Wednesday, 31 May 2017

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் !!


Siragu pirappokkum1

வள்ளுவன் இயற்றிய உலகப் பொதுமறையில் பெருமை என்ற அதிகாரத்தின் 2 வது குறள் -
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” !!
பிறப்பினால் அனைவரும் ஒருவரே. பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உலகிற்கு உரக்க உரைத்திற்று.


ஆனால் பிறப்பில் பேதம் கற்பிக்கும் சாதி தமிழ்ச் சமூகத்தில் நுழைந்து நம்மை பிளவுபடுத்தியது. சாதி என்பது ஏற்றத்தாழ்வுகள் கொண்ட ஒரு சமூக அவலம், அது ஒரு உரிமை மீறல், பாகுபடுத்தி நடத்துதல், ஒரு வன்முறை என்பதை பலரும் உணரவேயில்லை. சாதிய படிநிலையில் மேல் சாதி உயர்ந்த சமூக நிலையும், கீழ் சாதி தாழ்ந்த சமூக நிலையும் கொண்டவர்களாக கருதப்படுகின்றார்கள். இந்நிலையான வேறுபாட்டை நிலைநாட்டும் வண்ணம் பல்வேறு சமூக மரபுகளும் சடங்குகளும் அம்மக்களை முட்டாளாக்கி வைத்திருக்கின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 30 May 2017

தமிழ் தொழில்முனைவோர் மாநாடு 2017


Siragu Tefcon flyer1



அமெரிக்காவிலுள்ள ஏராளமான தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய்த் திகழ்வது, வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையாகும். வட அமெரிக்காவிலிருக்கிற ஏதோவொரு நகரில் அந்தப் பகுதி தமிழ்ச்சங்கத்தோடிணைந்து, ஆண்டுதோறும் அமெரிக்கத் தமிழர் விழாவாகத் தன் ஆண்டுவிழாவினைக் கொண்டாடிவருகிறது பேரவை. அதன் தொடர்ச்சியாக, மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும் பேரவையுமிணைந்து இவ்வாண்டுக்கான விழாவினை எதிர்வரும் ஜூலை 1, 2 ஆகிய நாட்களில் மினியா பொலிசு நகரில் நடத்தவிருக்கிறது. இத்திருவிழாவின் ஒரு அங்கமாக இடம்பெறுவதுதான் அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் மாநாடு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தோல்!(கவிதை)


Siragu parai1

இறந்த பின்னும்
உழைப்பின் பெருமையை பறைசாற்றுகிறது
இந்த உலகிற்கு
உழைக்கும் வர்க்கப் போராட்டதினரின்
பேரொலி யெழுப்பும்
ஆயுதமாக
பண்பாட்டுப் படையல்களில்
காதுகளுக்கு இசையாக



நவநாகரீக கோலத்தினரின்
அடிகளுக்கு அணியாக

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Friday, 26 May 2017

சிவப்பிரகாசரின் நன்னெறியில் திருக்குறள் ஆளுமை


Siragu sivaprakaasar

துறைமங்கலம் சிவப்பிரகாசர் சிறந்த பக்தியாளர். கற்பனைக் களஞ்சியம் என்று புகழப்படுபவர். முருகன் மீதும் தன் குருவான சிவஞான பாலய சுவாமிகள் மீதும் பல பனுவல்களைப் பாடியவர். இவரின் பாடல்களில் கற்பனை வளம் மிகுந்து காணப்படும். இவர் பாடியனவாகத் தற்போது முப்பத்து நான்கு நூல்கள் கிடைக்கின்றன. புராணங்கள், சிற்றிலக்கியங்கள் பாடுவதில் வல்லவரான இவர் பாடிய நீதி நூல் நன்னெறி என்பதாகும். நாற்பது பாடல்களை உடைய இந்நூல் ஒவ்வொரு பாடலிலும் ஒரு நற்கருத்தை விளக்குகிறது. அதற்கு ஏற்ற உவமையைக் காட்டி மேலும் பொருள் விளக்கம் செய்கிறது. நாற்பது பாடல்கள், நாற்பது உவமைகள், நாற்பது கருத்துகள் என்ற நிலையில் படைக்கப்பெற்ற நூல் நன்னெறியாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 23 May 2017

மாதவிடாய் பெண்களை வலிமை அற்றவர்களாக மாற்றுகின்றதா ?


Siragu Menopause3

மாதவிடாய் பற்றி இன்றும் பலர் தவறான பழக்க வழக்கங்களைக் கொண்டு, பெண் உடலின் இயற்கை நிலைகளைப் பற்றி அறியாது செயல்படுகின்றனர். முதலில் மாதவிடாய் என்றால் என்ன? என்பதை அறிவியல் விளக்கத்தோடு புரிந்து கொள்ளுதல் அவசியம். ஒரு பருவம் அடைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றம். இது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள ஒரு உறுப்புகளில் ஒன்றான கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் 3-7 நாட்கள் குருதியுடன் சேர்ந்து கருப்பையின் உள் சீதமென்சவ்வும் வெளியேறுவதை குறிக்கும். இவ்வளவு தான் மாதவிடாய்க்கான அறிவியல் விளக்கம்.

ஆனால் நம் நாட்டில் மாதவிடாயின் போது பெண்கள் படும் பாடு இருக்கின்றதே? பண்பாடு எனும் பெயரில், மதத்தின் பெயரில் மாதவிடாய் என்றாலே மிகப் பெரிய அசுத்தம் என்பது போன்று இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 22 May 2017

பறிக்கப்படுகிறதா … மாநில சுயாட்சி


Siragu-state-govt1

தற்போது நிலவும் தமிழக அரசியல் சூழல் மிகவும் வருத்தப்படக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நம் மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொன்றும் புதிராகவே காணப்படுகின்றன. ஆளும் மாநில கட்சி அதிமுக-வை பலகீனமடையச் செய்து, இரு முக்கிய குழுக்களாகவும், மற்றும் சில சிறிய குழுக்களாகவும் பிரித்து, அக்கட்சியைத் தன வசம் வைத்துக்கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு.

இந்தியாவிற்கே, ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்று முழங்கி, புரிய வைத்தவர்கள் தமிழக மக்கள் மற்றும் அப்போதைய அரசியல் தலைவர்கள். ஆனால், அப்பேற்பட்ட தமிழகத்திற்கு இன்று ஏற்பட்டிருக்கும் நிலைமை என்னவோ பொம்மலாட்ட அரசு தான். நம் மாநில ஆட்சியின் கயிறு மத்திய அரசிடம் முழுவதுமாக போய் விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நம் ஆட்சியாளர்கள் கைப்பாவைகளாக மாறி விட்டிருக்கின்றனர் என்பது வேதனைக்குரிய ஒன்று. கண்டனத்துக்குரிய ஒன்று. 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 21 May 2017

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை 30ஆவது ஆண்டுவிழா


Siragu Peravai Vizhan Flyer

வட அமெரிக்காவில் ஆங்காங்கேயிருக்கிற தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய்க் கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கிவரும் அமைப்புதான், வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை என்பதாகும். ஆண்டுதோறும் அதன் ஆண்டு விழாவினை, வடஅமெரிக்காவிலிருக்கிற ஏதோவொரு நகரில் அமெரிக்கத் தமிழர், திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். அதன்படி 2017ஆம்ஆண்டுக்கான விழாவினை, எதிர்வரும் ஜூலை முதலாம் நாள் துவங்கி நான்காம் நாள் வரையிலும் மின்னசோட்டா மாகாணத்திலிருக்கிற மினியா போலிசு செயிண்ட்பால் இரட்டைநகர்ப் பகுதியில், மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும், தமிழ்ச்சங்கப் பேரவையுமிணைந்து நடத்துகின்றன.


வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் ஒவ்வொரு ஆண்டு விழாவும், தமிழ்இலக்கியம், பண்பாடு, சமூகத்திற்குப் பணியாற்றிய ஆன்றோர் நினைவாக இடம்பெறுவது மரபாகும். அந்த மரபுக்கொப்ப, இந்த ஆண்டுக்கான விழாவானது நாடகக்கலையின் தலைமையாசிரியரான சங்கரதாசு சுவாமிகளின் நூற்றைம்பதாவது பிறந்தநாள் விழாவாகக் கொண்டாடப்படுவதோடு மட்டுமல்லாமல், ‘தமிழர் கலையைப் போற்றிடுவோம்! தமிழர் மரபினைக் மீட்டெடுப்போம்!!’ என்கிற முகப்பு மொழிக்கொப்ப நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றனயென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.