மேற்குத்
தொடர்ச்சி மலைத் தொடர்களின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள பொதிகைமலை
தொன்மையும், தனித்தன்மையும் வாய்ந்ததாகும். 1,868 மீட்டர் உயரமுள்ள இம்மலை,
நெல்லை, கன்னியாகுமரி, கொல்லம், திருவனந்தபுரம் போன்ற தமிழக மற்றும் கேரள
மாவட்ட எல்லைப் பகுதிகளுக்குள் அமைந்துள்ளது. இதில் குற்றால
வனச்சரகத்திற்கு உட்பட்ட ஒரு புடவுக்கு வெளிப்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ள
கல்வெட்டு எழுத்துக்கள், பல ஆண்டுகளாகவே அகழ்வாராய்ச்சியாளர்களிடம்
கண்ணாமூச்சிக் காட்டிக்கொண்டிருக்கிறது. சுமார் 2500 வருடங்களுக்கு
முற்பட்ட அக்கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை இன்றளவிலும் முழுமையாகப் படிக்க
இயலவில்லை.
அப்படி என்னதான் அக்கல்வெட்டில் உள்ளன
என்பதை நேரடியாகப் பார்ப்பதற்காக அங்குசெல்ல முடிவெடுத்தோம்.
குற்றாலத்திலிருந்து 35 கி.மீ. தூரத்திற்கு மலை வழியே கால்நடையாக நடந்து
செல்லவேண்டும். குற்றால நண்பர் ஒருவர் வழிகாட்ட, இடுப்பு உயரத்திற்கு
புதர்களால் சூழப்பட்ட பாதைகள் ஊடாக, செங்குத்துச்சரிவு ஊடாக, ஆறுகள் ஊடாக,…
காட்டுப்பயணம் தொடர்ந்தது. 4 மணிநேர மலை நடைப்பயணத்திற்குப்பின்,
கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்த இடத்தை அடைந்தோம். இந்த இடத்தின் பெயர்தான்,
‘சன்னியாசிபுடவு’. உள்ளூர் மக்கள், இதனை ‘பரதேசி குகை’ எனஅழைக்கின்றனர்.
நெடுங்காலத்திற்கு முன்னர் சன்னியாசி
ஒருவர் இப்புடவிலே வாழ்ந்ததாகவும், காட்டில் கிடைப்பவற்றை உண்டு அங்கேயே
காலம் கழித்ததாகவும் வழிகாட்டி தெரிவித்தார். வழிகாட்டிக்கு அந்தப்புடவு
மட்டும்தான் தெரிந்திருந்தது. கல்வெட்டு எழுத்துக்கள் இருக்குமிடம்
அவருக்குத் தெரியாது என்றதால், அரைமணி நேரமாக துருவித்துருவி
தேடிப்பார்த்து எழுத்துக்களை ஒருவழியாகக் கண்டுபிடித்தோம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment