தினமணியில் மாலன் எழுதிய தரையில் வீழ்ந்த நட்சத்திரம்! என்ற கட்டுரையில் இரண்டு பிரச்சினைகளை நாட்டுப்பற்றிற்கு எதிரானவை என்று சாடியிருக்கிறார்:
1)
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் நாட்டைவிட்டு வெளியேறிவிடலாம்
என்று தன் மனைவி தன்னிடம் சொன்னதாக அமீர் கான் சொல்லியது.
2) இந்து மத அடிப்படைவாதிகளுக்கு
எதிராகவும் சாதீயக் கட்டமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்த
எழுத்தாளர் குல்பர்கி வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைக்
கண்டித்து பிற எழுத்தாளர்கள் தங்களுடைய சாகித்ய அகாதமி விருதுகளை திருப்பி
அனுப்பிக் கண்டனம் தெரிவித்தது.
இந்த இரண்டு நிகழ்வுகளும் நாட்டில் இந்து மத நம்பிக்கையின் பெயரில் நடந்த வன்முறைகளுக்கு எதிரான கண்டனங்கள்.
அமீர் கான் என்ற நடிகரையாவது அவர் சார்ந்த
மதத்தை வைத்து, மாட்டுக்கறி தின்றதற்காகக் கொல்லப்பட்ட ஒரு
இஸ்லாமியருக்காகப் பரிந்து பேசும் மதவெறியர் என்று ஓரளவு கதைகட்டிவிடலாம்.
அறிவுசார் எழுத்தாளர்கள் மத வேறுபாடின்றி, தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய
அகாதமி விருதுகளைத் திருப்பி அனுப்பித் தங்கள் எதிர்ப்பைக் காட்டியதை
“ஃபாஷன் ஸ்டேட்மெண்ட்” என்று மாலன் சாடியிருப்பதை என்னவென்று சொல்வது?
இந்துத்வ வெறியர் என்றா அல்லது நாட்டுப் பற்றாளர் என்றா?
இவையிரண்டையும் எந்தவிதத்தில் ஃபாஷன்
ஸ்டேட்மெண்ட்டாக எடுத்துக் கொள்ளமுடியும்? நாட்டில் நடக்கும் கொடுமைகளை
எதிர்த்து குரல் கொடுப்பவர்களைத் நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று
மக்களைத் திசைதிருப்பும் நோக்கில் அரசியல்வாதிகள் தூற்றலாம். அந்த வேலையை
எழுத்துத் துறையில் இருக்கும் மாலன் செய்திருப்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.
அமீர் கான் ஒரு இந்தியக் குடிமகனாகத் தன்
குமுறலைச் சொல்லியது “ஃபாஷன் ஸ்டேட்மெண்ட்” என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக அவரைக் குமுற வைத்த
நிகழ்வுகளில் ஒன்றைப் பார்ப்போம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment