வேலூர்
மாவட்டத்தின் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள ஏலகிரி மலை சென்னையிலிருந்து
ஐந்து மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது. ஏழைகளின் ஊட்டி என்று
வர்ணிக்கப்படுகிற மலை மேல் அமைந்துள்ள இந்தப்பகுதி, தரைமட்டத்திலிருந்து
ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் அமைந்துள்ள இந்தப் பகுதி, துளியும் மாசு
இல்லாத இடம். முற்றிலும் யூகலிப்டஸ் மரங்கள், பழத்தோட்டம், மலர்த்தோட்டம்,
புள்வெளிகள் என மனதை கவரும் விடயங்கள் ஏராளம் உள்ளன. இந்த மலையில் மட்டுமே
15 குக்கிராமங்கள் உள்ளன.
பூங்கனூர் ஏரி படகு சவாரி, இயற்கையாக
உருவாக்கப்பட்ட பூங்கா, நடனமாடும் நீர் ஊற்று, மலை சவாரி என
குதூகலமூட்டுகிறது. விடுமுறை தினமாக சனி, ஞாயிறு என்றாலே சென்னை, பெங்களூர்
என பல இடங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குவிகிறது.
இங்கு
எந்த வித மருந்துகளும் சேர்க்கப்படாத பல வித பழ வகைகள் விற்பனை
செய்யப்படுகின்றன. பன்னீர் கொய்யா(கொய்யா போன்ற வடிவமைப்பில் உள்ளே கொட்டை
உள்ளது. மிதமான தித்திப்புடன் சாப்பிடுவதற்கு அத்தனை ருசியாக உள்ளது).
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment