கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?
பதில்: நான் பேராசிரியர்
மருத்துவர் வேணுகோபால். பிறந்தது திருவண்ணாமலை அருகில் இருக்கும் போளூர்
என்ற ஒரு சிறிய நகரம். அவ்விடத்திலே பத்தாம் வகுப்புவரை முடித்துவிட்டு,
லயோலா கல்லூரியில் P.U.C. முடித்து, அதற்குப் பிறகு ஸ்டான்லி
மருத்துவக்கல்லூரியில் M.B.B.S மற்றும் M.D இரண்டையும் முடித்தேன். அதன்
பிறகு உதவி பேராசிரியராகவும், பேராசிரியராகவும் அரசுக் கல்லூரிகளில்
பணிபுரிந்தேன். ஸ்டான்லியில் இருபது வருடத்திற்கு மேலும், சென்னை
மருத்துவக் கல்லூரியில் இரண்டாண்டும், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில்
இரண்டாண்டும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஒன்றரை ஆண்டும்
என்னுடைய பணி இருந்தது.
அதற்குப் பிறகு வெளிநாட்டில் மலேசியாவில்
உள்ள கோலாலம்பூர் மாநகரில் மூன்றாண்டுகளுக்கும் மேலும், அமெரிக்காவில் மேயோ
கிளினிக்கிலும் என்னுடைய பணி முடிந்ததற்குப் பிறகு, மறுபடியும்
தமிழகத்திற்குத் திரும்பிவந்து பெருந்துறை மருத்துவக்கல்லூரியில்
மருத்துவத்துறை பேராசிரியராகவும், அதற்குப் பிறகு முதல்வராகவும் இருந்து
பணி ஓய்வு பெற்றபிறகு காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில்
முதுகலைப்பட்டப்படிப்பு இயக்குனராக இருந்து பதினைந்து நாட்களுக்கு முன்
ஓய்வுபெற்று, இப்பொழுது சர்க்கரைநோய் துறை என்பதால் அதிலே சிறப்புப்
பயிற்சிகள் பெற்றிருப்பதால் அதை இப்பொழுது எடுத்துக்கொண்டு இப்பொழுது அதன்
ஆலோசகராக சிறப்புத் துறை மருத்துவராகப் பணியாற்ற இருக்கின்றேன்.
கேள்வி: சர்க்கரை நோய் என்றால் என்ன?
பதில்:
என்னுடைய கருத்துப்படி இதற்கு தவறான பெயர் கொடுத்துவிட்டார்கள் என்று
நினைக்கின்றேன். சர்க்கரை நோய் என்று சொல்வதற்குப் பதிலாக, சர்க்கரை
அதிகமான மாற்றம் ஏற்படுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி
தெரிந்துகொள்வது மிக அவசியம். நாம் உண்ணும் உணவில் மாவுச்சத்து, கொழுப்புச்
சத்து, புரதச் சத்து என்ற மூன்று முக்கியமானது. மாவுச்சத்தில்
முக்கியமானது என்னவென்றால், செரித்த பிறகு கடைசியாக மாறுவது குளுக்கோஸ்
அல்லது சர்க்கரை. குளுக்கோஸ் என்பது ஒரு வகையான சர்க்கரை. இதனுடைய பணி
என்னவென்றால், இதுதான் நம் உடம்பிற்கு சக்தி(Energy) கொடுக்கக்கூடியது.
எப்படி காருக்கோ அல்லது மற்ற வாகனங்களுக்கோ பெட்ரோல் எரிபொருள் சக்தி
கொடுக்கிறதோ, அதுபோல் இது ஒரு எரிபொருள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.