Tuesday, 8 December 2015

சங்கப் பாடல்களை அறிவோம் புறநானூறு-185

sanga paadalgal3
தொண்டைமான் இளந்திரையனின் பாடல் இது. இடையூறின்றி செலுத்த வேண்டியது வண்டி மட்டுமல்ல; நாட்டின் ஆட்சியையும்தான் என்பதை நயமோடு சொல்லுகின்ற பாடல்.
கால் பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகைக்கூழ் அள்ளற்பட்டு
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே.
பொதுவியல் திணையில், பொருண்மொழிக் காஞ்சித்துறையில் அமைந்த பாடல்.

வண்டியினுடைய சக்கரமும் அச்சும் இணைந்தது போல்தான் இவ்உலகத்து இயக்கமும். நாடு காவலாகிய வண்டியைச் செலுத்துகின்றவன் திறமையானவனாக இருந்தால் வண்டியானது, தடையின்றிச் செல்லும். அதைச் செலுத்துகின்றவன், வண்டியைச் செலுத்துகின்ற முறைமை குறித்துத் தெளிவில்லாதவனாக இருந்தால் அவ்வண்டி ஒவ்வொரு நாளும் பகையாகிய சேற்றில் அகப்பட்டு மிகப்பலவாகிய தீய துன்பத்தினை மேன்மேலும் உண்டுபண்ணும் என்கின்றார் தொண்டைமான் இளந்திரையன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment