Monday, 22 February 2016

மொழி வளர்ச்சிக்கு உதவிய சமயப்பணி முயற்சிகள்


mozhi valarchchikku8
“ஆகாசமும் பூமியும் படச்சவன் சர்வமும் ஆனவனே, பிதாவே தம்பிரானே விசுவாசம். அவ்வண்ணம் என்னடே கர்த்தாவே யேசு கிறித்து அவ்வனடே புத்ரனே ஒருவனே. சுத்தமான சித்தத்தினொடெய கருணே கொண்டு கெற்பம் ஆயி: கன்னியாஸ்திரி மரியத்தில் பெறந்தவன்: போஞ்சியு பிலாத்து விதித்த விதிகொண்டு வெசனப்பட்டு: குருசினில் தூக்கிச் செத்தான்: குழில் வைத்து…”
இவ்வரிகள் காணப்படுவது 438 ஆண்டுகளுக்கு முன்னர், முதன் முதலில் தமிழ் எழுத்துருவிலேயே அச்சிலேறிய முதல் தமிழ்ப் புத்தகத்தில். போர்த்துக்கீசிய மொழியில் இருந்து ‘ஃபிரான்சிஸ் சேவியர்’ (Francis Xavier) தமிழில் மொழிபெயர்த்த மறை நூலைப் போர்த்துக்கீசியரான ‘ஹென்றிக்ஸ் பாதிரியார்’ (Portuguese Jesuit priest, Henrique Henriques, 1520–1600) பதிப்பித்தார். தமிழ் அச்சு நூலின் தந்தை எனவும் இவர் போற்றப்படுகிறார். இவர் முயற்சியால் கொல்லத்தில் தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டு, கோவாவில் உள்ள அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு, கொல்லத்தில் 1578-ஆம் ஆண்டில் (October 20, 1578) வெளியான இந்நூலின் பெயர் “தம்பிரான் வணக்கம்” (Doctrina Christam en Lingua Malauar Tamul / Thambiran Vanakkam). இந்நூல் உருவாக நிதியுதவி அளித்தவர்கள் தூத்துக்குடியில் வாழ்ந்த மீனவர்கள். இந்திய மொழி ஒன்றில், அந்த மொழியின் எழுத்துருவிலேயே அச்சிடப்பட்ட முதல் நூல் என்ற பெருமைக்குரியது இந்தத் தம்பிரான் வணக்கம் நூல்.

mozhi valarchchikku1
தமிழுக்கு இப்பெருமை மட்டுமல்ல, ஐரோப்பிய மொழிகளைத் தவிர்த்து, முதன் முதலில் அச்சேறிய உலகமொழிகளில் முதன்மையான மொழி என்ற பெருமையைக் கொண்டதும் தமிழ் மொழியே. ‘கார்டிலா’ என்ற தமிழ் நூல் தம்பிரான் வணக்கம் நூலிற்கு முன்னரே அச்சிடப்பட்ட ஒரு தமிழ் நூல். ஆனால் அதன் எழுத்துகள் ரோமன் எழுத்துகளால் ஆனவை. இக்கால ஃபேஸ்புக்கில் ‘வணக்கம்’ என்பதைத் தமிழ் மக்கள் ஆங்கில எழுத்தில் ‘vanakam’ என ஒலிபெயர்த்து (transliteration) எழுதிக் கொண்டிருப்பது போல ரோமன் எழுத்துகளில் தமிழ் அச்சிடப்பட்டது. கோவாவில் முதலில் அச்சுக்கூடம் அமைப்பதற்கும் முன்னரே இந்தியாவின் எல்லைக்கு வெளியே, 1554 ஆம் ஆண்டு (February 11, 1554) லிஸ்பன் நகரில் அச்சிட்டு வெளியானது கார்டிலா என்ற ‘லூசோ சமய வினா விடை’ என்ற இந்த நூல் (Carthila e lingoa Tamul e Portugues). இதுவும் கிறித்துவ சமய நூலே, இந்த நூல் தமிழறியாத போர்த்துக்கீசிய பாதிரியார்கள் தமிழ் உச்சரிப்பில் வேத வாசகங்களைக் கூறுவதற்காக ஐரோப்பிய மொழிக்கு எழுத்துமாற்றம் செய்யப்பட்டது. எனவே, 450 ஆண்டுகளைக் கடந்துவிட்ட தமிழின் அச்சு நூல் வரலாற்றின் துவக்கம்தான் கார்டிலா. மலபார் தமிழில் எழுதப்பட்டது என்ற குறிப்பு கொண்ட இந்த நூலின் உருவாக்கத்தில் பங்கேற்றவர்கள் தூத்துக்குடியில் வாழ்ந்த வின்சென்ட் நாசரேத், ஜோஜ் காவல்கோ, தாமஸ் குரூஸ் (Vincente de Nazareth, Jorge Carvalho and Thoma da Cruz) என்ற மூன்று தமிழர்கள். இந்த வரலாற்றுத் தகவல்களை வெளிக்கொணர்ந்தவர் தனிநாயகம் அடிகள் ஆவார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மண்ணின் மக்களே தமிழ் அச்சு நூல் உருவாக்கத்தில் நன்கொடையும், உழைப்பையும் நல்கியிருக்கிறார்கள் என்பது வியப்பைத் தரும் ஒற்றுமை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment