அறிஞர் அண்ணா – பிற மொழி ஆதிக்கத்தால்
தமிழ் நாடு இருள் சூழ்ந்த நிலையில் இருந்தபோது தன் தமிழ் மொழியின் ஆற்றலால்
தமிழ் மக்களை தன் பக்கம் இழுத்தவர். சோர்ந்து கிடந்த தமிழ் உள்ளத்தில்
மொழி கொண்டு உணர்வை ஊட்டிய பேச்சாற்றல் மிக்கவர். அவரின் பேச்சாற்றல்
குறித்த சில தகவல்களை பார்க்கலாம்.
ஒருமுறை விழுப்புரத்தில் அண்ணா பேச
சென்றிருந்தார். தேர்தல் நேரம் என்பதால் பல கூட்டங்களில் பேசிவிட்டு இரவு
பத்து மணிக்குத்தான் அங்கு அவரால் வரமுடிந்தது. மக்கள் கண்களில் தூக்கம்
குடிகொண்டிருந்தது.
மேடையேறிய அண்ணா இப்படி பேசினார்,
” மாதமோ சித்திரை!
மணியோ பத்தரை!
மக்களுக்கோ நித்திரை!
வழங்குவீர் உதய சூரியனில்
உங்கள் முத்திரை!”
மணியோ பத்தரை!
மக்களுக்கோ நித்திரை!
வழங்குவீர் உதய சூரியனில்
உங்கள் முத்திரை!”
என்றவுடன் மக்களின் தூக்கம் கலைந்து, எழுந்த கையொலி அடங்க வெகு நேரம் ஆயிற்று.
இதேபோல் தென்மாவட்டத்தில் ஒரு
கூட்டத்திற்கு அண்ணா பேச வந்தார். அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரசு,
அண்ணா பேசும் மேடைக்கு எதிரே ஒரு பெண் கையில் விளக்குமாறு வைத்திருப்பதாக
உள்ள படத்தை மாட்டியிருந்தனர். அதைக்கண்ட தி மு க தொண்டர்கள்
ஆத்திரப்பட்டனர். அவர்களை அமைதிப்படுத்தி அண்ணா இப்படி சொன்னார். அவர்கள்
ஒன்றும் தவறாக வைக்கவில்லை! அவர்கள் செய்யும் ஊழல்களை என்னை நன்கு
விளக்குமாறு பணித்திருக்கிறார்கள்! என்றார். காங்கிரசு தொண்டர்கள் வெட்கி
தலை குனிந்தனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment