இரண்டாவது அமைச்சன்: அவன்
சொன்னதில் சிறிதும் நன்மை இல்லை. பெரிய துன்பங்கள் நேர்கின்றபோது
பகைவருடன் சமாதானம் செய்யக் கூடாது. நெருப்பினால் காய்ச்சிய நீர் அந்த
நெருப்பை அவிக்காதா? நம்மைக் கோட்டான்கள் வருத்துகின்றன என்று அவர்களோடு
நாம் சமாதானமாகப் போனாலும் அவர்கள் நம்மைக் கொல்லுவார்கள். ஆதலால்
மனோபலத்தோடு எதிரிகளைக் கொல்லவேண்டும். வீரத்தினால் உயர்ந்திருப்பவனே
உயிருள்ளவன். மற்றவர்கள் பிணத்துக்கு ஒப்பானவர்கள்.
அரசன் (மூன்றாம் அமைச்சனைப் பார்த்து): உன் கருத்து என்ன, சொல்.
மூன்றாம் அமைச்சன்: அரசனே,
கேள். பகைவன் தன்னை விட வலிமை உடையவனாக இருந்தால், பொறுத்துக்கொண்டு
போகவும் தேவையில்லை, அவனோடு சண்டையிடவும் தேவையில்லை. வேறொரு இடத்திற்குச்
சென்று விடுவதே நல்லது. “இந்தச் சமயத்தில் சண்டை செய்யலாகாது” என்று எவன்
தன் இடத்தைவிட்டு அந்தச் சமயத்துக்குத் துறந்து போய்விடுகிறானோ அவன்
பாண்டவர்களைப் போல வெற்றியடைகிறான். எவன் செருக்குடன் போர் செய்கிறானோ அவன்
குலம் அழிந்துபோகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment