நன்றி
என்ற தமிழ்ச்சொல்லை நான் எப்பொழுதும் மிகப்பெரிய மந்திரச் சொல்லாகவே
பார்ப்பது உண்டு. ஏனென்றால் உபயோகித்தவர்களுக்கே தெரியும் அதன் மகிமை.
அப்படி என்ன அதனுள் ஒளிந்துகிடக்கிறது? அது நம் அன்றாட வாழ்வில் அப்படி
என்ன செய்து விடப்போகிறது என்று நீங்கள் சிந்திப்பீர்களானால், இது
உங்களுக்கான பதிவுதான் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
நம் மனித எண்ணங்கள் எப்படிப்பட்டது
என்றால், எங்கோ கிடைக்கும் ஒன்றை அரிதாகவும் அற்புதமாகவும் கற்பனை
செய்துவிட்டு அருகில் இருக்கும் அற்புதமான ஒன்றை அற்பமாகவே எண்ணும்
குணாதிசயங்கள் கொண்டது. இம்மாதிரியான எண்ணங்கள் தான் நம்மை, நம்மைச் சுற்றி
இருப்பவர்களிடம் இருந்து தூரமாக வைத்திருக்கிறது. நன்றியுணர்வை நீங்கள்
அதிகரிக்கும் பொழுதுதான் உங்கள் வாழ்வில் நீங்கள் வியத்தகு மாற்றம்
ஏற்படப்போவதைப் பற்றி உணர்வீர்கள். எப்பொழுதும் எல்லாருக்கும் நாம் ஒரு
வகையில் நன்றியுடையவராக இருக்கிறோம், ஆனால் யாரும் அதை
வெளிப்படுத்துவதில்லை. அப்படி வெளிப்படுத்தும் நன்றியுணர்வு உங்களுக்குள்
மகிழ்ச்சியை வரவழைக்கும். இரண்டாவது, குறை கூறும் பழக்கத்தை அடியோடு
ஒழித்துவிடும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment