தனித்தமிழ் நடை… மறைமலையடிகள் நடந்த பாதை.
வ.சுப. மாணிக்கனார் சுட்டிய பாதை. மொழித் தூய்மை, ஒலித்தூய்மை கொண்டுத்
தமிழைக் கண்ணெனக் காப்பது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை.
தற்காலத்தின் பேச்சு வழக்கு அதிகமாக அயல்
மொழி கலப்புடையதாக உள்ளது. பேச்சு மொழி சார்ந்து எழுதப்படும்
படைப்பியலக்கியங்களிலும் அயல்மொழிக்கலப்பு என்பது தவிர்க்க முடியாதது
ஆகிவிடுகிறது.
பேச்சுத்தமிழும் எழுத்துத் தமிழும் வேறு
வேறு என்ற நிலையை எய்திவிட்டால் பேச்சுத்தமிழ் ஒரு தமிழாகிவிடும்.
எழுத்துத்தமிழ் ஒரு தமிழாகிவிடும். எனவே பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும்
ஒன்றைஒன்று அதிக அளவில் சார்ந்தே இயங்கவேண்டும். செய்யுள் நடை, வழக்கு நடை
ஆகிய இரண்டு நடைகள் தொன்று தொட்டே வந்துகொண்டுள்ளன. செந்தமிழ், கொடுந்தமிழ்
ஆகிய இரண்டும் இருந்துள்ளன. செய்யுள் நடையில் திசைச் சொற்கள் குறைவு.
வழக்கு நடையில் திசைச் சொற்கள் கலப்பது ஏற்கத்தக்கது. கொடுந்தமிழைத்
தாண்டி, வழக்குத் தமிழைத்தாண்டி செய்யுள் நடை இன்னமும் நிலைத்து நிற்கிறது.
அன்றைக்கு எழுதிய சிலப்பதிகாரம் இன்றைக்கும் புரிகிறது என்றால்
எழுத்துநடைத் தமிழ் உயரிய நிலையில் பேணப்பட்டு வந்துள்ளது என்றே பொருள்.
இந்நிலையில் தமிழின் தூய்மையைக் காத்தல்
வேண்டும் என்றால் பேச்சுத்தமிழில் அயல்மொழி வழக்குகளைக் குறைக்கவேண்டும்.
நல்ல தமிழ் பேசப்பட வேண்டும். நல்ல தமிழில் எழுதப்பட வேண்டும்
திரையிசைப்பாடல்களில் அளவுக்கதிகமான ஆங்கிலக் கலப்பு, அன்றாட வாழ்க்கையில்
பயன்படுத்தப்படும் பேச்சுமொழியில் அளவுக்கு அதிகமான அயல் மொழிக் கலப்பு.
தொலைக்காட்சித்தமிழில், வானொலித்தமிழில், திரைத்தமிழில் அயல்மொழிக் கலப்பு
அதிகம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment