கோவை
மாவட்டம் மதுக்கரை அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் யானையும்,
வனத்துறையால் பிடிக்கப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆண்
யானையும் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பது மிகப்பெரிய சோகத்தை
ஏற்படுத்தியிருக்கிறது.
நம் கண் முன்னே செழித்து வாழ்ந்த ஓர்
உயிரினம் நம் வாழ்நாள் காலத்திலேயே உலகத்திலிருந்து முற்றிலும் மடிவதை
சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? நாட்டின் வளம் காட்டு வளத்தில்
அடங்கியிருக்கிறது. அந்த காட்டின் வளம், யானைகளிடம்தான் அடங்கியிருக்கிறது.
உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிருக்கும் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது. மற்ற
உயிர்கள் வாழ்வதற்கான உரிமையைப் பறிக்க நமக்கு அதிகாரம் கிடையாது. அதையும்
மீறி காட்டுயிர்கள் மீது இப்படி வன்முறை நிகழ்த்துவது, நமக்கு கூடுதலாக
இருப்பதாகக் கூறிக்கொள்ளும் ஆறாவது அறிவைப் பற்றி கேள்வியை எழுப்புகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment