Thursday, 14 April 2016

இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21: ஒரு பார்வை !!


law book and gavel
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 21 என்ன சொல்கின்றது என்றால், “No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law”
எந்த மனிதனின் வாழ்வுரிமையும்  அல்லது தனி மனிதஉரிமையும் சட்டப்படியானவழிமுறை தவிர்த்து வேறு எதன் மூலமும்  பிடுங்கிக்கொள்ளப்படமாட்டாது. சுருங்கச்சொல்ல வேண்டும் எனின் குற்ற விசாரணை மற்றும் தண்டனைக்கு தகுந்த விசாரணை இன்றி ஒரு நபரின் தனிப்பட்ட உரிமைகளையும், உயிரையும் எடுக்கக் கூடாது.
அதன்படி இந்திய உச்சநீதி மன்றங்கள் இந்த சரத்து 21-ஐ கொண்டு தீர்ப்பு வழங்கும் நிலையில்  பரந்தகன்ற பொருள்விளக்கம் கொண்டே கையாள்கின்றன.

Maneka Gandhi எதிர்  Union of India 1978 SC 597, என்ற வழக்கில் உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு  சரத்து 21-ஐ அரசு தனி மனிதருக்கு எதிராகக்கையாளும் போது தன்னிச்சையான, நியாயமற்ற அல்லது பொய்யான நடவடிக்கைகளை  எடுக்கக்கூடாது என்று அரசிற்கு விதிமுறைகள் கூறியது. மேலும் சரத்து 14, 19, 21 ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று நீதிமன்றம் நிறுவியது. ஒரு நபரின் தனி மனித உரிமையைப் பறிக்கும் பட்சத்தில் சரத்து 14 மற்றும் 19-ல்கூறியுள்ளவற்றையும் மனதில் கொள்ள வேண்டும் என்று கூறியது. மேலும் சரத்து 21 ஒரு நபர் சுரண்டப்படாது மனித தகுதியோடு, மரியாதையாக வாழ வழிவகுக்கின்றது. அதன் படி,  தனி நபரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது ஒரு அரசின் அரசமைப்பு கடமையாகும். குறிப்பாக சமூகத்தில் நலிவடைந்த மக்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment