அமெரிக்காவின்
கலிபோர்னியா மாநிலம் மற்ற மாநிலங்களைவிடப் பல வகைகளில் வேறுபட்டது.
குறிப்பாக, அங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் பல்லின பின்புலத்தைச்
சார்ந்தவர்களாக இருக்கும் நிலை மாநிலத்தின் அரசியல் நடவடிக்கைகளில்
இருந்து, கல்வி, பொருளாதாரம் எனப் பலவற்றையும் நிர்ணயிக்கும் வகையில்
அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இம்மாநிலம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளின்
தாக்கம், இம்மாநிலத்தின் எல்லையையும் தாண்டி அமெரிக்க அளவிலும்
பாதிப்புகள், மாற்றங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துவதும் வழக்கம்.
கலிபோர்னியா
எந்த அளவு பிற அமெரிக்க மாநிலங்களில் இருந்து வேறுபட்டுள்ளது என்பதைச்
சுருக்கமாக விளக்குவதென்றால், அமெரிக்கர் என்றால் பொதுவாக உலக மக்கள்
தங்கள் மனதில் உருவகப்படுத்தும் ஐரோப்பாவில் இருந்து குடியேறிய வெள்ளையின
மூதாதையர் ஒருவரின் வழித்தோன்றல், கிறித்துவ மதத்தைச் சார்ந்த, ஆங்கில
மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் என்ற ஒரு பொதுவான எண்ணத்தை
முறியடிக்கும் வகையில் கலிபோர்னியா மாநிலம் வெகு வேகமாக மாறிவருகிறது.
சமீபத்திய மக்கட்தொகைப் புள்ளிவிவரத்தின்படி வெகுவிரைவில் கலிபோர்னியாவில்
வாழ்பவர்களில் இனி மூவரில் ஒருவர் மட்டுமே உலகமக்களின் கணிப்பில் வாழும்
அமெரிக்கராக இருக்கப்போகிறார் என்னும் அளவிற்குச் சிறுபான்மையினர் நிலைக்கு
வெள்ளையின மக்கள் தள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment