சென்னையிலிருந்து
பழைய மாமல்லபுரம் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் ‘செம்மஞ்சேரி குடிசை
மாற்று வாரிய குடியிருப்பு’ உள்ளது. இது சென்னை மாநகராட்சியின் 200ஆவது
வார்டாக இருந்த போதிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், தோமையர் மலை ஒன்றிய
எல்லைக்குள் உள்ளது. ஆகவே, இங்குள்ள மக்கள் சென்னைக்கும்
காஞ்சிபுரத்துக்குமாக அலைக்கலைக்கப்படுகிறார்கள். இங்கு சுமார் 6,700
குடும்பங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 1800 வீடுகளில் சுனாமியால்
பாதிக்கப்பட்டவர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மீதம் உள்ளவற்றில்
சென்னை மாநகரின் 23 குடிசைப் பகுதிகளிலிருந்து கட்டாயமாக
அப்புறப்படுத்தப்பட்டவர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அதன் விவரம்:
1.சீனிவாசபுரம், 2. நொச்சிக்குப்பம், 3.
தியாகராய நகர், 4. நம்பிக்கை நகர், 5. திடீர் நகர், 6.சத்யா ஸ்டுடியோ
அருகில், 7. ஸ்டாலின் நகர், 8.கோட்டூர்புரம், 9.தனக்கோடிபுரம், 10.
நுங்கம்பாக்கம், 11.மைலாப்பூர், 12.தேனாம்பேட்டை, 13.சைதாப்பேட்டை, 14.
ஓட்காட் குப்பம், 15. ஓசூர் குப்பம், 16. திருவான்மியூர் குப்பம், 17.
சூளைமேடு, 18. பெசன்ட் நகர், 19. அடையார், 20. பட்டினப்பாக்கம், 21. டுமீங்
குப்பம், 22. சத்யா நகர், 23. பாரதியார் நகர்.
இங்கு 25,000 க்கும் மேற்பட்ட மக்கள்
வசிக்கின்றனர். இவர்களில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் ஒடுக்கப்பட்ட
விளிம்புநிலை மக்கள். இவர்கள் ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களாக உள்ளனர்.
முன்பு,இவர்களின் வாழ்வாதாரம் அருகிலேயே இருந்தது. இப்போது வாழ்வாதாரம்
முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மிகவும் வறுமையான சூழலில்
வசிக்கின்றனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment