Wednesday 29 June 2016

சிறந்த வாழ்க்கை வாழுங்கள் !


Siragu best life2

சிறந்த வாழ்க்கை – சொல்லும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கிறது. நாக்கின் நுனி மேல் அண்ணத்தில் பட்டு ழகரத்தைச் சொல்லும்பொழுது அப்பப்பா அந்த தமிழ்ச் சுவைக்கு ஈடு இணை ஏதுமில்லை. நீங்களும் ஒரு முறை “சிறந்த வாழ்க்கை“ என்று சொல்லித் தான் பாருங்களேன், தற்காலிக சுகத்தை தமிழால் அனுபவித்து மகிழலாம். அதெல்லாம் சரித்தான் அதென்ன சிறந்த வாழ்க்கை? அப்பொழுது சிறப்பில்லாத வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதா? என்று நீங்கள் தற்சமயம் சிந்தனைக் குதிரையைத் தட்டிப் பறக்க விட்டிருப்பீர்கள்.சரி, அதை இழுத்துப் பிடித்துக் கட்டி வையுங்கள், நேராக பொருட்சுவைக்குள் அமிழ்வோம்.


சிறந்த வாழ்க்கை என்பது இப்பொழுது நீங்களும் நானும் வாழ்ந்து கொண்டிருப்பது தான் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?, வேறு வழியில்லையே நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். இதே போலத் தான் சிறப்பில்லாத வாழ்க்கை என்பதையும் நாம் தான் வாழ்ந்து வருகிறோம் என்பதையும் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காமல் மூக்கின் மீது விரல் வைக்காமல் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். அதெப்படி, குழப்பமாக இருக்கிறது என்கிறீர்களா? வாருங்கள் நம்மை நாமே ஆராய்வோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 28 June 2016

குமரி மாவட்டத்தில் இன்றைய கல்வி


entrance-exam5

கடந்த 2011-ம் வருட மக்கள்தொகை கணக்கெடுப்பின் தகவல்களின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் தொகை மொத்த மக்கள்தொகையில் 91.6% ஆகும். இது சென்னையை விட அதிகமாகும். சென்னையில் இது 90.18% ஆக உள்ளது. உண்மையில் குமரிமாவட்ட மக்கள் பெருமைப்படும் செய்தி. குமரி மாவட்டத்திற்கு இது வரமா சாபமா? பல தளங்களில் இது வரமாகவே இருக்கக் கூடும். ஆனாலும் தற்போது கல்வி பயிலும் மாணவர் சமூகத்திற்கு இது சாபமாக மாறிவிட்டதாகத் தோன்றுகிறது. ஒருவேளை வெறும் காட்சிப்பிழையோ?


சுமார் இருபது வருடங்களுக்கு முந்தைய காலத்திலேயே, குமரி மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளியில் வெற்றி பெறும் பெரும்பாலான அனைவரும், பெண்கள் உட்பட, மேல்நிலைப் பள்ளிப்படிப்புக்குச் செல்வார்கள். மேல்நிலைப் பள்ளித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் கல்லூரி பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்புக்குச் செல்வார்கள். இடையில் கல்வியை விட்டுவிடுபவர்கள் மிகக் குறைவானவர்களே. அன்று இங்கு இருந்த பெரும்பாலான பள்ளிகளும்  கல்லூரிகளும் அரசு அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளும் கல்லூரிகளும்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக வெகு சில தனியார் பள்ளிகள் மட்டும்தான் இருந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 27 June 2016

மரபணு சிகிச்சை மூலம் பார்வைக் குறைபாட்டிற்குத் தீர்வு


Siragu genetic4

பல பிறவிக் குறைபாடுகளைத் தீர்க்க மரபணு சிகிச்சையில் வழியுள்ளது என்ற நம்பிக்கை அறிவியல் ஆய்வாளர்களுக்கு உண்டு. மரபணு சிகிச்சை முறையில் தீங்களிக்காத வகையைச் சேர்ந்த நுண்ணுயிர்களான வைரஸ்கள் மரபணுவைக் கடத்தும் ஒரு கடத்தியாக (viral vector) பயன்படுத்தப்படும். வைரஸ்களின் வழியே, ஆரோக்கியமான குறைபாடற்ற மரபணுக்களோ அல்லது குறைபாடு கொண்ட பகுதி சீர் செய்யப்பட்ட மரபணுக்களோ உட்செலுத்தப்படுவதே மரபணு சிகிச்சையின் வழிமுறை. வைரஸ்களில் உள்ள அவற்றின் மரபணுக்கள் நீக்கப்படும், பின்னர் ஆய்வகத்தில் சீரமைக்கப்பட்ட மரபணுக்களோ, அல்லது ஆரோக்கியமான மரபணுக்களோ வைரஸ்களில் செலுத்தப்படும். பிறகு இந்த வைரஸ்கள் நோயாளிகளின் பாதிக்கப்பட்ட உறுப்புகளில் அறுவை சிகிச்சை மூலம் உட்செலுத்தப்படும். இதுநாள் வரை பல மரபணு சிகிச்சைகள் பரிசோதனை அடிப்படையிலேயே பெரும்பாலும் அளிக்கப்பட்டு வருகின்றன.

பரிசோதனை முறையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் குழுவினர் நடத்திய மரபணு சிகிச்சை ஒன்று, மரபணு சிகிச்சையின் மூலம் பிறவிக் குறைபாடுகளுக்கு எதிர்காலத்தில் நல்ல முறையில் நிரந்தரத் தீர்வு கிடைக்க வழியுள்ளது என்ற நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆய்வுமுறை சிகிச்சைமுறையின் முடிவுகள் “நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன்” (New England Journal of Medicine) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 26 June 2016

நாம் வாழ யானைகள் வாழவேண்டும்!


Siragu elephant2

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் யானையும், வனத்துறையால் பிடிக்கப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆண் யானையும் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நம் கண் முன்னே செழித்து வாழ்ந்த ஓர் உயிரினம் நம் வாழ்நாள் காலத்திலேயே உலகத்திலிருந்து முற்றிலும் மடிவதை சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? நாட்டின் வளம் காட்டு வளத்தில் அடங்கியிருக்கிறது. அந்த காட்டின் வளம், யானைகளிடம்தான் அடங்கியிருக்கிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிருக்கும் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. மற்ற உயிர்கள் வாழ்வதற்கான உரிமையைப் பறிக்க நமக்கு அதிகாரம் கிடையாது. அதையும் மீறி காட்டுயிர்கள் மீது இப்படி வன்முறை நிகழ்த்துவது, நமக்கு கூடுதலாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் ஆறாவது அறிவைப் பற்றி கேள்வியை எழுப்புகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 23 June 2016

கவிதைச் சோலை (பசுமை தாயகம் அமைத்திடுவோம்!, ஆண்ட புழுக்கள்!, தமிழர் வருக! வருக!)


பசுமை தாயகம் அமைத்திடுவோம்!

எழுதியவர்: இல-பிரகாசம்


Siragu-home-garden1

கல்லும் மண்ணும் கொண்டு கட்டுவதெல்லாம்
வாழ்வதற் கேற்ற வீடாகா
வீசுந் தென்றல் காற்றினை ஆக்கும்;
வீட்டுத் தோட்டம் அமைத்திடுதல்
வாழ்வதற் கேற்ற வீடாம்!

விளையாடுங் களங்களெல்லாம் சுற்றிலும்
நறுமணம் வீசும் மலர்க் கொடியை

நட்டி மனம் மகிழல் வேண்டும்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20849

Wednesday 22 June 2016

மகனும் அப்பாவும்(சிறுகதை)



Siragu-maganum-article2
குமாரின் குலத்தொழில் விவசாயம். ஆனால் அவனுக்கு விருப்பம், வேறு எங்காவது சென்று வேலைபார்க்க வேண்டும் என்பது. ஒரிசாவில் வேலை கிடைத்தது, அங்கிருந்து குஜராத். பெரிய அலுவலக வேலையொன்றுமில்லை, பட்டறை வேலைதான்.

சென்ற இடத்தில் மதாங்கியின் அழகில் மனதை பறிகொடுத்துத் திருமணம் செய்துகொண்டான். குமாரின் பெற்றோருக்கு விருப்பமில்லை. ஒரே மகன் குமாரின் திருமணத்தைக் கண்குளிர பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டனர். அவனோ திருமணம் முடிந்து, வகிடு நிறைய குங்குமமும், முக்காடும் போட்ட மதாங்கியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பெற்றோருக்கு அனுப்பி வைத்தான். மகனின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த பட்டு வேட்டி, பட்டு சட்டையைப் பார்த்து பார்த்து அழுதாள் அம்மா காமாட்சி.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.


Tuesday 21 June 2016

வாழ்க வளமுடன் !!!


Siragu- vaazhga valamudan2

நான் எப்படியெல்லாம் இருந்தேன் தெரியுமா?, நான் இப்படி ஆனதற்கு நீங்கள் தான் காரணம். என் வாழ்க்கை மாறியதற்கு நீங்கள் தான் காரணம், என் கனவைத் தொலைத்தது உங்களால் தான். நான் இப்பொழுது வாழும் வாழ்க்கை எனக்குச் சம்பந்தமில்லாத ஒன்று என்று கூப்பாடு போடும் உங்களைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன். சற்றே வாய்க்குப் பூட்டுப் போட்டுவிட்டு மனதைத் திறந்து வையுங்கள் சிறிது நேரம் மட்டும். மனதைத் திறக்கத் தெரியாவிட்டால் கண்களையாவது திறந்து படியுங்கள் அது போதும், ஆஞ்சநேயர் போல நெஞ்சைப் பிளக்க முற்பட வேண்டாம்! நீங்கள் செய்யவும் மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த உலகம் எப்படிப்பட்டதென்று முழுமையாகப் புரிந்து கொண்டால் உங்களுக்கே மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். இந்த உலகம், உங்களையே சில நேரங்களில் உங்களுக்கு எதிராக திசை திருப்பும் அற்புத குணம் கொண்டது, ஆனால் அதையும் தாண்டி நமக்கு இருக்கும் ஒரு பெரிய துணையும் பக்க பலமும் யார் தெரியுமா?, நாம் தான் அது!. அதைப் புரிந்துகொள்ளும் வரைதான் சோகங்களுக்கும் வேதனைகளும், புரிந்து கொண்டால் எல்லாம் இனி உங்கள் வசமே. அது எப்படி? இந்த உலகம் ஒரு உயிரற்ற பொருள் தானே! இது எப்படி என்னை திசை மாற்றும் என்று கேட்பீர்களானால், இந்த உலகம் என்னவோ உயிரற்றதாக இருப்பினும் உயிருள்ளவைகளை வைத்துத்தான் நம்மை  ஆட்டிப்படைக்கிறது. குழப்பமாக இருந்தால் வாருங்கள்  உங்களை ஓரிடத்திற்கு அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறேன் !

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 20 June 2016

காவிரி நாடன்ன கழனிநாடு


காவிரி பாயும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தேரெழுந்தூர் என்ற ஊர் கம்பர் பிறந்த ஊராகும். மயிலாடுதுறையில் ஓடும் காவிரி தூலா தீர்த்தம் என்று இக்காலத்தில் மக்களால் அழைக்கப்படுகின்றது. இதில் ஐப்பசி மாதத்தில் முழுகுவதன் வாயிலாக பாவங்கள் தீரும் என்றும் இந்த ஆறு கங்கை நதிக்கு ஒப்பானது என்றும் மக்கள் கருதிவருகின்றனர். கம்பர் காலத்திலும் காவிரி ஆறு கங்கைக்கு ஒப்பானது என்ற கருத்து இருந்துள்ளது. அவர் தம் காப்பியத்தில் கங்கையை நினைவு கூரும்போதெல்லாம் காவிரியையும் நினைவு கூருகின்றார். மேலும் காண்டங்கள்தோறும் காவிரியாற்றை நினைவு கூர்ந்து தன் சோழநாட்டுப் பற்றினைக் கம்பர் வெளிப்படுத்தியுள்ளார். 

சுந்தர காண்டத்தில் மட்டும்தான் வெளிப்படையாக காவிரி ஆறு பற்றிய குறிப்பு இல்லை. ஆனால் அனுமன் பொழிலை இறுத்தபோது ஆற்றில் ஆச்சாள் மரங்கள் வீசப்பட்டன என்று கம்பர் குறிப்பிடுகிறார். அந்த ஆறு காவிரியாகக் கொள்ளத்தக்கது என்று உரையாசிரியர்கள் கருதுகின்றனர். ‘‘வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம், வண்டல் அம்புனல் ஆற்றில் பாய்ந்தன’’ (சுந்தர காண்டம், பொழில் இறுத்த படலம், பா.எ. 32) என்ற பாடலடியில் காவிரியாறு சுட்டப்படுவதாக உரையாசிரியர்கள் கருதுகின்றனர்.

காவிரியும் கங்கையும் ஒன்று எனக் கருதுவதன் வாயிலாக அதன் புண்ணியத் தன்மை ஒற்றுமைப்படுகிறது என்பதை விட இரு ஆறுகளும் இயற்கையோடு செயற்கைக் கலப்பின்றி மாசின்றி இருந்துள்ளன என்பதும் அறியத்தக்கதாகும். கங்கைக் கரைக் கதை வால்மீகி இராமாயணம் என்றால் காவிரிக் கரைக் கதை கம்பராமாயணம் ஆகின்றது. கங்கையும் காவிரியும் இரு இணைகள். வால்மீகியும் கம்பரும் இரு இணைகள். இந்த இரு இரு இணைகளும் நடையில் நின்று உயர் இராமன் என்ற ஒற்றை மையத்தை நோக்கிப் பயணிக்கின்றன என்பது குறிக்கத்தக்கது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 19 June 2016

ஆடைமாற்றம் ஆள் மாற்றத்திற்கான முதல் படி?


Siragu- change dress article7

மானம் காக்க மனிதன் கண்டறிந்தது ஆடை. அதுவே காலப்போக்கில் ஒவ்வோர் நாட்டிற்கும், மாநிலத்திற்கும்கூட அடையாளமாக உருமாறியிருக்கிறது. நாம் உடுத்தும் உடையும், உடுத்தும் முறையும் நம் எண்ணப்போக்கை நிர்ணயிக்கும், பிரதிபலிக்கும்.

தினப்படி செய்யும் வேலை, தினப்படி போகுமிடம், தினப்படி பார்க்கும் முகங்கள் என்று சலித்துப் போகும் நேரங்களில் ஏதேனும் ஒரு மாற்றத்திற்காய் மனம் ஏங்கும். சுற்றுப்புறம் தரும் அதிருப்தி நாளடைவில் சுய தோற்றத்தின் மீதான சலிப்பைக் கூட்டும்.


சுற்றியிருக்கும் மனிதர்களையோ, சுற்றி நடக்கும் நிகழ்வுகளையோ மாற்ற விருப்பம் இல்லாததால் அல்லது மாற்ற முடியாது என்ற அவநம்பிக்கையால் தன்னில் ஏதேனும் மாற்றம் கொண்டு வர மனம் தீர்மானிக்கும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 16 June 2016

எல்லாம் கொடுக்கும் தமிழ்(கவிதை)


vincent nerkaanal22

என்னயில்லை   நம்தமிழில்   ஏன்கையை   ஏந்தவேண்டும்
இன்னும்   உணரா   திருக்கின்றாய் — நன்முறையில்
பொல்லாத   தாழ்வுமனம்   போக்கியுள்ளே   ஆய்ந்துபார்
எல்லாம்   கொடுக்கும்   தமிழ் !

எள்ளல்   புரிகின்றாய்   ஏகடியம்   பேசுகின்றாய்
உள்ள   துணரா   துளறுகின்றாய் — உள்நுழைந்து
கல்லாமல்   தாழ்த்துகிறாய்   காண்கதொல்   காப்பியத்தை

எல்லாம்   கொடுக்கும் தமிழ் !

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20808

Wednesday 15 June 2016

பாவேந்தரின் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பகுத்தறிவு சிந்தனை


Siragu-bharadhidasanin1

பெண்ணுரிமைச் சிந்தனை:
“ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் இந்த நாட்டிலே” எனும் பாரதியாரின் பெண்ணிய சிந்தனையையும், தந்தை பெரியார் அவர்களது பெண்ணியம் மற்றும் பகுத்தறிவுக் கொள்கையினையும் தனது சஞ்சீவி பர்வதத்தின் சாரலின் வழியாக வஞ்சி என்னும் பெண்ணின் பகுத்தறிவுக் குரலினை எதிரொலிப்புச் செய்கிறார்.
பெண்ணுரிமை இல்லாமையால் ஏற்படும் விளைவு:

puratchi kavignar14

பெண்ணிற்கு பேச்சுரிமை இல்லாமையால், ஒரு சமூகம் எத்தகைய இழிநிலைக்குத் தள்ளப்படும் என்று தான் படைத்த பாத்திரமான வஞ்சியின் நிலையிலிருந்து எடுத்துறைக்கிறார்.
                “பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ?

                மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 14 June 2016

நன்றி !!!


Siragu-nandri article1
நன்றி என்ற தமிழ்ச்சொல்லை நான் எப்பொழுதும் மிகப்பெரிய மந்திரச் சொல்லாகவே பார்ப்பது உண்டு. ஏனென்றால் உபயோகித்தவர்களுக்கே தெரியும் அதன் மகிமை. அப்படி என்ன அதனுள் ஒளிந்துகிடக்கிறது? அது நம் அன்றாட வாழ்வில் அப்படி என்ன செய்து விடப்போகிறது என்று நீங்கள் சிந்திப்பீர்களானால், இது உங்களுக்கான பதிவுதான் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

நம் மனித எண்ணங்கள் எப்படிப்பட்டது என்றால், எங்கோ கிடைக்கும் ஒன்றை அரிதாகவும் அற்புதமாகவும் கற்பனை செய்துவிட்டு அருகில் இருக்கும் அற்புதமான ஒன்றை அற்பமாகவே எண்ணும் குணாதிசயங்கள் கொண்டது. இம்மாதிரியான எண்ணங்கள் தான் நம்மை, நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து தூரமாக வைத்திருக்கிறது. நன்றியுணர்வை நீங்கள் அதிகரிக்கும் பொழுதுதான் உங்கள் வாழ்வில் நீங்கள் வியத்தகு மாற்றம் ஏற்படப்போவதைப் பற்றி உணர்வீர்கள். எப்பொழுதும் எல்லாருக்கும் நாம் ஒரு வகையில் நன்றியுடையவராக இருக்கிறோம், ஆனால் யாரும் அதை வெளிப்படுத்துவதில்லை. அப்படி வெளிப்படுத்தும் நன்றியுணர்வு உங்களுக்குள் மகிழ்ச்சியை வரவழைக்கும். இரண்டாவது, குறை கூறும் பழக்கத்தை அடியோடு ஒழித்துவிடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 13 June 2016

கலிபோர்னியா பாடத்திட்டத்தில் இந்தியாவின் வரலாற்றை அழிக்கும் முயற்சியா?


Siragu california_article11

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் மற்ற மாநிலங்களைவிடப் பல வகைகளில் வேறுபட்டது. குறிப்பாக, அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் பல்லின பின்புலத்தைச் சார்ந்தவர்களாக இருக்கும் நிலை மாநிலத்தின் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து, கல்வி, பொருளாதாரம் எனப் பலவற்றையும் நிர்ணயிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இம்மாநிலம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளின் தாக்கம், இம்மாநிலத்தின் எல்லையையும் தாண்டி அமெரிக்க அளவிலும் பாதிப்புகள், மாற்றங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துவதும் வழக்கம்.

Siragu-california_article1

கலிபோர்னியா எந்த அளவு பிற அமெரிக்க மாநிலங்களில் இருந்து வேறுபட்டுள்ளது என்பதைச் சுருக்கமாக விளக்குவதென்றால், அமெரிக்கர் என்றால் பொதுவாக உலக மக்கள் தங்கள் மனதில் உருவகப்படுத்தும் ஐரோப்பாவில் இருந்து குடியேறிய வெள்ளையின மூதாதையர் ஒருவரின்  வழித்தோன்றல், கிறித்துவ மதத்தைச் சார்ந்த, ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் என்ற ஒரு பொதுவான எண்ணத்தை முறியடிக்கும் வகையில் கலிபோர்னியா மாநிலம் வெகு வேகமாக மாறிவருகிறது. சமீபத்திய மக்கட்தொகைப் புள்ளிவிவரத்தின்படி வெகுவிரைவில் கலிபோர்னியாவில் வாழ்பவர்களில் இனி மூவரில்  ஒருவர் மட்டுமே உலகமக்களின் கணிப்பில் வாழும் அமெரிக்கராக இருக்கப்போகிறார் என்னும் அளவிற்குச் சிறுபான்மையினர் நிலைக்கு வெள்ளையின மக்கள்  தள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 12 June 2016

மின்புத்தகங்களை எப்படி வெளியிடுவது, விற்பது?


Siragu ebook article3
தமிழ் இலக்கிய உலகில் ஆண்டுதோறும் ஏராளமான நூல்கள் வெளியிடப்படுகின்றன. புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக்கடைகள், நூலகங்கள் போன்றவற்றின் வாயிலாக அவை மக்களை சென்று சேருகின்றன. ஆனால் இன்றைய மின்னணு உலகில் நூல்களை வாசிப்பதைக் காட்டிலும், மின் நூல்களை வாசிப்பது எளிமையாக தோன்றுகிறது. அலைபேசிகள், சிறிய கணிணிகள் துணைகொண்டு மின் நூல்களை எப்போது வேண்டுமானாலும் வாசிக்கும் வசதி உள்ளது. வரும் காலத்தில் அதிகப்படியாக மின்நூல்கள் மக்களை சென்று சேரும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் மின்நூல்களாக வெளியிடப்பட்டால் அவை அழிவது பெரிதும் தடுக்கப்படுகிறது. அச்சு நூல்கள் பத்தாண்டுகள் வரை தாக்குப்பிடிப்பதே மிக சிரமம். பாதுகாத்து வைத்திருந்தால் மட்டுமே ஓரளவு சாத்தியமாகும். மின்நூல்களில் அழிவு என்பது மிகவும் குறைவு, சேமித்து வைப்பதும் எளிதாக இருக்கும். ஒருமுறை ஆக்கச்செலவுகள் செய்தால் பிறகு தேவையான மாற்றங்கள் மட்டும் செய்துகொள்ளலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 9 June 2016

முடிவில்லா முகாரி! (கவிதை)


mugaari1

மலையகம்
குட்டித்தீவிலே
ஒரு எழில் கொஞ்சும் மலைநகரம்
கந்தகப்பூமியிலே
ஒரு அதிசய குளிர்ப்பேழை!
உயரத்தில்-மலை மீது
உயரத்தில் வாழ்வதால்
மலையகத்தார் என்கின்றனர்
எங்கள் வாழ் நிலையோ
பொருளாதார தாழ் நிலத்தில்………….
எங்கு பார்த்தாலும்
பசுமையாய் புன்னகைத்திடும்

தேயிலைத்தோட்டங்கள்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20738

முன்னேறத் தயங்காதே !


work1

“படிச்சு முடிச்சாச்சு வேலை தான் இல்லை“ என்ற இந்த வாசகத்தை இப்பொழுது அடிக்கடி கேட்க நேரிடுகிறது. சரி இதற்கு தரமற்ற கல்லூரிகள் ஒரு புறம் காரணமாக இருந்தாலும், மாணவர்களும் மறு காரணமாக இருக்கிறார்கள். சரியான வழிகாட்டுதல்கள் என்பது ஒரு பத்து வருடங்கள் முன்பு மிகக் குறைவு. ஆனால் இக்கால கட்டத்திலோ வழிகாட்டுதல் மிகுந்து காணப்படுகிறது. சமூக வலை தளங்களிலும், சமூக ஆர்வலர்களும் வழிகாட்டும் அமைப்பை உருவாக்கி பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகின்றனர். அதே போல அயல் நாட்டில் வேலை, படிப்பு என்று நமது மாணவர்களின் பார்வை அமைப்பும் சற்றே விரிந்துள்ளது.

மாணவர்கள் என்பது மண்ணுக்குள் கிடக்கும் வைரம். அவரை யாராவது பட்டை தீட்டினால்தான் ஒளிர்வார்கள். ஆனால் பட்டதாரி என்பவன் ஏற்கனவே  பட்டை தீட்டப்பட்டவன், இருந்த போதிலும் அவன் ஒளிராமல் போவதற்கு யார் காரணம்? அவனே தான் காரணம். சுற்றியிருக்கும் மாசுகளைத் துடைத்து அகற்றினால்தான் ஒளியின் வீரியமும் ஒளிரும் தரமும் மேம்படும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 7 June 2016

அழிந்து வரும் ‘சொந்த ஊர்’


sondha-oor5

சொந்த ஊர் என்பது மறைந்து போன வரலாறாக மாறி வரும் காலமிது. ஒரு ஊரையே தன் சொந்தமாக பாவிக்க முடியாது எனினும் சுற்றங்கள் சூழ, நண்பர்கள் துணை நிற்க, எந்நேரமும் எக்காரணத்தாலும் எதுவும் நேராதென்ற பாதுகாப்புணர்வோடு வாழ்வது ஒரு வரம்.

ஓரிடத்தில் பிறந்து, அவ்வூர் கோடியின் தெருக்களையும் அறிந்து, இரவு பகல் பாராது சுற்றித் திரிந்து, அவ்விடத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து தானும் வளர்ந்த விதம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.


பணி சார்ந்த இட மாற்றல்களும், தொழில் சார்ந்த இட மாற்றல்களும் பெருகி வருகின்றன. அவற்றுள் சில தவிர்க்க முடியாதவை, சில விரும்பியேற்றவை. அலசி ஆராய்ந்த பின்னர் மனிதன் போடும் சில கணக்குகள் தப்பிப் போவதுண்டு. அந்நியனாய் அசலூரில் ஆதரவின்றி நிற்கும்போது தெரியவரும் சொந்த ஊரின் அருமை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 6 June 2016

பழந்தமிழரின் நம்பிக்கைகள்


palanthamilarin-nambikkai-fi
உலகில் வாழும் எல்லா இன மக்களுக்கும் அவர்கள் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் இருப்பது இயல்பு. பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றிய நம்பிக்கைகள் பலவிதமானதாகக் காணப்படுகிறது. அவற்றில் சிலவற்றை இன்றும் வழக்கொழியாமல் பாதுகாத்து பின்பற்றி வருகின்றனர். தங்களது எண்ணத்திற்குத் தக்கபடி ஏற்படுகின்ற குறிப்பினுக்குத் தக்கவாறு நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். அக்குறிப்புகள் நன்மை சார்ந்ததாகவோ அல்லது தீமை பற்றிய குறிப்பினை வெளிப்படுத்துவனவாகவோ இருப்பதாக பழந்தமிழர்கள் கருதியும் வந்துள்ளனர். அவைகள் பற்றிய பதிவுகளையும் இட்டுச் சென்றும் உள்ளனர். தமிழர்களது இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் மட்டுமல்லாது, பிற காப்பிய நூலான சிலப்பதிகாரம் உட்பட சில நூல்களிலும் இவை காணக்கிடைக்கின்றன. அவை பற்றி இப்பகுதியில் காண்போம்.
நாளும் கோளும்:
palanthamilarin nambikkai2

பழந்தமிழர் தங்களது வாழ்வில் ஏதேனும் ஒரு முக்கிய செயலை தொடங்கும்முன் நல்ல நாள் பார்த்தும், நல்ல வேளை பார்த்தும் தொடங்கினர் என எண்ணுதல் தகும். ஏனெனில் இன்றைக்கும் வீட்டில் ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற, நாள் கிழமை பார்ப்பது, தொடர்ந்து வாழ்வியலோடு தொடர்வது நாம் அனைவரும் அறிந்தது. இவ்வழக்கமானது இடையில் புகுத்தப்பட்டதன்று. பொதுவாய் ஒரு பழக்கம் என்பது உடனடியாகப் புகுத்தக் கூடியதும் அல்ல. அவை பல்வேறு மாறுதல் அடைந்து எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருவதாகும். அவ்வகையில் பழந்தமிழர்கள் நாளும் கிழமையும் பார்த்து தங்களது செயலினை ஆற்றியுள்ளனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 5 June 2016

வாசிப்பு


chennai-book-fair9


இந்த ஆண்டு (2016) சூன் 1 முதல் 13  வரை சென்னையில் புத்தகக் கண்காட்சி தீவுத் திடலில் நடைபெறுகின்றது. வாசிப்பு எந்த அளவுக்கு ஒரு மனிதனுக்குத் தேவை என்பதை பல அறிஞர்கள் கூறியுள்ளனர். வாசிப்பு புதிய கருத்துகளை அறிமுகப்படுத்துகின்றது. புதிய சிந்தனையை உருவாக்குகின்றது. நம்மை நாமே உணர்ந்து கொள்ள, எண்ணங்களை மெருகேற்றிக்கொள்ள வாசிப்பு உதவுகின்றது. மற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றினைப் படிக்கும்போது, நமக்கு அதிலிருந்து கிடைக்கும் அனுபவம் நம் வாழ்வினை செம்மையாக்க உதவுகின்றது. வாசிப்பு, நமக்கு மற்றவர்களிடம் உரையாடும் பயிற்சியைத் தருகின்றது. நம்முடைய கற்பனையை உயர்த்துகின்றது.

chennai-book-fair5

நல்ல நூல்களைத்  தேடித் தேடி வாசியுங்கள். உடலுக்கு எப்படி நாம் உடற்பயிற்சி செய்கின்றோமோ அதுபோல, மனதிற்கு சிறந்த பயிற்சி நல்ல நூல்களை வாசிப்பது மட்டுமே. நல்ல புத்தகம் நல்ல நண்பன் என்பார்கள். வாசிப்பு மட்டுமே மனிதனின் அறிவை விரிவாக்கும், குழம்பிய மனதினை தெளிவாக்கும், ஒருநிலைப்படுத்தும். மனிதனைப் போலத்தான் புத்தகமும் ஒரு வாழ்வின் தோற்றமாகும், அதற்கும் உயிருண்டு, அதுவும் பேசும். மனிதன் இதுவரை படைத்த, இன்றைக்கும் படைத்து வருகிற மற்ற பொருட்கள் போன்ற அளவுக்கு அது ஒரு “பொருள்” மட்டும் அல்ல என்றார் புகழ் பெற்ற

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 2 June 2016

நீறு பூத்த நெருப்பு ஈழம்(கவிதை)


2nd jan 16 newsletter1

ஈழமெனும்   தலைப்பினிலே   இலங்கை நாட்டில்
இயங்குகின்ற   தடாகமெனும் கலைவட்   டத்தார்
வேழமெனும் சுவைதமிழில்   கவிதைப் போட்டி
வைத்துலகோர் கலந்துகொள்ள   அழைத்தி   ருந்தார்
ஆழமான கருத்துடனே   கவிதை யாத்தே
அனுப்பியதில்   முதல்வதாகத்   தேர்வு   பெற்று
சூழபுகழ்   கவியருவி   விருது   வாங்க
சுடர்மனையாள்   துணையுடனே   இலங்கை   சென்றேன் !

விருதுதனைப் பெறுவதற்கு   முன்பு   ஈழ

விடுதலைக்காய்ப்   போர்புரிந்த   புலிகள்   தம்மின்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20724

Wednesday 1 June 2016

ஆரெயில் நெடுங்கொடி அறிவித்த செய்திகள்


aareyil1

அணி என்பது அழகு என்பதைக் குறிக்கிறது. இலக்கியங்களில் அழகுக்காகவும், பாடலின் பொருளைத் தெளிவாக விளக்கும் பொருட்டும், உவமை, உருவகம் போன்றவற்றைப் புலவர்கள் கையாளுவது வழக்கம். அது அழகுக்கு அணி அணிவித்து அழகை மேம்படுத்தும் ஒரு முயற்சி.

இவ்வாறு செய்யுள்களில் அமைந்திருக்கும் சொல்லழகு, பொருளழகு ஆகியவற்றின் இலக்கணத்தை உரைப்பது அணி இலக்கணம் எனப்படும். அணிகள் பலவகைப்படும். தமிழ்ச் செய்யுள்களில் காணப்படும் அணிகளைக் கூறும் தமிழின் தொன்மையான இலக்கண நூல் ‘தண்டியலங்காரம்’ ஆகும். இந்த நூலில் 35 அணிகள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று ‘தற்குறிப்பேற்ற அணி’. இயற்கையில் இயல்பாக நிகழும் நிகழ்வொன்று ஒரு கருத்தைக் குறிப்பதாகக் கூறி இலக்கியங்களில் புலவர்கள் தங்கள் கருத்தை ஏற்றிப் பாடலாகப் பாடுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படுகிறது.

பெயர்பொருள் அல்பொருள் என இரு பொருளினும்
இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று
தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்
(தண்டி, நூ. 56)
(பெயர்பொருள் = அசையும் பொருள்; அல்பொருள் = அசையாத பொருள்)

அசையும் பொருட்கள், அசையாப் பொருட்களின் இயல்பான இயற்கை அமைப்பின் மீது புலவர் தனது குறிப்பை ஏற்றுவதைத் தற்குறிப்பேற்ற அணி என்று வரையறுக்கிறது தண்டியலங்காரம் நூல். தற்குறிப்பேற்ற அணி ஒரு குறிப்பிடத்தக்க அணி. இந்த அணி தமிழிலக்கியங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு அணி எனவும்; 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.