Thursday, 19 January 2017

பண்பாட்டு அறிதல்களில் தொடர்ச்சி


Siragu-culture5

மானுட அறிதல் ஒரு தொடர் செயல்பாடு. பிற மனிதர்கள் அறிந்தவற்றை கற்றுக் கொள்ளும் திறனை பெற்றிருப்பதால்தான் மானுட சமூகம், பிற உயிரினங்களிலிருந்து வேறுபட்டு, அறிவு செயல் வளர்ச்சிகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. இன்றைய தனி மனிதன் அறிந்திருப்பது அனைத்தும் முன்னோர்கள் அறிந்தவற்றின் ஒரு துளி மாத்திரமே. முன்னோர்கள் என்பது, மானுட சமூகத்தின் மொத்த முந்தைய தலைமுறைகள் அனைத்தையும் இங்கு குறிக்கிறது. இக்காலத்தில் புதியதாக எதையாவது அறிகிறோமானால், அது முன்னோர்கள் அறிந்தவற்றை மேடையாக்கி, அதன் மேல் நின்றுகொண்டுதான் அறிகிறோம். 

ஆனால் அத்தகைய புதிய அறிதல்கள் நிகழ்வது மிகவும் அபூர்வமே. அதாவது, நாம் தனிமனிதர்கள் அறிந்தவை எனக் கூறுவனவற்றில் பெரும்பான்மையானவை முன்னோர்களின் சுய தேடுதலால் தங்கள் உயிரை எரித்து அடைந்த ஒளியில் அறிந்தவைகளின் சில துளிகளே. அவர்கள் அளித்த அறிவுக்காக நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அத்தகைய அறிதலின் தொடர்ச்சி மானுட இயல்பு. ஆனால் தங்கள் அறிவு முன்னோர்களின் கொடையே என அறியும் மனம், அறிதலில் அடுத்த பாய்ச்சலுக்கான ஏவுதளம். அத்தகைய மனம் முன்னோர்களின் அறிதலை அதற்கான மரியாதையுடனும் எனவே புதிய அறிதலுக்கான விழிப்புடனும் அணுகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment