ஞாயிற்றுக்
கிழமை காலை 6 மணி. நண்பர் ராஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுத்தால்
‘விளையாட வா’ என்றார். அவசர அவசரமாகக் கிளம்பி மைதானத்திற்கு ஓடினேன். 3
மணி நேரம் நன்றாக விளையாடிவிட்டு, களைப்போடு வீட்டிற்கு வந்தேன். மனைவி
தொலைக்காட்சியில் திரை விமர்சனம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடன்
சேர்ந்து நானும் பார்க்கத் தொடங்கினேன்.
திரையில் வந்தவரோ ஒவ்வொரு திரைப்படமாக
வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார். கடைசியாக அவ்வாரத்தில் திரைக்கு வந்த ஒரு
திரைப்படத்தை முதலிடத்தில் இருப்பதாகக் கூறினார். நிகழ்ச்சியும்
முடிந்தது. நான் வேறு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு மாற்றினேன். அங்கும்
அதே திரை விமர்சனம். ஆனால் முன்பு பார்த்த தொலைக்காட்சியில் முதலிடம்
பிடித்த திரைப்படம் இந்த தொலைக்காட்சியில் ஆறாவது இடம். எனக்கு ஒன்றும்
புரியவில்லை. அதெப்படி அந்த தொலைக்காட்சியில் முதலிடம் பிடித்த திரைப்படம்
இந்த தொலைக்காட்சியில் ஆறாவது இடம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
சூடான தேநீருடன் வந்த என் மனைவி கூறினாள், முதலிடம் பிடித்த அத்திரைப்படம்
அதே தொலைக்காட்சியால் தயாரிக்கப்பட்ட படமென்று. அப்படியென்றால்
அத்திரைப்படதிற்கான உண்மையான விமர்சனம்??????
நாம்
செய்யும் ஒவ்வொரு செயலும் மற்றவர்களால் விமர்சிக்கப்படுகின்றது. நாம்
செய்யும் ஒரு நல்ல செயல் சிலருக்குக் கெட்டதாகப் படலாம், கெட்ட செயல்
சிலருக்கு நல்லதாகப் படலாம். ஆக மொத்தத்தில் நாம் எது செய்தாலும்
விமர்சிக்கப்படுகின்றோம். இவ்வாறான விமர்சனத்தை எப்படி அணுகவேண்டும்.
நண்பரிடம் கேட்டேன். இரண்டு விதமாக அணுகலாம் என்று சொன்னார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment