நுாறு
ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த மழைதானே. அடுத்த கன மழை எப்போதாவதுதானே
வரப்போகிறது என்று, அனைத்தையும் மறந்து பழையபடியே இருக்கப் போகிறோமா? இந்த
அளவுக்கு மழை அடுத்த ஆண்டும் வரலாம், ஏன் அடுத்த மாதம்கூட வரலாம்.
மாறிவிட்ட புவி வெப்பச் சூழ்நிலையில் எதுவும் எப்போதும் நடக்கும். நாம்
அனைவருமே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, தற்காத்துக் கொள்ளப் போகிறோமா
என்பது தான் இப்போதுள்ள கேள்வி..
கடந்த சில தினங்களில் தமிழகமெங்கும்
கொட்டித் தீர்த்த பருவ மழை, பல படிப்பினைகளை நமக்கு கொடுத்துள்ளது.
குறிப்பாக சென்னையில் பெரிய அளவில் வெள்ளச்சேதம் ஏற்பட்டதற்கு,
நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு தான் பிரதான காரணம். வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டதற்குப் பின் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அடையாளம் காண்பது
எளிதாகியுள்ளது. மேலும் வெள்ள நீருடன், பல ஆண்டுகளாக சென்னையில் தேங்கி
இருந்த, பிளாஸ்டிக், பாலிதீன் பைகள், துணிக் கழிவுகள் உள்ளிட்டவை கடலுக்கு
இழுத்து செல்லப்பட்டன. இதனால், சென்னையின் நீர்வழித் தடங்கள்
சுத்தமாகியுள்ளன. அரசு குறைந்தபட்சம் இப்போதாவது நிலைமையை உணர்ந்து, நீர்
வழித்தடங்களில் உள்ள கட்டுமானங்கள் அனைத்தையும் தயவு தாட்சண்யமின்றி காலி
செய்ய வேண்டும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment