Monday 29 February 2016

புறநானூறு கூறும் கொடைச்சிறப்பும் மன்னர்களும்


puranaanooru1
சங்ககால நூல்களுள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்ற புறநானூறு நூலானது அக்கால மக்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது. மேலும் சங்க கால மன்னர்கள் தங்களது சிறப்புகளாக பெரிதும் கொண்டிருந்த கொடைத்தன்மையானது மிக முக்கியமானதாக கருதிவந்துள்ளனர் என்பதற்கு சான்றாக பல இடங்களை ஆய்வு செய்கிறபொழுது அவர்களது கொடைத்தன்மையின் பண்பை சில புலவர்கள் ஏற்றியும் கூறியுள்ளனர். மேலும் கடையெழு வள்ளல்கள் அவர்களது ஈகைத் தன்மை பற்றி இங்கே ஆய்வு செய்யப்படுகிறது.
பாண்டியர்:
puranaanooru2
“தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!”(புறம்-6)
பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் கொடைத் தன்மையை புலவர் காரிகிழார் குறிப்பிடுகிறார். மேலும்
“———–வாழிய குடுமி! தங்கோச்
செந்நீர் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த” (புறம்-9)
என்பதன் மூலம் முதுகுடுமிப் பெருவழுதியின் கொடைச்சிறப்பு பற்றி முக்கிய ஆதாரமாக நமக்குகிடைக்கிறது.

பாண்டியன் பெருவழுதி பாணர்களுக்கு பரிசாக யானையை தந்தமையை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 28 February 2016

இரத்தம் கொதிப்பதற்கு முன் இறக்கிவிட வேண்டும்


Dr.Jerome -FI
Kaplan’s clinical hypertension என்றொரு புத்தகம். நவீன மருத்துவத்தில் இரத்தக் கொதிப்பு பற்றி எழுதப்பட்ட ஒரு முழுமையான புத்தகம் என இதை கூறமுடியும்.
இந்த நூல் இரத்தக் கொதிப்பு ஏன் ஏற்படுகிறது என்று விளக்கும்போது, “பல கோடி டாலர்கள் செலவு செய்தும், இன்னும் இரத்தக் கொதிப்பு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான முழுமையான காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை” என்கிறது.
Blood pressure measuring studio shot
இது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஏன் நவீன மருத்துவத்தில் இதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை?

ஏனென்றால் எந்த ஒரு நோய்க்கும் ஒரு கிருமியோ அல்லது ஏதேனும் வேதிப்பொருளோ காரணமாக இருக்க வேண்டும் என்று நுண்ணோக்கியின் மூலமோ அல்லது மருத்துவ ஆய்வகத்திலோ (Medical Laboratory) பகுத்துப் பார்க்கும் போக்கு உடையது நவீன மருத்துவம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 25 February 2016

நீர்வழிப் போக்குவரத்து அமைப்பு: படக்கட்டுரை

நீர்வழிப் போக்குவரத்து அமைப்பு: படக்கட்டுரை



மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 24 February 2016

முதுகுவலியைப் போக்க வழிமுறைகள்


mudhukuvali3
  1. முதுகெலும்பு வலிகளுக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்து, எனவே பூண்டு எண்ணெயை முதுகெலும்பில் தேய்த்துவர வலி குறையும்.
  2. முதுகுவலி இருப்பவர்கள் 1 கிராம் சுக்கு, 5 மிளகு மற்றும் 5 கிராம்பு சேர்த்து நீர் விட்டு தேநீர் செய்து, தினமும் 2 வேளை குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.
  3. தளுதாளி இலையுடன் பூண்டு, 
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 23 February 2016

தமிழ்மொழி ஆட்சி!(கவிதை)


vincent nerkaanal22

எல்லை யென்பதில்லை எங்கள் தமிழ்
மொழிக்கு ஈடேது ம்மில்லை- எங்கள்
தமிழ்மொழி போன்றொரு தாயு ம்மில்லை

தமிழ்மொழி போன்றொரு தந்தையு ம்மில்லை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=19900

Monday 22 February 2016

மொழி வளர்ச்சிக்கு உதவிய சமயப்பணி முயற்சிகள்


mozhi valarchchikku8
“ஆகாசமும் பூமியும் படச்சவன் சர்வமும் ஆனவனே, பிதாவே தம்பிரானே விசுவாசம். அவ்வண்ணம் என்னடே கர்த்தாவே யேசு கிறித்து அவ்வனடே புத்ரனே ஒருவனே. சுத்தமான சித்தத்தினொடெய கருணே கொண்டு கெற்பம் ஆயி: கன்னியாஸ்திரி மரியத்தில் பெறந்தவன்: போஞ்சியு பிலாத்து விதித்த விதிகொண்டு வெசனப்பட்டு: குருசினில் தூக்கிச் செத்தான்: குழில் வைத்து…”
இவ்வரிகள் காணப்படுவது 438 ஆண்டுகளுக்கு முன்னர், முதன் முதலில் தமிழ் எழுத்துருவிலேயே அச்சிலேறிய முதல் தமிழ்ப் புத்தகத்தில். போர்த்துக்கீசிய மொழியில் இருந்து ‘ஃபிரான்சிஸ் சேவியர்’ (Francis Xavier) தமிழில் மொழிபெயர்த்த மறை நூலைப் போர்த்துக்கீசியரான ‘ஹென்றிக்ஸ் பாதிரியார்’ (Portuguese Jesuit priest, Henrique Henriques, 1520–1600) பதிப்பித்தார். தமிழ் அச்சு நூலின் தந்தை எனவும் இவர் போற்றப்படுகிறார். இவர் முயற்சியால் கொல்லத்தில் தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டு, கோவாவில் உள்ள அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு, கொல்லத்தில் 1578-ஆம் ஆண்டில் (October 20, 1578) வெளியான இந்நூலின் பெயர் “தம்பிரான் வணக்கம்” (Doctrina Christam en Lingua Malauar Tamul / Thambiran Vanakkam). இந்நூல் உருவாக நிதியுதவி அளித்தவர்கள் தூத்துக்குடியில் வாழ்ந்த மீனவர்கள். இந்திய மொழி ஒன்றில், அந்த மொழியின் எழுத்துருவிலேயே அச்சிடப்பட்ட முதல் நூல் என்ற பெருமைக்குரியது இந்தத் தம்பிரான் வணக்கம் நூல்.

mozhi valarchchikku1
தமிழுக்கு இப்பெருமை மட்டுமல்ல, ஐரோப்பிய மொழிகளைத் தவிர்த்து, முதன் முதலில் அச்சேறிய உலகமொழிகளில் முதன்மையான மொழி என்ற பெருமையைக் கொண்டதும் தமிழ் மொழியே. ‘கார்டிலா’ என்ற தமிழ் நூல் தம்பிரான் வணக்கம் நூலிற்கு முன்னரே அச்சிடப்பட்ட ஒரு தமிழ் நூல். ஆனால் அதன் எழுத்துகள் ரோமன் எழுத்துகளால் ஆனவை. இக்கால ஃபேஸ்புக்கில் ‘வணக்கம்’ என்பதைத் தமிழ் மக்கள் ஆங்கில எழுத்தில் ‘vanakam’ என ஒலிபெயர்த்து (transliteration) எழுதிக் கொண்டிருப்பது போல ரோமன் எழுத்துகளில் தமிழ் அச்சிடப்பட்டது. கோவாவில் முதலில் அச்சுக்கூடம் அமைப்பதற்கும் முன்னரே இந்தியாவின் எல்லைக்கு வெளியே, 1554 ஆம் ஆண்டு (February 11, 1554) லிஸ்பன் நகரில் அச்சிட்டு வெளியானது கார்டிலா என்ற ‘லூசோ சமய வினா விடை’ என்ற இந்த நூல் (Carthila e lingoa Tamul e Portugues). இதுவும் கிறித்துவ சமய நூலே, இந்த நூல் தமிழறியாத போர்த்துக்கீசிய பாதிரியார்கள் தமிழ் உச்சரிப்பில் வேத வாசகங்களைக் கூறுவதற்காக ஐரோப்பிய மொழிக்கு எழுத்துமாற்றம் செய்யப்பட்டது. எனவே, 450 ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழின் அச்சு நூல் வரலாற்றின் துவக்கம்தான் கார்டிலா. மலபார் தமிழில் எழுதப்பட்டது என்ற குறிப்பு கொண்ட இந்த நூலின் உருவாக்கத்தில் பங்கேற்றவர்கள் தூத்துக்குடியில் வாழ்ந்த வின்சென்ட் நாசரேத், ஜோஜ் காவல்கோ, தாமஸ் குரூஸ் (Vincente de Nazareth, Jorge Carvalho and Thoma da Cruz) என்ற மூன்று தமிழர்கள். இந்த வரலாற்றுத் தகவல்களை வெளிக்கொணர்ந்தவர் தனிநாயகம் அடிகள் ஆவார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மண்ணின் மக்களே தமிழ் அச்சு நூல் உருவாக்கத்தில் நன்கொடையும், உழைப்பையும் நல்கியிருக்கிறார்கள் என்பது வியப்பைத் தரும் ஒற்றுமை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 21 February 2016

ஏழைகளின் ஊட்டி ஏலகிரி


yelagiri1

வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள ஏலகிரி மலை சென்னையிலிருந்து ஐந்து மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது. ஏழைகளின் ஊட்டி என்று வர்ணிக்கப்படுகிற மலை மேல் அமைந்துள்ள இந்தப்பகுதி, தரைமட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் அமைந்துள்ள இந்தப் பகுதி, துளியும் மாசு இல்லாத இடம். முற்றிலும் யூகலிப்டஸ் மரங்கள், பழத்தோட்டம், மலர்த்தோட்டம், புள்வெளிகள் என மனதை கவரும் விடயங்கள் ஏராளம் உள்ளன. இந்த மலையில் மட்டுமே 15 குக்கிராமங்கள் உள்ளன.
பூங்கனூர் ஏரி படகு சவாரி, இயற்கையாக உருவாக்கப்பட்ட பூங்கா, நடனமாடும் நீர் ஊற்று, மலை சவாரி என குதூகலமூட்டுகிறது. விடுமுறை தினமாக சனி, ஞாயிறு என்றாலே சென்னை, பெங்களூர் என பல இடங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குவிகிறது.

yelagiri5
இங்கு எந்த வித மருந்துகளும் சேர்க்கப்படாத பல வித பழ வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. பன்னீர் கொய்யா(கொய்யா போன்ற வடிவமைப்பில் உள்ளே கொட்டை உள்ளது. மிதமான தித்திப்புடன் சாப்பிடுவதற்கு அத்தனை ருசியாக உள்ளது).

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 18 February 2016

உரக்க கேட்கின்றோம்??(கவிதை)


urakkak-ketkirom3


மெய்யாய் பொய்யாய்
மேதினியில் மனிதர் வாழ்வு
ஓடிக் கொண்டிருக்கும் …
மெய்யை உழைப்பாய்
ஒரு உயிர் தந்து கொண்டிருக்கும்…
இருட்டின் விளிம்பில்
இருண்டு போகும் வாழ்க்கை …
எனினும் மருட்சியில் மாளாது
துணிந்து தூய மனம் போராடும்;
தன்னை சதையாய் எண்ணிச்

சிதைத்து உண்டவனெல்லாம்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=19759

Wednesday 17 February 2016

கால்பந்து தமிழச்சி!


kaalpandhu1
தமிழகத்தின் முதல் சர்வதேச கால்பந்து பெண் நடுவராகத் தேர்வாகியுள்ளார் ரூபாதேவி. அவருடன் ஒரு நேர்காணல்..
உங்களைப்பற்றி?
ரூபாதேவி: திண்டுக்கல் மாவட்டம் ஒய்.எம்.ஆர்.பட்டி கிராமம்தான் எனது சொந்தஊர். அப்பா குருசாமி ஒரு மில் தொழிலாளி. அம்மா சென்னம்மாள். இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்கள். ஒரு அக்கா, ஒரு அண்ணன் இருக்கிறார்கள். அக்காள் விஜயலட்சுமியின் பராமரிப்பில் படித்து வளர்ந்தேன். திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் பி.எஸ்.ஸி., வேதியியல் மற்றும் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் சுகாதார ஆய்வாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பு முடித்துள்ளேன். ஆரம்பத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். சம்பளம் குறைவு, போட்டிகளுக்குச் செல்ல அனுமதி இல்லை போன்ற காரணங்களால் வேலையை விட்டுவிட்டேன்.
கால்பந்து போட்டி ஆர்வம் எங்கிருந்து வந்தது?

ரூபாதேவி: திண்டுக்கல் செயின்ட் ஜோசப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது மூத்த மாணவர்கள் விளையாடுவதைப் பார்த்துத்தான் எனக்கு கால்பந்தில் ஆர்வம் வந்தது. அப்போது நடந்த போட்டி ஒன்றில் வெற்றி பெற்றது ஆர்வத்தை அதிகமாக்கியது. என் பயிற்சியாளர் ஜஸ்டின் ஆரோக்கியராஜ் என்னை ஊக்கப்படுத்தி நிறைய பயிற்சிகள் கொடுத்தார். பள்ளியில் படிக்கும்போது திண்டுக்கல் அணி சார்பாக மாவட்டப்போட்டிகளில் விளையாட ஆரம்பித்தேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 16 February 2016

சொரியாசிஸ் எனப்படும் காளாஞ்சகப்படை(Psoriasis)


Dr.Jerome
தோல் நோய்களில் ஒன்றான சொரியாசிஸ் (Psoriasis) எனப்படும் காளாஞ்சகப்படை நோய் வெண்பருச்செதில் மற்றும் செதில் உதிர் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.
வெள்ளைக்காரர்களிடம் 2% காணப்படும். இந்நோய் ஆப்பிரிக்கர்களிடமும், ஆசியர்களிடமும் அதைவிடக் குறைவாகவே காணப்படுகிறது.
நோயின் தன்மை:
Psoriasis6
தோலில் வெள்ளை நிறத்தில் பளபளப்பான செதில்கள் போன்று உருவாகும் படைகள் தோன்றும்.

இந்தப் படைகளின் உருவமும், அளவும், வடிவமும் ஆளுக்காள் வேறுபடும். இது உடலில் எந்த இடத்திலும் தோன்றலாம். பெரும்பாலும் தலை மற்றும் உடலில் தோன்றும், சிலருக்கு நகங்களை பாதித்து நகத்தில் பள்ளங்களும், குத்தியது போன்ற குழிகளும் தோன்றும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 15 February 2016

தோழமை தொண்டு நிறுவன இயக்குனர் தேவநேயன் அவர்களின் நேர்காணல்: இறுதிப் பகுதி


devaneyan3
கேள்வி: இன்றைக்கு குழந்தைகளுக்கு பள்ளிகளில் தரமான கல்வி, சத்தான உணவு, விளையாட போதிய அனுமதியும் உண்டா? இதை உங்கள் பார்வையில் எப்படி பார்க்கிறீர்கள்?
devaneyan1
பதில்: இன்றைய சூழலில் முதலில் ஆரம்பப்(Nursery) பள்ளிக்கூடமே, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்று நினைக்கிறேன். இன்றைக்கு Nurse கையிலிருந்து குழந்தையை வாங்கியதும், ஆரம்பப்(Nursery) பள்ளிகளில் சேர்த்துவிடவேண்டும் என்கிற தவறான மனப்பாங்கு எல்லா இடத்திலும் இருக்கிறது. இது அயோக்கியத்தனமான செய்தி என்று நான் சொல்கிறேன், இதுமிகவும் கோபத்தில் சொல்கிற விடயம். அப்படிப் பார்க்கும்பொழுது, மிகவும் அடிப்படையான ஒன்றாக நான் எண்ணுவது என்பது, ஒரு ஆரம்பப்(Nursery) பள்ளிக்குச் செல்கிற குழந்தைக்கும், குழந்தை பராமரிப்பு மையம் என்று சொல்லப்படுகிற குழந்தை மையங்கள், குழந்தை பாதுகாப்பு மையம், குழந்தை நல மையம் என்று சொல்லப்படுகிற அங்கன்வாடிக்கு செல்கிற குழந்தைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தாலே, எந்த அளவிற்கு நாம் குழந்தை உரிமைகளை மீறுகிறோம் என்பது புரியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 14 February 2016

நோய் விரட்டும் மூலிகை உணவகம்


mooligai-unavagam4
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மூலிகை உணவகத்தில் ஆவாரம்பூ சாம்பார், வேப்பம்பூ ரசம்,  கீரை, பொரியல், வாழைப்பூ வடை, பிரண்டைத் துவையல், மூலிகை மோர் என அனைத்து வித்தியாசமான சுவையுடன் பெண் பணியாளர்கள் பரிமாறுகிறார்கள். இது மட்டுமல்ல காலை உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவையும் மூலிகைகளால் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
காலையில் தயாராகும் மூலிகை இட்லி, கம்பு தோசை,  மாலை மூலிகை தோசை, திணை அல்வா, உளுந்தங்களி, சோளமாவு பணியாரம், கேழ்வரகு புட்டு,  உடலுக்கு வலு சேர்க்கும் நில வேம்பு கசாயம், சர்க்கரை நோய்க்கான ஆவாரைக் கசாயம், வேம்பு கசாயம், கொள்ளு ரசம், தூதுவளை சூப், கேழ்வரகு புட்டு, சிறு பருப்பு பாயசம், மூலிகை தேநீர் ஆகியவை எங்களுடைய சிறப்பான வகைகள்.

mooligai-unavagam3
நாள் ஒன்றுக்கு பொதுமக்கள், சென்னை சென்ட்ரல் ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள், அலுவலர்கள், அல்லிக்குளம் நீதிமன்ற ஊழியர்கள், காவல் ஆணையரக பணியாளர்கள், நேரு அரங்கத்தில் உள்ளவர்கள் என நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் வந்து  சாப்பிட்டுச் செல்கிறார்கள்.  எந்தெந்த மூலிகையால் என்னென்ன பயன் என்று போர்டிலும் எழுதி வைத்து இருக்கிறார்கள். உணவகத்தின் முன்பு மூலிகை மற்றும் மூலிகைப் பொடிகளும் விற்பனை செய்யப்படுகின்றன.  ஒரு முறை இங்கு வந்து சாப்பிட்டு செல்பவர்கள் மறுமுறை கட்டாயம் எங்களைத் தேடி வருவார்கள். காரணம் இந்த மூலிகைகளின் அற்புதம் அப்படி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 11 February 2016

சங்கப் பாடல்களை அறிவோம்: குறுந்தொகையின் 148 ஆவது பாடல்


sangappaadalgal 1
காதலும், பிரிவும், அதைச் சார்ந்த மனித மன உணர்வுகளும் நூற்றாண்டுகள் கடந்தாலும் நூறு கோடி ஆண்டுகளானாலும் தொடர்ந்து கொண்டிருப்பன என்றும், மாறா தன்மையன என்றும் சொல்லாமல் சொல்லி நிற்கின்றன நம் சங்க இலக்கியங்கள்.
கார்காலம் வந்துவிட்டது; ஆனால், கார்காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. தோழியோ, ‘இது கார்காலம் அன்று’ என்று கூறுகின்றாள். விடுவாளா தலைவி? கொன்றையும் குருந்தும் மலர்ந்திருக்கின்றன; குளிர்க்காற்று வேறு. இந்தப் பருவத்தைப் போய் ‘கார்காலம் அன்று’ என்று நீ சொன்னால் எப்படி? என்னிடமே நீ தவறாகக் கூறலாமோ? என்று அழகாகச் சாடுகின்றாள் தலைவி.

தலைவிக்கும் தோழிக்கும் இடையே நடக்கும் சொல் நாடகத்தைப் பார்ப்போமா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 10 February 2016

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் !!


puratchi kavignar1
தனக்குப்பின் ஒரு கவிப் பரம்பரையினரை உருவாக்கியதில் முதன்மையானவர் பாரதிதாசன் அவர்கள். அவரின் கவிதை வரிகளில் அனல் தெறிக்கும். குறிப்பாக பெண்ணியம் குறித்தும், பெண் கல்வி குறித்தும், பெண்களின் முன்னேற்றம் குறித்தும்  அவர் எழுதிய கவிதைகள் பழமைவாதிகளின் ஆதிக்கத்திற்கு சவுக்கடியாக இருந்தது எனின் அது மிகையன்று!!
புவிப்பெரியான் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா உரைத்த
   பொன்மொழியைக் கேளுங்கள் நாட்டில் உள்ளீர்!
“உவந்தொருவன் வாழ்க்கைசரி யாய்நடத்த
   உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்!
அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான்!”
   அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்!
குவியுமெழிற் பெண்களுக்கே ஊறுசெய்யும்
   குள்ளர்களே, கேட்டீரோ ஷாவின் பேச்சை!
என்று “பெண்களைப் பற்றிப் பெர்னாட்ஷா” என்ற  கவிதையில், கேள்வி எழுப்புகிறார் புரட்சிக் கவிஞர் அவர்கள்.

puratchi kavignar3
விதவைகள் மறுமணம் குறித்து எழுதும் போது ஒரு பெண் தன் துணை இழந்து தவிக்கும் தவிப்பினை “கைம்மைப் பழி” என்ற கவிதையில்,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 8 February 2016

வெறுப்பூட்டும் கேள்வி: நீ எங்கிருந்து வருகிறாய்?


veruppoottum1
சில இனவெறிச்செயல்கள் அதிகத் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தாததாகவும், மறைமுகமானதாகவும் இருப்பதுண்டு. அதைச் செய்பவருக்கும் தன்னால் ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்பது தெரியாது; பாதிக்கப்படுபவருக்கும் தன் மனதை அது வருத்தும் காரணம் தெளிவாகப் புரியாத அளவுக்கு நுட்பமான செயலாக அது அமைந்திருக்கும். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று ஆசிய அமெரிக்க குடிமக்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருவது. அது சீனா, கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட கிழக்காசிய வழித்தோன்றல்களாக இருந்தாலும் சரி அல்லது இந்தியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா போன்ற தெற்காசிய நாடுகளின் வழித்தோன்றல்களாக இருந்தாலும் சரி; புலம் பெயர்ந்த தங்களது முன்னோர்கள் எதிர்கொண்ட “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்ற அதே கேள்வியையே அமெரிக்க நாட்டில் பிறந்து அமெரிக்க குடிமக்களாகவே தங்களைக் கருதி வாழ்ந்து வரும் பிற்காலத் தலைமுறையினரும் எதிர்கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் அயல்நாட்டில் இருந்து வந்து குடியேறிய பெற்றோர்களுக்கு அமெரிக்க மண்ணில் பிறந்த “முதல் தலைமுறை அமெரிக்கர்கள்” (The first generation Americans) ஆக இருந்தாலும், முதல் தலைமுறை அமெரிக்கர்களுக்குப் பிறந்த தொடர்ந்து வரும் இரண்டாம், மூன்றாம் தலைமுறை அமெரிக்கர்களாக இருந்தாலும் சரி, விதிவிலக்கின்றி அவர்கள் ‘நீ எங்கிருந்து வருகிறாய்’ என்றக் கேள்வியை எதிர் கொள்வார்கள். அதற்குக் காரணம் வெளிப்படையாகத் தெரியும் அவர்களது ஆசிய இனத்தைக் குறிக்கும் தோற்றம்.

Business accusations
இதனைப் புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் திரு. வ.ந. கிரிதரன் அவர்கள் ‘நீ எங்கிருந்து வருகிறாய்? என்ற தனது கதையிலும் குறிப்பிட்டுள்ளார். பொதுவாகப் புலம் பெயர்ந்து வருபவர்கள் இக்கேள்வியை முதலில் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஏனெனில் அதுதான் உண்மையும் என்பதால் அவர்களுக்கு அக்கேள்வி முதலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. காலப்போக்கில் தன்னை அந்நாட்டின் குடியுரிமை பெற்றவராக ஆக்கிக் கொண்டு, அவ்வாறே வாழத் துவங்கியதும், அக்கேள்வியின் அடிப்படை இனபேதம் கொண்டதாக இருக்குமோ என்று சந்தேகிக்கும் நேரங்களும் உண்டு. ‘உன்நாட்டிற்குத் திரும்பிப் போ’ அல்லது ‘நீ எங்களில் ஒருவர் அல்ல’ போன்ற மறைமுகப் பொருள் பொதிந்திருப்பதாகக் கூட கருதும் நிலையும் சில மோசமான சூழ்நிலைகளில் ஏற்படக் கூடும். தனது பணி வாய்ப்பு, அதில் முன்னேற்றம் போன்றவற்றில் தாங்கள் தட்டிக்கழிக்கப்பட நேர்ந்தால் தங்களது புலம் பெயர்ந்த பின்னணி அதற்குக் காரணமாக இருப்பதாகவும் ஐயுறுவதுண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 7 February 2016

தோழமை தொண்டு நிறுவன இயக்குனர் தேவநேயன் அவர்களின் நேர்காணல்: பகுதி 2


devaneyan3
கேள்வி: உரிமை சார்ந்து தமிழகத்தில் குழந்தைகளின் நிலைமை என்ன?, இதற்கு களப்பணி செய்யவேண்டியுள்ளதா?, அரசு இதில் போதிய கவனம் செலுத்துகிறதா?
பதில்: உலகத்தில் முதலில் எளிதில் நாசமாக்கப்படும், சூறையாடப்படும் பட்டியலில் முதலிடத்தில் இருப்போர் குழந்தைகள் என நான் முதலிலேயே சொன்னேன். கண்டிப்பாக அவர்களுக்கு உரிமை சார்ந்த, அவர்களுக்காக உரிமை சார்ந்த களப்பணி ஆற்றுவது என்பது அனைவரின் கடமையாகும். இதில் பல்வேறு கடமையாளர்கள் இருக்கிறார்கள். குழந்தை உரிமைகளை பாதுகாப்பதில் முதல் கடமையாளர் யார் என்றால் அரசுதான். இரண்டாவது கடமையாளர் சமூகம், மூன்றாவது கடமையாளர் குடும்பம் என்று போய்க்கொண்டிருக்கும். முதல் கடமையாளராக இருக்கிற அரசு தன்னுடைய கடமைகளை முழுமையாக செய்கிறார்களா? என்று கேள்வி கேட்டால், மிகப்பெரிய அபத்தமான செய்திதான் இன்றைக்கு. எல்லா இடங்களிலும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிற குழந்தை மீதான வன்முறை, குழந்தை மீதான உரிமை மீறல்கள் இரண்டையும் நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது. குழந்தை உரிமைகளைப் பற்றி பேசும்பொழுது, இரண்டு செய்தியை நாம் முக்கியமாகப் பார்க்கவேண்டும். ஒன்று வன்முறை அதாவது அந்த குழந்தை மீது நடத்தப்படுகிற வன்முறைகள், மற்றொன்று குழந்தை மீதான மறுப்புகள். நாம் வன்முறைகளைப் பற்றி நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம்.
devaneyan19
இயல்பாகவே குழந்தைகளை வன்முறையாளராக நம் சமூகம் கொண்டிருக்கிறது. என்னை என்னுடைய அப்பா அடித்தார், அப்பா அடித்தார் என்று. இங்கு அடித்தல் என்பது நியாயமாக்கப்பட்டிருக்கிறது. அடியாத மாடு படியாது?, அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான், முருங்கையை ஒடிச்சு வளர்க்க வேண்டும், குழந்தையை அடிச்சு வளர்க்க வேண்டும் என்கிற பழமொழிகள்கூட வெளிப்படுத்துவது என்னவென்றால், இயல்பாக நாம் குழந்தைகளை நசுக்கலாம், சூறையாடலாம் என்பதுதான். இயல்பாக அடிப்பதற்கும் படிப்பதற்கும் சம்பந்தம் உண்டா?. அடிப்பதற்கும் படிப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது?, அது தவறான கற்பிதம்.
அடிமைகளாக இருக்கும்பொழுது அடித்தார்கள், சுதந்திரம் பெற்ற தேசத்தில் நாம் எப்படி அடிப்பது என்பது அனைவருக்கும் தடை செய்யப்பட்டிருக்கும் பொழுது, குழந்தைகளுக்கு தடை செய்யப்படவேண்டும் என்ற சூழல் இருந்தாலும்கூட, இன்றைக்கு எல்லா நிலைகளிலும் நம் தமிழ்நாட்டில் அதிகபட்சமான குழந்தை உழைப்பாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள், குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள், சாதி ரீதியான வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள், புறக்கணிக்கப்படுகிற குழந்தைகள் இருக்கிறார்கள், கடத்தப்படுகிற குழந்தைகள் இருக்கின்றார்கள், இப்படி பல்வேறு வடிவங்களால் குழந்தைகளுக்கான உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

SAM_2957; Gujarat, Rajasthan, India; 05/22/2008, INDIA-11398
இன்றைக்கு எல்லா இடங்களிலும் குழந்தை உழைப்பாளர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதைத் தடுப்பதற்கான முதல் கடமையாளரான அரசு இதை செய்கிறதா என்று பார்த்தால், குழந்தைகளுக்கான அரசு அமைப்புகள், இதற்காக இருக்கிற பாதுகாப்பு அமைப்புகள் அத்தனையும் முழுமையாக இயங்கியிருந்தால், எந்த இடத்திலும் குழந்தை உழைப்பாளர்கள் இல்லாமல் இருக்க முடியும். இன்றைக்கு கட்டாயக்கல்வி உரிமை சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறதா என்றால், அமல்படுத்தப்பட்டு இருந்தால் எந்த குழந்தையும் சாலையோரத்திலோ அல்லது நிறுவனங்களிலோ அல்லது சிறு, குறு நிறுவனங்களிலோ வேலை செய்ய முடியாது. ஆனால் இன்றைக்கு எல்லா இடத்திலும் வேலை செய்கிறார்கள் என்றால் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று அர்த்தம். குழந்தை உழைப்பாளர் தடுப்புச் சட்டம் ஒழுங்காக வேலை செய்திருந்தால், எங்கேயும் குழந்தை உழைப்பாளர்கள் இருக்க மாட்டார்கள். கடத்தப்படுகிற குழந்தைகளுக்கான சட்டம் (ITPA Act) ஒழுங்காக வேலை செய்திருந்தால், இன்று எங்கேயும் கடத்தப்பட்டிருக்க மாட்டார்கள். பாலியலுக்கான பிரச்சனைகள் பார்த்தீர்கள் என்றால், இன்றைக்கு பாலியல் சுரண்டல் என்பது மிகவும் மோசமாக நடந்துகொண்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 3 February 2016

சங்கப் பாடல்களை அறிவோம்: குறுந்தொகையின் 28 ஆவது பாடல்


sangappaadalgal fi
காதலனைப் பிரிந்திருக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை அப்படியே பாடலில் படம்பிடித்துக் காட்டமுடியுமா? என்றால், முடியும் என்கின்றார் நம் ஔவைப் பாட்டி.
தலைவனைப் பிரிந்திருக்கின்றாள் தலைவி. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அங்கும் இங்கும் அலைபாய்கிறது மனம். ஆற்றொணாத் துயரிலிருக்கும் தலைவி, தோழியிடம் சொல்கிறாள் இப்படி!

முட்டுவேன்கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல் எனக் கூவுவென் கொல்?
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவுநோய் அறியாது, துஞ்சும் இவ்ஊர்க்கே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 2 February 2016

கோட்டுத் தத்துவம்: சிறுகதை


kottu thaththuvam1
ஆசிரியர் ஆறுமுகம் தனது கைப்பையை வகுப்பறையில் மறந்து விட்டுவிட்டார். அவர் எட்டாம்வகுப்பு ஆசிரியர்; அதை எடுப்பதற்காக வகுப்பறைக்குப் போனவருக்கு ஒரு அதிர்ச்சி; விளையாட்டு வகுப்பு என்பதால் மாணவர்கள் அனைவரும் விளையாடச் சென்றிருந்தார்கள். திவாகர் மட்டும் இருந்தான்; உடல்நலம் சரியில்லாத மாணவர்கள் விளையாடச் செல்லாமல் வகுப்பறையில் ஓய்வெடுப்பது வழக்கம்; ஆனால் திவாகர் அவ்வாறு இல்லை; அவன் வேறு ஒரு மாணவனின் பையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து தனது பையில் அவசர அவசரமாக ஒளித்து வைத்துக்கொண்டிருந்தான். திவாகர் நன்றாகப் படிக்கும் மாணவன்தான்; வகுப்பில் அவன் எப்போதும் இரண்டாவது நிலையில் இருப்பான். அவன் முதலாவது நிலை எடுக்கும் தினேஷ் என்ற மாணவனின் பையிலிருந்துதான் அந்தப் புத்தகத்தை எடுத்தான். வகுப்பறையை விட்டுச்சென்ற ஆசிரியர் மீண்டும் அங்கே வருவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. வெலவெலத்துப் போய்விட்டான். பயத்தில் அவன் கைகால்கள் நடுங்கின.
“நீ என்ன பண்ணிக்கிட்டுருக்குற? உண்மையச் சொல்லு!”- ஆறுமுகம் அதட்டிக் கேட்டார்

“எவ்வளவு சிரமப்பட்டுப் படிச்சாலும் என்னால தினேஷை முந்த முடியல! அவன் ஒவ்வொரு பாடத்தையும் புக்ல மார்க் பண்ணித்தான் படிப்பான்! அவனோட புத்தகத்த எடுத்து ஒழிச்சு வைச்சுட்டா பரீச்சையில் அவன் படிக்க முடியாம திண்டாடுவான்! நாம அவனை முந்திரலாம்னு நினச்சு இப்படி செஞ்சேன் சார்!”- என்று அழுது அரற்றியபடி உண்மையை ஒத்துக்கொண்டான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 1 February 2016

கலை மூலமாக சிரமப்படுபவர்களுக்கு உதவும் பெண் ஓவியர்


kalai3
நமது சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு, தனது ஓவியங்கள் மூலமாக குரல் கொடுத்து வருபவர் ஓவியர் ஸ்வர்ணலதா. இவரது ஓவியங்கள் உலகெங்கும்  பாராட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஓவியர் திருமதி ந.ஸ்வர்ணலதா பெண்கள்  மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு  அமைச்சகம் முகநூலுடன் சேர்ந்து நடத்திய 100 இந்தியப்  பெண் சாதனையாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பெண் சாதனையாளர்கள் முகநூல்  வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஸ்வர்ணலதாவிற்கு கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்த முயற்சிக்கும் சாதனைக்காக இந்த விருது கிடைத்திருக்கிறது.
அவரிடம் நடத்திய நேர்காணலின் போது பல விடயங்களை மனம் திறந்தார்.
kalai2

ஓவியத்தின் மீது ஈர்ப்பு வந்தது எப்போது?

ஓவியர் ஸ்வர்ணலதா: நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சிங்கப்பூர். திருமணம் முடித்து வந்த இடம் தமிழ்நாடு. பள்ளியில் படிக்கும் போதே பலவிதமான ஓவியங்களை வரைவேன். ஆனால் என்னால் தொடர்ச்சியாக அதன் மீது கவனம் செலுத்த முடியவில்லை. திருமணத்திற்குப் பிறகு ஓய்வாக இருக்கும் நேரத்தில் வரைய ஆரம்பித்தேன். 1998 ஆம் ஆண்டு முதல் உலகின் பல பகுதிகளில் ஓவியக் கண்காட்சி நடத்தி வந்தேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.