கிழமந்திரி சிரஞ்சீவி:
பிராமணனிடத்திலிருந்த ஆட்டைச் சில வஞ்சகர்கள் எப்படி வஞ்சித்துக்கொண்டு
போனார்களோ, அப்படியே நான் கோட்டான்கள் இருக்குமிடம் போய் அவர்களை வஞ்சனை
செய்து கொல்கிறேன்.
காக அரசன் மேகவர்ணன்: அவர்கள் எப்படி ஆட்டைக் கொண்டு போனார்கள்?
சிரஞ்சீவி: ஒரு
தேசத்தில் மித்திரசர்மன் என்னும் பிராமணன் இருந்தான். மாசிமாதத்தில் யாகம்
செய்வதற்காக ஒரு பசு அவனுக்குத் தேவைப் பட்டது. அதற்காகப் பக்கத்தில்
உள்ளதொரு ஊருக்குப் போய், தகுதியுள்ள ஒருவனிடம் ‘பசு வேண்டும்’ என்று
கேட்டான். “நீ நல்ல காரியத்திற் குத்தான் கேட்கிறாய், ஆனால் என்னிடம் பசு
இல்லை. ஆடுதான் இருக்கிறது. அதைக் கொண்டு யாகம் செய்” என்று ஒரு பெரிய
ஆட்டைக் கொடுத்து அனுப்பினான். அதைக் கொண்டுவரும் வழியில் அது அங்கும்
இங்கும் ஓடத் தொடங்கியது. அதனால் அதை அவன் தோள்மேல் தூக்கிக்கொண்டு
வந்தான். சில திருடர்கள் அதைத் தொலைவிலிருந்து பார்த்தார்கள். ஆட்டை
எப்படியாவது கைப்பற்றி நம் பசியைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு
செய்தார்கள். எனவே அவர்களில் ஒருவன் வந்து பிராமணனிடம் சொல்கிறான்:
நித்தியம் அக்னி வளர்க்கின்ற பிராமணனே, நீ
ஒழுக்கமுள்ளவனாக இருந்தும் இப்படிப்பட்ட பழியான காரியத்தை ஏன் செய்கிறாய்?
ஓர் ஈனமான நாயைத் தோள்மேல் எப்படிக் கொண்டுவருகிறாய்? உங்கள் சாதிக்கு
நாய், கோழி, சண்டாளன், கழுதை ஆகியவற்றைத் தொடக்கூடாது என்று சாத்திரம்
இருக்கிறதே, தெரியாதா?
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment