கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?
பதில்: என்னுடைய சொந்த
ஊர் நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவியில்தான் பள்ளிப் படிப்பை படித்தேன்.
அங்கு ஐந்தாம் வகுப்புவரை படித்துவிட்டு, அதன்பிறகு இசுலாமிய மார்க்கம்
குறித்த கல்விக்காக எனது பெற்றோர்கள் அனுப்பி வைத்துவிட்டார்கள். நெல்லை
மாவட்டம் தென்காசியில் பத்தாண்டு காலம் மார்க்கக் கல்வியை முடித்தேன்,
2002ன் இறுதியில் அது முடிந்தது. 2003ன் துவக்கத்தில் நான் இந்தக் கொள்கை,
அமைப்பின்பால் ஈர்க்கப்பட்டு இதில் ஒரு பிரச்சாரகனாக உள்ளே நுழைந்து
இன்றுவரையிலும் பணி செய்து கொண்டிருக்கிறேன். பள்ளிக்கூடத்தில் படித்தது
ஐந்தாம் வகுப்பு வரையிலும்தான். அதன் பிறகு மார்க்கக் கல்வி என்று
போய்விட்டேன். அதன் பிறகு சொந்த விருப்பத்தின்பேரில் எட்டாம் வகுப்பை
தனியாக படித்து தேர்வு எழுதினேன், பத்தாம் வகுப்பும் எழுதினேன். திறந்த
வெளி பல்கலைக்கழகம் முறையில் M.A வரலாறு படித்து அதற்குரிய சான்றிதழைப்
பெற்றிருக்கிறேன்.
கேள்வி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் எப்போது துவங்கப்பட்டது, எதற்காக துவங்கப்பட்டது?
பதில்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்கிற இந்த அமைப்பைப் பொறுத்த வரையிலும், இது
1980களின் துவக்கத்தில் கொள்கை ரீதியாக துவங்கப்பட்டது. அதற்குப் பிறகு அது
பல்வேறு பரிணாமங்கள் அடைந்து பலதரப்பட்ட பெயர்களில் இயங்கியிருக்கிறது.
அப்படியே கடந்து கடந்து கடந்து கடைசியாக 2003ல்தான் தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் என்கிற பெயரில் நாங்கள் பணி செய்ய ஆரம்பித்திருக்கிறோம். அதற்கு
முன்பு பல பெயர்களில் இயங்கியிருக்கிறோம். இது 1980 களின் துவக்கத்தில் இதே
கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக துவக்கப்பட்டது. இதனுடைய நிறுவனர்
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சார்ந்த பி.ஜெயினுலாபதி. அவருடைய
பதவிக்காலம் முடிந்ததற்குப் பிறகு நாங்கள் இந்த நிர்வாகத்தை பொறுப்பேற்று
நடத்தி வருகிறோம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment