உலகமே வியந்து பார்த்த நம் தமிழ் மாணவர்,
இளைஞர்களின் அறப்போராட்டம் மிகவும் சிறப்புக்குரியது. சல்லிக்கட்டு எனும்
ஏறு தழுவுதல் இந்த ஆண்டும் மறுக்கப்பட்டதின் விளைவாக தடையை மீறி நடத்துவோம்
என பல இடங்களில் சிறிதளவேனும் நடந்துகொண்டிருக்கையில், அலங்காநல்லூரில்
பொங்கலன்று நடத்த முற்படுகையில், சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அதைத்
தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு மாணவர்களும்,
இளைஞர்களும் அறப்போராட்டத்தை கையில் எடுத்தனர். அன்றைக்கு மறுநாளே
சென்னையில் மெரினா கடற்கரையில், வெறும் 300 பேர் கொண்ட மாணவர்குழு
அறப்போராட்டத்தில் இறங்கியது.!
இப்போராட்டம் ஒரு புரட்சி என்றே கூற
வேண்டும். அந்த அளவிற்கு, சாதி, மத வேறுபாடின்றி, பாலினம் கடந்து ஏழு
நாட்கள் தொடர்ந்து போராடினார்கள் நம் இளைஞர்கள். இந்த சல்லிக்கட்டுப்
போராட்டம், நம் மாநில உரிமைக்கான போராட்டம், நம்மக்களுக்கான போராட்டம், நம்
பண்பாட்டிற்கான ஒரு பெரும்போராட்டமாக நடந்தேறியிருக்கிறது. நம்
பண்பாட்டின் அடையாள விழாவான பொங்கல் விழாவையொட்டி நடைப்பெறும் இந்த ஏறு
தழுவுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறவில்லை. விலங்குகள் நல வாரியம்
பீட்டாவின் மனு காரணமாகவும், உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாகவும் நடைபெறாத
இந்த மஞ்சுவிரட்டு, இவ்வாண்டு நடைபெறும் என பெரும் ஆவலில் இருந்த நம்
மக்கள், இவ்வாண்டும் நடைபெறாது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான், தடையை
மீறுவோம் என செயல்பட்டார்கள். இந்த இளைஞர்களைத் தடுத்து, கைது
செய்யப்பட்டதின் விளைவாக, மாணவர்கள் இதனை அறப்போராட்டமாக மாநிலம் எங்கும்
பல இடங்களில் ஆரம்பித்தார்கள்.!
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment