பகுதகச்சானர் என்ற மூவரும் ஆசீவகக்கொள்கையை வகுத்தவர் என்பது வரலாற்று அறிஞர்கள் முடிவு. பௌத்த மதத்தில் இருந்து வேறுபட்டு உருவாக்கப்பெற்றது அசீவகம் ஆகும்.

ஆசீவகத்தில் நிறக் கோட்பாடு அடிப்படையானது. அறுவகையான நிறக்கோட்பாடுகளை இது கற்பிக்கிறது. ஆசீவகத்தில் ஆன்ம ஈடேற்றம் கருதி மனிதர்தம் மெய்யியல் படிநிலைக்கு ஏற்ப வண்ண உடைகள் வழங்கப்பெறும். ஞானவளர்ச்சியின் குறியீடாக வண்ணங்கள் இச்சமயத்தில் கொள்ளப்பெறுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.