உலகுக்கெல்லாம் உணவு படைக்கும் உழவர்களைப்
பெருமைப்படுத்தும் விதமாகவும் அவர்களுக்கு நன்றி போற்றும் விதமாகவும்,
மண்மணம் மாறாத பாரம்பரிய மரபுவழியில் கொண்டாடப்படுவதே நமது பொங்கல்
பண்டிகை.
தமிழகம் தாண்டி பல்லாயிரக்கணக்கான
மைல்களுக்கு அப்பால், அமெரிக்காவில் வாசிங்டன்/பால்டிமோர் அருகில்
மேரிலாந்து மாகாணத்தில் இருக்கும் காக்கிஸ்வில் நண்பர்கள் குழுவினர்
இணைந்து, அத்தகு உழவர்களின் பெருமையை நமது அடுத்த தலைமுறையினர்க்கும்,
தமிழர்கள் அல்லாத வேறு மொழி பேசும் இந்திய அன்பர்களுக்கும், அமெரிக்காவில்
வசிக்கும் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த வெளிநாட்டு நண்பர்களுக்கும் நமது
பண்பாட்டு விழுமியங்களை, பாரம்பரிய மகத்துவங்களை, பல்வேறு கலைவடிவங்களை
அறிமுகப்படுத்தவும், அவற்றின்பால் அவர்களை ஆற்றுப்படுத்தவும் நோக்கம்
கொண்டு ‘உழவர் திருவிழா’வை சென்ற சனவரி 9ஆம் நாளன்று வெகு சிறப்பாக
ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment