தமிழர்களின்
வீட்டு வாசலை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ஒற்றை இழையில் இழைந்தோடும்
கம்பிக் கோலங்கள், அழகினை மையமாகக் கொண்டது மட்டும்தானா? எந்தக் காலத்தில்
இருந்து இவ்வரை கோலத்தை நாம் வாசலில் இடத் தொடங்கினோம் என்ற
கேள்விகளெல்லாம் என் நெஞ்சில் நிழலாடத் தொடங்கிய காலத்தில் எனக்குக்
கிடைத்த விடைகளே இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோலக்கலையின் தோற்றம்:
இன்று நாம் குறிப்பிடும் கோலமிடுதல்,
பல்வேறு பரிணாம வளர்ச்சியினைப் பெற்று வந்திருக்கிறது என்பதை
ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களிலிருந்து பெறமுடிகிறது.
தமிழர்களின் குறியீடுகளாகப் பயன்படுத்திய
ஓவியங்களில் புள்ளியிட்டுக் கொள்ளுதல் என்பது கற்கால மனிதன் தொட்டு
காணப்படும் முறையெனலாம்(இராசு. பவுன்துரை, 2004,ப.57) என்று
கூறுவதிலிருந்து புள்ளியிட்டு வரைந்த முறை நம்மிடையே மிகப் பழங்காலந்தொட்டே
இருந்துவந்துள்ளமையினை அறிய முடிகின்றது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment