கேள்வி: முன் மாதிரியான கிராமங்களுக்காக என்னென்ன முயற்சிகள் எடுத்து வருகிறீர்கள்?
பதில்:
மாதிரி கிராமம் என்றாலே அரசாங்கம் பேசுகிறதே அந்த மாதிரி கிராமம் இல்லை.
நன்றாக சாலை இருக்கவேண்டும், ஒரு தண்ணீர் தொட்டி இருக்கவேண்டும்
இவையெல்லாம் இருந்தால்தான் மாதிரி கிராமம் என்று நினைக்கிறார்கள். இல்லை,
சிரித்த முகங்களுடைய மக்கள் இருந்தால்தான் அது மாதிரி கிராமம். மகாத்மா
காந்தி கண்ட சிரித்த முகம் எப்பொழுது இருக்கும், பசியில்லை என்றால்
இருக்கும், தன் தேவைகள் ஓரளவிற்கு பூர்த்தி செய்யப்பட்ட குடும்பம் என்றால்
அங்கு இருக்கும் முகங்கள் சிரிக்கும். நிலைத்த புன்னகையுடைய, முகங்களையுடைய
இந்தியர்களைக் காண ஆசைப்படுகிறேன் என்கிறார் மகாத்மா காந்தி.
புன்னகை
எப்பொழுது நிலைத்த புன்னகையாகும் என்றால், ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்த
அன்று சிரிப்பார்கள், மறுநாள் அந்த ரூபாயை அவருடைய கணவன் குடித்து காலி
செய்துவிட்டால் அந்தப் பெண் சிரிக்க மாட்டார். குடியை நிறுத்த முடியாது,
ஆனால் அளவாகத்தான் குடிக்கிறார், குழந்தைகளைக் காப்பாற்றுகிறார்,
ஞாயிற்றுக்கிழமை என்றால் சிறிது குடித்துவிட்டு படுத்துக்கொள்கிறார் என்ற
அளவிற்கு இருக்கிறது. நான் மதுவிலக்குக்கு ஆதரவு என்று சொல்லமுடியாது.
ஏனென்றால் நான் குடிகாரர்களோடு பிறந்து வளர்ந்தவன், குடியை நிறுத்திவிட
முடியுமா என்னால்?, கண்டிப்பாக முடியாது. ஆனால் குடியினுடைய தாக்கத்தை
என்னால் குறைக்க முடியும். சிறிது சிறிதாக தாக்கம் குறைந்து குறைந்து குடி
நின்று போவதற்கு வாய்ப்பு வரலாம். ஆனால் அது இப்பொழுது அல்ல. இந்த மாதிரி
சீரான வளர்ச்சியைக் கொண்டுவருவதற்காக, மக்களிடம் இறங்கி களத்தில் நிறைய
வேலைசெய்ய வேண்டியதிருக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment