Friday, 29 September 2017

சமூகப் புரட்சியாளர் சாகுமகராஜ்!!


Siragu shahu_maharaj1
சத்திரபதி சாகு மகராஜ் 26 ஜூன் மாதம் 1874 ஆம் ஆண்டு மாராட்டிய மாநிலத்தில் பிறந்தவர். இந்திய வரலாற்றில் முதன்முதலில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியவர் இவர். சாதி ஒழிப்பிற்காவும், தீண்டாமைக்கு எதிராகவும் குரல் எழுப்பியவர். பகுஜன் சமாஜின் மாணவர்கள் விடுதி இயக்கத்தின் முன்னோடி. பார்ப்பன ஆதிக்கத்தையும், இந்து மதத்தின் ஆதிக்கத்தையும் எதிர்த்தவர். சமூக நீதியின் தந்தை, அண்ணல் அம்பேத்கரின் இயக்கத்தை முழுதும் ஆதரித்தவர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல நிலைகளில் திட்டங்கள் கொண்டு வந்தார். கல்வியும், வேலைவாய்ப்பும் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்தார். பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்காக பல விடுதிகளை கோல்லாபூரில் (kolhapur) திறந்தவர். அதே போன்று கல்வி கற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பையும் உறுதி செய்தார். 1902 லேயே இத்தகைய திட்டங்களை வகுத்து சமூக நீதியை நிலைநாட்டினார் என்பதே மிகச்சிறப்பான செய்தி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 28 September 2017

ஏழையின் கலைந்த கனவு! (கவிதை)


Siragu-en-kanmoodinaai1

சகோதரி அனிதா!
நீயாய் நீ சாகவில்லை
நீ சாகடிக்கப்பட்டாய்
“நீற்” உன்னை சாகடித்தது!
உன் கனவுகளோ சாகவில்லை
உன் கனவுகளை
உன்னைப்போல் ஆயிரமாயிரம்
அனித்தாக்களுக்குள் விதைத்துவிட்டல்லவா
போயிருக்கிறாய்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 27 September 2017

தோற்றம் கண்டு இகழாதே…! (சிறுகதை)


Siragu-thotram-igalaathe1.png
ஒரு காட்டின் சிறுகுன்றின் மீது அந்த தேவாலயம் அமைந்திருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புள்ளிமான்குட்டி ராணி தனது பெற்றோர்களுடன் தொழுவதற்காக அங்கே வரும். அவ்வாறு வருவதற்கு அது மிகுந்த ஆவலாய் இருக்கும். அதற்குக் காரணம் உண்டு. அந்த ஆலயத்தில் நன்கு பராமரிக்கப்பட்ட நந்தவனம் ஒன்று இருந்தது. அந்த நந்தவனத்தில் விதவிதமாய் பூக்கள் பற்பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும். ராணியைப் போன்றே மற்ற மிருகங்களின் குட்டிகளும் அங்கே வரும். பெரியவர்கள் பிரார்த்தனையில் இருக்க, குட்டிகள் சேர்ந்துகொண்டு நந்தவனத்தில் ஆட்டம் போடும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அந்த தேவாலயத்தைச் சுற்றிமுளைக்கும் சிறுகடைகள் உண்டு. அங்கே கொறிப்பதற்குத் தின்பண்டங்கள் வேறுகிடைக்கும். சொல்ல வேண்டுமா? குட்டிகள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிடும்.
ராணிக்கு அந்த நந்தவனத்தில் பிடிக்காத விசயம் ஒன்றும் இருந்தது. அது குரங்குக் குட்டிகள். அவைகள் பார்ப்பதற்கு வரிக்குதிரைக்குட்டிகள் போன்றோ, சிவிங்கிக் குட்டிகள் போன்றோ, முயல்களைப் போன்றோ அழகாக இராது. அறுவறுப்பாக இருக்கும். அதனால் இவைகள் அந்தக் குரங்குகளை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாது. அவைகள் மரத்தின் கிளைகளில் பரிதாபமாக அமர்ந்தபடி இவைகள் விளையாடுவதை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கும். ஒருநாள் ராணியின் அம்மா இதனை கவனித்துவிட்டார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 26 September 2017

இனியாவது பேசுவோம் மறந்துபோன தொப்புள்கொடி உறவை!


Siragu malayaga thamilargal1
ஆயிரத்து எண்ணூற்று இருபதுகளில் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்து போன தமிழர்களின் வாழ்வு இருநூறு ஆண்டுகளை எட்டுகிறது. இலங்கையிலிருந்து மீண்டும் தமிழகத்திற்கு துரோக உடன்படிக்கையான, அதிபர் சிறிமாவோ பண்டாரநாயக்க – இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி செய்துகொண்ட ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்காம் ஆண்டு தொடக்கம் இரண்டாயிரத்து பதினான்குடன் ஐம்பது வருடங்களை கடந்தாயிற்று. உலகில் வாழும் அனைத்து மக்களுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அவை அத்தனையும் பெற தகுதியுள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்களை இரண்டு நாடுகளும் பண்டத்தைபோல பங்கு போட்டுக்கொண்டனர்.
கடலுக்கு அப்பால் இலங்கையில் இன்றைய கணக்கீட்டின்படி பதினைந்து லட்சம் பேர் மலையகத்தமிழர் என்ற அடையாளத்தோடு வாழ்வைத் தொடர்கின்றனர். இங்கே குறிப்பாக தமிழகத்தில் அதே எண்ணிக்கையில் பல மாவட்டங்களில் தாயகம் திரும்பிய தமிழர்களாக வாழ்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவிலிருந்து பிஜி, மொரிசியஸ், மலேசியா, பர்மா, தென்னாப்பிரிக்கா என பல நாடுகளுக்கு கூலிகளாக அழைத்து செல்லப்பட்டாலும் ஒப்பீட்டளவில் தேயிலை தோட்டங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையில் நவீன சமூகத்தின் எந்த ‘சுதந்திரமும்’ இதுவரை கிட்டவில்லை என்பதே இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நமக்குக் கிடைக்கும் கசப்பான உண்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 21 September 2017

நீட்டினும் நீட்டாமை!! (கவிதை)


Siragu-en-kanmoodinaai1


வணிகம் போற்றும் வறட்டுலகில்
மனிதம் மிக்க மருத்துவராய்
இனியொரு விதி செய்ய
வித்திட்டவள்
அனிதாவெனும் ஆற்றல்மிகு நங்கை!

அவள் விதைத்ததெலாம்
நல்வினையாகும் நேரத்தில்
கொல்வினையாய் கொண்டதொரு
நீட் எனும் கயிறே..

விழுங்கியது அவர் உயிரே..

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/

Wednesday, 20 September 2017

பிரமிள் கவிதைகள் -படிமம் –படிப்பினை


Siragu piramil3
நவீன தமிழ் இலக்கியத்தில் பெரும்பங்களிப்பைச் செய்தது சி.சு.செல்லப்பா அவர்கள் நடத்திய ‘எழுத்து’ இதழ். இலக்கிய விமர்சனங்களோடு தன் பயணத்தை தொடங்கிய எழுத்து இதழ் பிற்காலத்தில் இதழ்களின் வளர்சிக்கு ஒரு குறியீடாக காட்டப்படுகிறது. அதோடு மட்டுமல்லாது எழுத்து இதழில் எழுதியவர்களுக்கு முகவரியாக அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
அவ்வகையில் ‘எழுத்து’ இதழில் கவிதைகள் எழுதியவர்களின் அறுபத்து மூன்று கவிதைகளையும் அக்கவிதைகளை எழுதிய இருபத்து நான்கு கவிஞர்களையும் “புதுக்குரல்கள்” என்று தொகுத்து வெளியிட்டது. அத்தொகுப்பில் இடம்பெற்ற கவிஞர்களில் வெகுசிலர் மட்டுமே கவிதையை தொடர்ந்து செய்து வந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் ‘பிரமிள்’ என்று அழைக்கப்படுகிற இலங்கையில் பிறந்து தமிழகத்தில் வாழ்ந்த சிவராமலிங்கம்.

“புதுக்குரல்” தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிஞர்களில் வடித்தெடுப்பது சற்று கடினமென்றாலும் இக்கட்டுரைக்காகவாவது பிரமிளை முன்னிலைப்படுத்த அவசியமாகிறது. மேலும் பிரமிள் கவிதை அமைப்பு, உத்திமுறை மற்றும் படிமம் ஆகியவற்றின் காரணமாக முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 19 September 2017

பெரியார்: நான் யாராயிருந்தாலென்ன?


Siragu periyar3
“கடவுள் இல்லை” என்று தட்டச்சு செய்து இணையத்தில் தேடினால் கூகுள் இணையத்தேடலில் கிடைப்பவை பெரும்பாலும் ‘பெரியார் ஈ. வெ. ராமசாமி’ அவர்களைப் பற்றிய செய்திகளையும் படங்களையும் கொண்ட முடிவுகளாகவே இருக்கும். அவ்வாறே “பகுத்தறிவுப் பகலவன்” என்றாலும் அவர் குறித்த செய்திகள்தான் கிடைக்கும். ‘பகுத்தறிவுப் பகலவன்’, ‘தந்தை’, ‘பெரியார்’ என்ற பெயர்களெல்லாம் மக்கள் அன்புடன் அவருக்கு வழங்கிய பட்டங்கள். ஆனால், அவர் தானே தனக்குப் பற்பல புனைபெயர்களைப் புனைந்து கொண்டு தனது பகுத்தறிவுக் கொள்கைகளை அப்புனைபெயர்களில் எழுதியுள்ளார். 
 இவற்றில், ‘சித்திரபுத்திரன்’, ‘பழைய கறுப்பன்’ என்பவை நன்கு அறியப்பட்ட புனைபெயர்களாகும். இதைத் தவிர தேசீயத்துரோகி, ஒரு தொழிலாளி, சுமைதாங்கி, யார் எழுதினாலென்ன, எவர் எழுதினாலென்ன, ஒருநிருபர், நமது அரசியல் நிருபர், பொதுநலப்பிரியன், குறும்பன், உண்மை காண்போன், நம்பிக்கையிழந்தவன், பார்ப்பனரல்லாதான், உண்மை விளம்பி, வம்பளப்போன், பழைய காங்கிரஸ்காரன், வம்பன், குட்டிச்சாத்தான் என்ற புனைப் பெயர்களிலும் இவர் எழுதியிருக்கலாம் என்ற பெரியாரியலில் ஆர்வம் கொண்டோர், அவர் எழுதும் முறையை நன்கறிந்த வாசகர்கள் கருதுவதுண்டு. இப்புனைப்பெயர்களில் பல அவரை வசைபாடிய பெயர்களாகவும், அதையே அவர் புனைப்பெயராக வைத்துக் கொண்டதாக இருப்பதும் வெள்ளிடைமலை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.