துறவறம் தேவையற்றது:
இறைவனை அடையத் துறவறம் மேற்கொள்வதை
கபீர்தாசர் ஆதரிக்கவில்லை. இல்வாழ்வில் முறைப்படி வாழ்ந்தே இறைவனை
அடையமுடியும் என்பதை அவர் ஆணித்தரமாக நம்பியதும் அவரது பலபாடல்களின் வழி
தெரிகிறது.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. (குறள்: 48)
அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில்
ஆற்றுப்படுத்தி வாழும் வாழ்வு துறவற நோன்பைவிட மேலானது என்ற குறளின் கொள்கை
கபீர்தாசரின் பாடல்களிலும் எதிரொலிக்கக் காணலாம்.
குறிப்பிட்ட நோக்கமின்றி வெளியே அலைந்து திரிபவனை
அவனது இல்லத்திற்குத் திரும்ப அழைப்பவனே
உண்மையில் எனக்குப் பிரியமானவன்.
வீட்டில்தான் அன்பின் சங்கமம்.
வீட்டில்தான் வாழ்வின் நுகர்ச்சி.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment