Friday, 28 September 2018

அம்ருதா!! (கவிதை)


siragu amrutha2

வயிற்றில் உந்தன் இதயத் துடிப்பின்
வளரும் ஒலி கேட்க நேரமில்லையோ?
வாழ்க்கை முடித்தே வைத்தர் சாதியின்
வல்லூறுகள்; வாட்டும் உன் நினைவுகளை
வஞ்சனை கொண்டோர் எந்தன் உளத்திலிருந்து
வாரிச் சுருட்டி எறிந்திடவும் முடியுமோ?

வெட்டிய அரிவாளில் தொய்ந்த குருதியும்
வீழ்ந்த நொடியும் நெஞ்சத்தில் எரியூட்ட
வளரும் உன் கருவிற்காய் உயிர் சுமந்து

வலிவுடன் போராட உறுதி பூண்டுள்ளேன்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Thursday, 27 September 2018

செவ்வியல் இலக்கியங்களில் எதிர்காலவியல்


Siragu tamil4
உலகை எதிர்காலவியல் எனும் சொல்லுக்குள் அடக்கியவை தமிழ்மொழியாகும். தமிழ்மொழியின் உச்சமாகக் கருதப்படுகிற செவ்வியல் இலக்கியங்கள் இப்பொருண்மையை உணர்த்திநிற்கிறது. கணினிவழி கண்டுபிடிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளெல்லாம் தன் கணிப்பில் கண்டுபிடித்தவர்கள் தொன்மைத்தமிழர்கள் ஆவார்கள். கி.மு. 4 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையமொழி என தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தும் அளவிற்கு சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அச்சான்றுகளுள் ஆலைகள், வீட்டுக்கழிவுகள் எல்லாம் கடத்தி வெளியேற்றிய பாங்கு தமிழர்களுடைய எதிர்காலச் சிந்தனைகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு உணர்த்திச் சென்றிருக்கின்றன. இவற்றோடு படைக்கப்பட்ட படைப்புக்கள் எல்லாம் இதை உள்வாங்கி சரியாகவே செய்திருக்கிறது.

தொல்காப்பியம்


தமிழில் தோன்றிய தொன்மையான இலக்கணநூல் எத்தனை இருந்தாலும் சான்றாகக் கிடைக்கப் பெற்றவை தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்தில் மொழியின் இலக்கணத்தை மட்டும் கூறாமல் எதிர்கால விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படைச் சிந்தனையினையும் படைத்திருக்கிறார். பூகோளத்தில் உள்ள உயிர்களின் நிலை, மானுடத்தத்துவம் ஆகியவற்றினையும் கூறியுள்ளார். இதனை,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 26 September 2018

கலிபோர்னியாவில் தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாள் விழா


Siragu-Periyar-140th-bday-2018.png
சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியிலுள்ள பல்வேறு முற்போக்கு அமைப்புக்கள் பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களின் 140-வது பிறந்த நாள் விழாவை கடந்த சனி செப்.22, 2018 அன்று பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுடன் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் கலிஃபோர்னியாவின் கூப்பேர்டினோ நகரில் கொண்டாடினர். இந்தியாவின் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தக்காரர்களில் ஒருவரான தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை, சாதி அழிப்பு போன்ற உயரிய கொள்கைகளின் அடிப்படையில் பல்வேறு கருத்தரங்குகள், கேள்வி-பதில் அமர்வுகள் நடைப்பெற்றது.

சிறப்பு பேச்சாளர்களில் ஒருவரான எழுத்தாளர் டாக்டர்.வா.கீதா இந்தியாவில் இருந்து வீடியோ பல்வழி அழைப்பின் வழியே “பெரியார் – பொது வாழ்க்கையின் ஒரு முன்மாதிரி” என்ற தலைப்பில் உரையாற்றினார். முதலில் பெரியாரின் அறம் சார்ந்த பகுத்தறிவும் பொது புத்தியும் எப்படி சாதிய-மத வாதிகளின் அறிவிலிருந்து மேம்பட்டது என்பதையும், பெரியார் எப்படி எப்போதும் சமத்துவத்தையும் பகுத்தறிவையும் தன் இரு கண்களாகக் கொண்டு சமூக பணியாற்றினார் என்பதையும் விளக்கினார். பெரியார் தனது கொள்கை உறுதிக்கு நேர்-எதிராக இருப்பவர்களுடனும் ஒரே மேடையில் அமர்ந்து, அவர்களுக்கு சவால்கள் விட்டு, அவர்களின் சவால்களுக்கும் அறிவார்ந்த பதில் அளித்தார். இந்து மத மடாதிபதி சங்கராச்சாரியர் அவர்களுடனும் ஒரே மேடையில் அமர்ந்து பேசத் தயார் என்று தன் அறம் சார்ந்த கொள்கைப் பிடிப்பை வெளிப்படுத்திய உறுதியாளர். அவரது எழுத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் தாண்டி தற்போது மற்ற இந்திய மொழிகளிலும், குறிப்பாக இந்தி மொழிகளிலும் மொழிப் பெயர்க்கப்பட்டு கொண்டிருப்பது ஒரு வரவேற்கத்தக்க நல்ல வளர்ச்சி என்றும் டாக்டர்.வா.கீதா குறிப்பிட்டார். இந்த மொழிப் பெயர்ப்பு முயற்சி, இந்தியாவில் சமீப காலங்களில் கட்டமைக்கப்படும் ஒற்றை கலாச்சார இந்துத்துவ சிந்தனையை சவால் செய்யக் கூடிய கருவியாக இருக்கும் என்றார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தமிழகத்தின் அவலநிலையும், ஆட்சியாளர்களின் அலட்சியமும்!


Siragu avasara kaala2
கடந்த சில ஆண்டுகளாகவே நாம் கவனித்து வருகிறோம். நம் மாநில அரசு, மக்களுக்காக ஆட்சி செய்யும் அரசாக சிறிது கூட இயங்கவில்லை என்பது தெளிவான ஒன்று. அனைத்துத் துறைகளிலும் ஊழல் மயம். அதோடு மட்டுமல்லாமல், முழு அதிகாரத்தையும் மத்திய மோடி அரசிடம் இழந்து நிற்கிறது. மத்திய அரசு செய்யும் அனைத்து காரியத்திற்கும் தலையாட்டிக்கொண்டு, கைகட்டி சேவகம் புரிந்துகொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்திற்கு எவ்வித நன்மையும் நடக்கவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. மேலும் தமிழ்நாட்டை விரோத மனப்பான்மையுடன் தான் பார்க்கிறது மத்திய பா.ச.க அரசு.
சாமானிய மக்கள் வாழ்வதற்கான அறிகுறிகள் சிறிதும் தென்படவே இல்லை. அவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றன. விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறு, குறு வணிகர்கள், என அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, துன்பப்படுத்தப்படுகிறார்கள். இயற்கை வளங்களையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. மீத்தேன், கெயில், நியூட்ரினோ, கூடங்குளம் என ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கனிம வளங்களை அழிப்பதில் குறியாய் இருக்கும் மத்திய அரசிற்கு சிரம் தாழ்த்தி வணங்கி, சொந்த மாநில மக்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது ஆளும் அதிமுக அரசு. மேலும் ஆற்றுமணல் முழுதும் சுரண்டி எடுக்கப்பட்டு, நீராதாரத்தையும் கெடுத்துள்ளனர்.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 21 September 2018

கவிக்குயில் (சிறுகதை)


siragu kuyil1
ஒரு ஆலமரத்தில் குயில் ஒன்று வசித்து வந்தது. ஒருநாள், இரண்டு வழிப்போக்கர்கள் அந்த மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறினார்கள். அப்போது தற்செயலாய் அவர்கள் மரத்தில் இருந்த குயிலைப் பார்த்தார்கள். அவர்கள் இருவரின் பேச்சும் குயிலைப் பற்றித் திரும்பியது.
“தன்னோட முட்டையக் கூடக் குயில் தானே அடைகாத்துக் குஞ்சு பொறிக்குறதுல்லை! திருட்டுத்தனமாகாகத்தோட கூட்டுல முட்டைய இட்டுட்டு வந்துரும்! காகம்தான் குயிலோட முட்டையையும் சேர்த்து அடை காக்குது! குயில் சரியான சோம்பேறிப் பறவை!”–என்றார்கள் அந்த வழிப்போக்கர்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த குயிலின் முகம் வாடிவிட்டது. “என்னோட முட்டையை நான் அடை காக்குறதில்லைங்குறது உண்மைதான்! ஆனா இத எப்படி மாத்துறது? இந்த வழிப்போக்கர்கள் சொல்றமாதிரி நான் சோம்பேறிப் பறவை தானா?”–என்று குயில் வருத்தப்பட்டது. மற்ற பறவைகளைப் பற்றி மனிதர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பியது அந்த அப்பாவிக்குயில்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 20 September 2018

அமெரிக்காவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட வ.உ.சிதம்பரனார் 146 ஆவது பிறந்த நாள் விழா


Siragu va.vu.si2
கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் திரு. வ. உ. சிதம்பரனார் அவர்களின் 146வது பிறந்த நாள் விழா செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவரில் முதன்முறையாக இனிதே கொண்டாடப்பட்டது. இது போன்ற விழாக்கள் தமிழ்ப் பெருந்தகைகளைப் பற்றிய செய்திகளை இளம் தலைமுறையினருக்கு கடத்துவதற்கான நோக்கத்தில் நடத்தப்படுவனவாகும். இந்த நோக்கத்தில் முதன் முதலாக கடந்த ஏப்ரல் மாதம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தற்போது வ.உ.சி. அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

வ. உ.சி அவர்களின் பிறந்த நாள் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. பிறகு குழந்தைகளுக்கான வ. உ.சி அவர்களின் வரலாறு குறித்த வினாடி வினா போட்டி, வ.உ.சி அவர்களின் மார்பளவு உருவப்படத்தை வரையும் போட்டி மற்றும் பெரியவர்களுக்கான பேச்சுப் போட்டி ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு. ந.க.இராஜ்குமார் வினாடிவினாப் போட்டியை சிறப்பாக வடிவமைத்து திறமையாக நடத்தினார். இப்போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமாகக் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 19 September 2018

“நான் யார்?” — பெரியார் தன்னைப்பற்றி கொடுத்த விளக்கம்


periyar
பெரியார் யார்? அவர் தமது வாழ்க்கையின் குறிக்கோளாக எவற்றைக் கருதினார்? அவரது கொள்கைகள் யாவை? இது போன்ற கேள்விகள் பெரியார் வழி நடக்க விரும்புவோருக்குத் தெளிவாக அவரது எழுத்தின் மூலம் புரிந்தாலும், அவரைக் குறித்து அவரே என்ன சொல்கிறார் என்பதை அறியாமல், அவற்றை அறிவதிலும் அக்கறை கொள்ளாமல், பலர் பலவிதமாகப் பேசுவதைக் கேட்டு தங்கள் கருத்தை வளர்த்துக் கொள்வோரே இந்நாளில் பலர்.

அவர் பிறந்து 139 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பெரியாரின் 140 ஆவது பிறந்த தினம் துவங்கிய இந்த ஆண்டில் அவரது வாழ்வையும், அவரது நோக்கத்தையும், அவரது கொள்கைகளையும் தங்களது அரசியல் ஆதாயத்திற்காகக் கொச்சைப்படுத்திப் பேசும் இன்றைய இளைய தலைமுறையினர் அதிகரிக்கின்றனர். ஒருவர் இன்று மறைந்தால் அடுத்த மாதம் அவரை யாரும் நினைத்திருக்கும் நிலை கிடையாது என்பதே இன்றைய உலக வழக்கு. இருப்பினும், பெரியாரின் பெயரைக் கேட்டாலே இன்றும் கதிகலங்கும் கூட்டத்தைப் பார்க்கும்பொழுது, சிலிர்த்துக்கொண்டு எதிர் விவாதத்திற்குக் கிளம்புவோரைக் காணும் பொழுது அவரது ஆதரவாளர்களுக்கு ஒருவகையில் உள்ளூர மகிழ்ச்சியே ஏற்படும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.