முதலாளித்துவம் தோன்றிய சிறிது
காலத்திலேயே அது அமைப்பாக உருவெடுத்துவிட்டது என்றே தோன்றுகிறது. முன்பே
கூறியவாறு, ஒரு அமைப்பாக முதலாளித்துவத்தின் முக்கியமான பணி உற்பத்திக்குத்
தேவையான பொருட்களையும் மனித உழைப்பையும் ஒருங்கிணைத்து நுகர்வுப்
பொருட்களை உருவாக்கி, அவற்றை நுகர்வோரிடம் கொண்டு சேர்த்து அதன் மூலம்
லாபத்தைப் பெறுவது. அந்த அமைப்பின் உறுப்பினர்கள், உற்பத்திக்குத் தேவையான
பண முதலீட்டை அளிப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட
நியதி. அதைவிட முக்கியமாக கச்சாப் பொருட்களை பெறத் தேவையான அதிகாரமும்
உற்பத்தியான நுகர்வுப் பொருட்களை நுகர்வோர்களால் ஏற்றுக்கொள்ள
வைப்பதற்குமான அதிகாரமுமே அதன் உண்மையான முதலீடுகள்.
அத்தகைய
அதிகாரத்தை உடையவர்கள் முதலாளித்துவ அமைப்பில் இல்லையெனில் அது விலை
கொடுத்து வாங்கப்படும். இங்கு அதிகாரம் என்பது அரசியல் அதிகாரம் மட்டும்
அல்ல. அது அறிவால் பெற்ற அதிகாரமாக இருக்கலாம், கல்வியால் பெற்றதாக
இருக்கலாம், நட்பால் பெற்றதாக இருக்கலாம். இந்த அதிகாரத்தை அடையும்
முயற்சியில், முதலாளித்துவ அமைப்புகளில் பெரும்பாலானவை எல்லா அற
உணர்வுகளையும் தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றன. பெரும்பாலும் இந்த
அறமீறல்கள், அவை அடைந்த அதிகாரத்தின் துணை கொண்டு சட்டப்பூர்வமாக
மீறப்படுபவை. இந்த அதிகாரம் எவ்வளவுக்கெவ்வளவு கச்சாப் பொருட்களை குறைந்த
விலையில் பெற உதவுகிறதோ எவ்வளவுக்கெவ்வளவு நுகர்வுப் பொருட்களை அதிக
விலைக்கு விற்க உதவுகிறதோ அந்த அளவுக்கு அந்த முதலாளித்துவ அமைப்பு
வெற்றிகரமாக இயங்கும். பொது வெளியில் உள்ள பணப்புழக்கத்தை தன்னை நோக்கி
ஈர்க்கும். முதலாளித்துவ அமைப்பின் நோக்கம், பொதுவெளியில் புழங்கும் பணத்தை
தன்னை நோக்கிக் குவிப்பதுதான்.
பெரும்பாலும் முதலாளித்துவத்தைத் தழுவி
விட்ட உலகப் பொருளாதாரத்தில், பணம் இவ்வாறு முதலாளித்துவ அமைப்புகளிடம்
குவிகிறது. அந்தக் குவிதலின் ஒரு பகுதி உற்பத்தியின் உழைப்புக்காக
அளிப்பதன் மூலம் பரவலாக்கப்படுகிறது. இந்தப் பரவலாக்குதல் மொத்த
உற்பத்தியின் ஒரு சிறு பகுதியே. தொழில் இயந்திரமயமாக்கப்படுவதன் மூலம்
பணத்தின் பரவலாக்கம் மேலும் குறைக்கப்படுகிறது. இயந்திர மனிதர்களை (Robots)
பெருமளவில் தொழில்களில் பயன்படுத்துவது தற்போது
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment