குமாரின்
குலத்தொழில் விவசாயம். ஆனால் அவனுக்கு விருப்பம், வேறு எங்காவது சென்று
வேலைபார்க்க வேண்டும் என்பது. ஒரிசாவில் வேலை கிடைத்தது, அங்கிருந்து
குஜராத். பெரிய அலுவலக வேலையொன்றுமில்லை, பட்டறை வேலைதான்.
சென்ற இடத்தில் மதாங்கியின் அழகில் மனதை
பறிகொடுத்துத் திருமணம் செய்துகொண்டான். குமாரின் பெற்றோருக்கு
விருப்பமில்லை. ஒரே மகன் குமாரின் திருமணத்தைக் கண்குளிர பார்க்கவேண்டும்
என்று ஆசைப்பட்டனர். அவனோ திருமணம் முடிந்து, வகிடு நிறைய குங்குமமும்,
முக்காடும் போட்ட மதாங்கியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பெற்றோருக்கு
அனுப்பி வைத்தான். மகனின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த பட்டு
வேட்டி, பட்டு சட்டையைப் பார்த்து பார்த்து அழுதாள் அம்மா காமாட்சி.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment