Tuesday 31 May 2016

விட்டுச்செல்லும் சுற்றுச்சூழல்..

Environment11

அழகிய மலைத்தொடர்கள், சமவெளி எங்கும் விளைச்சல்கள், ஆங்காங்கே பருவம் தவறாத மழைப்பொழிவு என்று அழகுறச் செழித்திருந்தது தான் நமது பாரதத் திருநாடு.
கடுங்குளிர், கடும் வெப்பம், அதிக மழைப்பொழிவு, குறைந்த மழைப்பொழிவு, மிதமான வெப்பநிலை, சீரான பருவ நிலை மாற்றம், பாலைவனம் மற்றும் பனி மலை இவ்வாறாக ஒரு கண்டத்தில் நிலவும் கால நிலை அனைத்தும் நம் நாட்டில் நிலவுவதால் தான் நமது நாட்டிற்கு துணைக்கண்டம் என்று பெயர். இயற்கை அன்னை அளித்த பெரும் கொடைதான் நாம் இங்கு பிறந்திருப்பது. அத்தகைய நாட்டை பேணிக் காத்தல் என்பது நம் தலையாய கடமை!

Changing Environment

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல்வேறு காரணங்களால் இன்று நமது சுற்றுச்சூழல் பெருவாரியாக மாசுபட்டு வருகிறது.


மக்களிடம் எவ்வளவு தான் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டு வந்தாலும் அதை ஒரு அலட்சியப்போக்கோடு கடந்து செல்வதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே மக்கள் தான் சமூக வலை தளங்களில் சமுதாயத்தைப் பேணிக் காக்க வேண்டும் என்று பக்கம் பக்கமாக வசனமும் பேசி வருகிறார்கள். சிலர் எழுதுவதோடு நில்லாமல் செயலிலும் ஈடுபடுகிறார்கள், இது பாராட்டத்தக்க விடயம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 30 May 2016

பாரதிதாசன் பரம்பரை


bharathidasan1
மகாகவி பாரதியாரின் கவியாளுமையால் அவரைப் பின்பற்றித் தன் கவிதைப் பாதையை வகுத்துக்கொண்டவராக விளங்கியவர் பாரதிதாசன் ஆவார். பாரதியின் கவிதை நெறிகளான எளிய சொற்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம் ஆகியவற்றாலான மரபுசார்ந்த கவிதைகளைப் படைத்துப் பாரதியின் பாதைக்கு வலுசேர்த்தவர் பாரதிதாசன். இவர் பாரதியைப் போலவே உணர்வு மிக்கக் கவிதைகளையும், சிறு கதையமைவு கொண்ட பாவியங்களையும் வரைந்தளிக்கும் நன்முறையைக் கைக்கொண்டவர். பாரதியின் கவிதை நெறியோடுத் தமிழ்ச்சுவையை, சமுதாய விழிப்புணர்வு பெறச் செய்யும் புரட்சிக் கருத்துக்களை, பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கலந்து மரபுக் கவிதைகளைப் படைப்பது பாரதிதாசனின் தனித்த நெறியாகின்றது. பாரதி கவிதா மண்டலத்திலிருந்து உதித்த பாரதிதாசன் தனக்கென ஒரு கவிதா மண்டலத்தை அமைத்துக் கொள்ள விழைந்தமையும் பாரதியின் வழிப்பட்டதே ஆகும்.

பாரதியாரின் கவிதைகளைப் படியெடுக்க, அவருக்கு உதவிகள் பல செய்ய வந்த கனகசுப்புரத்தினம், பாரதியின் நட்பால், அவரின் கவித்திறத்தால் பாரதிக்குத் தாசன் ஆகின்றார். இதுபோலவே பாரதிதாசனைப் பின்பற்றி அவருடன் பழகி வாழ்ந்தவர்கள், எழுதியவர்கள் பாரதிதாசன் பரம்பரையாகின்றனர். பாரதியின் பரம்பரை பாரதிதாசன் பரம்பரையாகப் பரிணமித்துள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 29 May 2016

நுழைவுத் தேர்வு – நுழைய முடியுமா?


Entrance-Examination3
நடுவண் அரசு (Union Government) மருத்துவப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வை நடத்த முடிவு செய்தது, பின்பு ஓராண்டு தள்ளி வைத்துவிட்டது. நுழைவுத் தேர்வு குறித்த விவாதங்களும் அவ்வப்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டுமா? என்று கேட்டால், கல்வியாளர்களின் பதில் “உறுதியாக ஆம்”.

சில நாட்களுக்கு முன்புதான் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும், 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியாகின. தனியார் பள்ளி மாணவர்கள் மிக அதிகமான மதிப்பெண்களைப் பெற்றிருப்பது தொலைக்காட்சி வழியாகவும், செய்தித்தாள், ப்ளக்ஸ் வழியாகவும் தெரிகிறது.

entrance-exam5

பத்து ஆண்டுகளுக்கு முன், நான் படித்த காலங்களில் அப்போதைய மாணவர்களைக் காட்டிலும், இப்பொழுது பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்கள். அதிலும் மாநில அளவில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை மாணவர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனால் கல்வியாளர்கள் இது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறார்கள். ஏன்?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 26 May 2016

வள்ளி என்றொரு நாயகி(சிறுவர் சிறுகதை)


valli1
மன்னர் விக்கிரமங்கலத்திற்குக் குழந்தை பாக்கியம் கிடையாது. இதனால் மன்னரும் ராணியாரும் பெரிதும் துயருற்றனர். இருவருக்கும் பெண்குழந்தைகள் என்றால் கொள்ளைப்பிரியம், ஒரு பெண்குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க இருவரும் ஆசைப்பட்டனர். மன்னர் தனது விருப்பத்தை தனது தாய்மாமன் நிறைமதியாரிடம் தெரிவித்தார். நிறைமதியார் மன்னரின் தாய்மாமன் மட்டுமல்ல, அரசின் ராஜகுருவும் கூட, அவரின் வழிகாட்டுதலின்படியே மன்னர் தனது பரிபாலனத்தை நடத்திவந்தார். “தத்தெடுப்பதற்கான அவசியம் இப்போது இல்லை! காலம் கனியும்!”- என்றார் ராஜகுரு, மன்னர் குழம்பிநிற்பதைப் பார்த்த அவர் மேலும் “முனைமுறிந்த அம்புகள் வழிகாட்டும்!”- என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார். ராஜகுரு எப்போதும் அப்படித்தான், பூடகமாகவே பேசுவார், ஆனால் அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆயிரம் அட்சரங்கள் பெறும், அதற்கான பொருளை உடனடியாகப் விளங்கிக்கொள்ள முடியாது. காலத்தின் போக்கில்தான் விளங்கிக்கொள்ள முடியும். மன்னரின் நலம்விரும்பியான ராஜகுருவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு சிறிதுகாலம் காத்திருப்பது என மன்னரும் ராணியாரும் முடிவுசெய்தனர்.

வள்ளி ஒரு ஏழைச்சிறுமி, பத்துவயதுப் பெண், சிறுவயதிலேயே தாய்தந்தையரை இழந்தவள், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள். அவள் வசித்தவந்த ஊரின் பெரியதனக்காரர்கள் வீட்டுக் கால்நடைகளை மேய்ப்பது அவளது வேலை, அதில் கிடைத்த  சிறுவருவாயில் அவள் தன்னையையும் பாட்டியையும் பாதுகாத்து வந்தாள். மற்ற சிறுவர்சிறுமியர் போன்று பள்ளிசெல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் அவளுக்கு உண்டு, ஆனால் இயல்பாகவே எதையும் கூர்ந்துகவனித்து கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவள்,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 25 May 2016

சிக்கிம் இந்திய எல்லைப் பகுதியின் கடவுள்(Hero of Nathula Baba Harbhajan Singh)


sikkim1

இந்தியாவின் மாநிலமான சிக்கமின் எல்லைப் பகுதியில் பணிபுரியும் இந்திய இராணுவ வீரர்களின் கடவுளாக இருப்பவர் பாபா ஹர்பஜன் சிங். இவர் 1941ம் ஆண்டில் Batthe Bhain என்ற அன்றைய பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். இவர் இந்திய தேசிய இராணுவத்தில் சிறு சிப்பாயாக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் 1965-ல் 14-வது ராஜ்புத்(Rajput) படைப்பிரிவில் உதவி அதிகாரியாக பணி உயர்வு பெற்றார். இவர் 1965ம் ஆண்டில் ஏற்பட்ட இந்திய – பாகிஸ்தான் போரில் தனது சிறப்பான பணியை செய்தார். பின்னர் 1968ல் 18-வது ராஜ்புத் (Rajput Regienent) மாற்றப்பட்டு சிக்கிம் மாநிலத்திற்கு பணியிடம் மாற்றப்பட்டார்.

சிக்கிம் மாநிலத்தில் இந்தியா மற்றும் சீன எல்லைப்புற பகுதியான Nathula pass என்ற பகுதி உள்ளது. இது பெரும் வரலாறு சிறப்பு பெற்ற பகுதி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பல அரசர்கள் சீனாவுடன் உறவு கொள்ளும்போது பண்டமாற்றம் மற்றும் போக்குவரத்துக்காக இந்தப் பகுதி பயன்படுத்தப்பட்டது. இந்த வரலாறு சிறப்பு மிக்க Nathula பகுதியில் பாபா, 1968ம் ஆண்டில் mule caravan என்ற பகுதிக்குச் சென்று பாதுகாக்கும் பணியில் இருந்தபோது 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 24 May 2016

தாலாட்டுப் பாடுங்கள்


thaalaattu3
அழுகின்ற குழந்தையை அரவணைத்து அதனை மடியில் போட்டு தாலாட்டி தூங்க வைக்கும் மரபு தமிழ்ச் சமூகத்தில் இன்றைக்கு அருகி வருகின்றது என்றே சொல்ல வேண்டும். அழுகின்ற குழந்தைக்கு கணினியில் குழந்தைகள் பாடல் நாம் காண்பித்தாலும், நாம் நம் நாவினை அசைத்துப் பாடும் தாலாட்டுப் போல் சிறப்பாக இருக்காது. “தால்” என்றால் நாக்கு “ஆட்டுதல்” என்பது அசைத்தல், நாவினை அசைத்துப்  பாடுவதால் தால்+ஆட்டு=தாலாட்டு எனப் பெயர் பெற்றது என்று கூறுவர். அதே போன்று தால் என்றால் தொட்டில் என்றும்  பொருள்படும். தாய் தொட்டிலை ஆட்டிக் கொண்டே பாடுவதால் தாலாட்டுப் பாடல் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.

பெரும்பாலும் தமிழ்ச் சமூகத்தில் ஆண் குழந்தை தாலாட்டு, பெண் குழந்தை தாலாட்டு என்று பிரித்து பாடும் வகையும், இருபாலருக்கும் ஒரே தாலாட்டு பாடும் மரபும் உண்டு. ஆண் குழந்தைகளுக்கு வீரம் செறிந்த பாடல்களையும், பெண் குழந்தைக்கு மென்மையான பாடல்களையும் வைத்துள்ளனர் என்ற போதும் இன்றைக்கு சூழலில் இருபாலருக்கும் ஒரே தாலாட்டுப் பாடலை படுவதே  இளமையிலிருந்தே சமத்துவத்தை குழந்தைகளிடம் கொண்டுச் செல்லும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 23 May 2016

பொருளாதாரம்


porulaadhaaram1
ஒரு நாடு எதில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்படுமானால், முதலில் மக்கள் நலம் தான் சிறந்த பதிலாக பெறப்படும். மக்கள் நலத்திற்குள் கல்வி, மருத்துவம், அனைவருக்கும் உணவு, வசிப்பிடம், நல்ல குடிநீர் மற்றும் இன்ன பிற பொதுவான அடிப்படை வசதிகள்  என அனைத்தும் அடக்கம். ஆனால் பெரும்பாலான நாடுகளில் தன்னிறைவு என்றவுடன், “நாட்டு வளர்ச்சியை அதாவது பண மதிப்பை மட்டுமே வானளவு உயர்த்துவது” என தவறான மனக்கணக்கு போக்கு நடைமுறையில் இருந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சி என்பதே அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில்தான் இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

நம் நாடு ஒரு வளர்ந்து வரும் நாடு, அதே போல் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி விகிதம் தொழில்துறையின் மூலமும், அந்நிய செலாவணி மூலமும் நிலைநிறுத்தப்பட்டு வளர்ந்துகொண்டே வருகிறது. இம்மாதிரியான காரணத்தால் தொழில்துறையிலும், தொழில்நுட்பத்திலும் ஆராய்ச்சி அரங்கேறுகிறது. இது பாராட்டத்தக்க விடயம் தான். ஆனால் வேளாண் துறை சார்ந்த விளை நிலங்கள் அவைகளுக்கு இரையாக்கப்படுவது தான் மாபெரும் துயரம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

நோட்டா (NOTA) – தேர்ந்தெடுத்து புண்ணியமில்லை


nota3
NOTA என்பதற்கு None Of The Above என்பது விரிவாக்கம். கொடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் எந்த கட்சிக்கோ வாக்காளருக்கோ வாக்களிக்க விரும்பாவிடில் தன்விருப்பமின்மையை தெரிவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது இந்த நோட்டா என்னும் தேர்வு.


2009ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டு, 2013ம் ஆண்டு முதல் வாக்கு எந்திரத்தில் சேர்க்கப்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 19 May 2016

முள்ளிவாய்க்கால் இன்னும் விடிவில்லை!(கவிதை)


mullivaaikkaal1
சிங்களத்தின்
அதர்ம வெறித்தாண்டவத்தின்
நீண்ட தொடர்ச்சியாய்-
எம் இனத்தை
அடக்கி ஒடிக்கி
முடமாக்கி
குருடாக்கி
செவிடாக்கி
கொன்று தின்று புதைத்து

பைத்தியமாக்கி நடைப்பிணங்களாய்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20584

இலக்கியங்களில் பெண்ணியம்


ilakkiyaththil-2
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப”   என்றும்
“செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலன”
என்றும் பெண்மையின் குணநலன்களை உரைக்கிறது தொல்காப்பியம். இத்தகைய பெண்களைப் பாடாத புலவர்களும் இல்லை, படைப்பாளர்களும் இல்லை, படைப்புகளும் இல்லை எனலாம். கவிதையையும் கற்பனையையும் பிரிக்க முடியாதது போல, பெண்களையும் படைப்புகளையும் பிரிப்பதென்பது அரிது.

பாராட்டுவதற்காகவோ, துணிச்சலுடனோ, வருணனைக்காகவோ, போராடுபவளாகவோ, பரிதாபத்திற்குரியவளாகவோ, ஏதோ ஒரு விதத்தில் அந்தந்த படைப்பாளர் வாழும் சமுதாய சூழ்நிலைக்கேற்ப பெண் இலக்கியத்தில் கையாளப்படுகிறாள்.

சங்க இலக்கியங்களில் பெண்ணியம்

சங்க கால மகளிர் வீரமுடைய பெண்மணிகளாகவே இலக்கியங்களில் சித்திரிக்கப்பட்டனர். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 18 May 2016

வாணிகச் சாத்தும் தமிழகத்தின் வணிகப் பெருவழிகளும்


3- Main Picture-Saathu vazhi
பண்டைக்காலத்தில் “வணிகப் பெருவழிகள்” பல தமிழக நகர்களை இணைத்ததையும், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையின் “பாலக்காட்டுக் கணவாய்” வழியாக மேற்குக் கடற்கரையில் தொடங்கும் வணிகப் பெருவழி ஒன்று இக்கால கோவை, கரூர், திருச்சி நகர்கள் வழியாக கிழக்குக் கடற்கரையின் பூம்புகார் துறைமுகம் வரை நீண்டிருந்தது எனநாம் அறிவோம். ஒரு வணிகப் பெருவழியாக நகர்களை இணைத்து வணிகர்கள் கூட்டம் தங்கள் பொருட்களைக் கொண்டு செல்ல உதவிய இத்தடம் ‘இராஜகேசரி பெருவழி’ எனவும் அழைக்கப்பட்டது. பாலக்காட்டுக் கணவாய் வழியாகச் செல்லும் இந்த பண்டைய வணிகப் பெருவழியே இன்றைய “தேசிய நெடுஞ்சாலை 67″ (NH 67- National Highway 67) எனப் பரிணாம வளர்ச்சி கூட அடைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

சேர நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் இடையே அமைந்த இந்த வணிகப் பெருவழி போன்றே, பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்குமான பெருவழி ஒன்று கம்பம் பள்ளத்தாக்கு வழியாக இடுக்கி செல்லும் பெரும் பாதையாக இருந்திருக்கிறது என “தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம்” அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இது இக்கால ஆரியங்காவு – செங்கோட்டைக் கணவாய் வழியாகக் கொல்லம் வரை அமைந்திருக்கக்கூடிய “தேசிய நெடுஞ்சாலை 744″ (NH – 744)யின் ஒரு பகுதியின் முந்தைய வடிவமாகவும் இருந்திருக்கக் கூடும். இது இக்காலத்தில் தென்காசியையும் கொல்லத்தையும் செங்கோட்டை கணவாய் வழி இணைக்கிறது. இக்கணவாய் பாலக்காட்டுக் கணவாய் போன்ற அகண்ட கணவாயன்று, 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

என்ன செய்யப் போகிறோம்?


genetic6
எனக்கு மாதுளம் பழங்கள் பிடிக்கும் என்பதால் ஒரு மாதுளம் செடியை வாங்க ஒரு நாற்றுப்பண்ணைக்கு அண்மையில் சென்றிருந்தேன். அதன் உரிமையாளர் இது வெறும் பூ மட்டும் தான் பூக்கும் காய்க்காது என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அடுத்து ஒரு பவளமல்லிச் செடியை எடுத்தேன். இதுவும் பூ மட்டும் தான் பூக்கும் விதையே வராது என்றார். ஏன் இப்படி என்று கேட்டேன். மக்கள் இப்படித்தான் விரும்புகிறார்கள் என்று மக்கள் மேல் பழியைப் போட்டார்.

இத்தகைய பரிசோதனை செடிகளில் மட்டுமல்ல விலங்குகளிலும் மேற்கொள்ளப்படுகிறது என்பது தெரியும். ஆயினும் இதை எப்படி எடுத்துக் கொள்வது? வெறும் ஆராய்ச்சி என்றோ இரசனை என்றோ மட்டும் இதை ஒதுக்கி விட முடியுமா?. பல்லுயிர்த் தன்மையை அழித்து எல்லாவற்றையும் ஒற்றைத் தன்மை ஆக்கும் செயலையும், இதற்குப்பின் ஒளிந்திருக்கும் பெருவணிக அரசியலையும் உற்று நோக்க வேண்டியுள்ளதும் அல்லவா?.


நாம் எல்லோருமே தெரிந்தோ தெரியாமலோ வணிக வலைக்குள் சிக்கிக் கொள்கிறோம். நாம் என்ன உணவு உண்ண வேண்டும் என்பது முதற்கொண்டு எந்த உடை உடுத்த வேண்டும்?, என்ன படிக்க வேண்டும்?, எங்கு படிக்க வேண்டும்?, எப்படி யோசிக்க வேண்டும்? என்பது வரை எல்லாமே நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன. நிறுவனர்களுக்கு நாமே ஒரு பண்டம் தான். அவர்களைப் பொருத்த வரையில் வாங்குபவர்கள் விற்பவர்கள் என்ற இரண்டு பிரிவு தான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 17 May 2016

இலவச சட்ட உதவி – ஒரு பார்வை


free legal advice1பணமில்லாத ஏழை மக்கள், தங்கள் வழக்கை நடத்த சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையினால் எந்தவொரு இந்திய குடிமக்களுக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 39-A வலியுறுத்துகின்றது. ஒரு அரசின் கடமை, அதன் குடிமக்கள் அனைவரும் சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்பட வேண்டும்  மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கிட உறுதி செய்ய வேண்டும் என்பதே என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின்  சரத்து 14 மற்றும் 22(1) வலியுறுத்துகின்றது.
குற்றவியல் நடைமுறை 304 இன் படி குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவியல் நடுவர் முன் நிறுத்தப்படும் அந்த நேரத்தில் இருந்தே, அவருக்கு பண வசதி இல்லாத நிலையில் சட்ட உதவி வழங்கிட வேண்டும் என்றும், பின் எப்போதெல்லாம் அந்த குற்றம் சாட்டப்பட்டவர் காவல் நீட்டிக்கப்படுகின்றதோ, சட்ட உதவி தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தலையங்கம் – ஆறாம் ஆண்டில் நுழையும் உங்கள் சிறகு


thalayangam1சிறகு இணைய இதழ் வெற்றிகரமாக ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2011ம் ஆண்டு மே 17ம் நாள் அன்று தொடங்கப்பட்ட நமது சிறகு இதழ் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. தமிழ் சமூகத்திற்கு அறிவார்ந்த வகையில் விழிப்புணர்வை தருகிற ஊடகமாக செயல்பட வேண்டும் என்ற பெருங்கனவை நனவாக்கிட பல்வேறு சோதனைகளுக்கு இடையே சிறகு செயல்பட்டு வருகிறது. தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட்டுவர முயற்சி செய்து வருகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20585

Saturday 14 May 2016

சிறகின் மேம்படுத்தப்பட்ட ஆன்ட்ராய்டு செயலி


siragu seyali1சிறகு இணையதளத்தை நீங்கள் தற்போது செயலி மூலமாகவும் வாசித்து மகிழலாம். எங்களது ஆன்ட்ராய்டு செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் நீங்கள் ஒரு முறை செயலியைத் திறந்து கட்டுரைகளை தரவிறக்கம் செய்துகொண்டால் அவை உங்களது அலைபேசியில் சேகரிக்கப்பட்டுவிடும். அதன் பிறகு இணைய இணைப்பு இல்லாமலேயே உங்களால் படைப்புகளை வாசிக்க முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=19486

Thursday 12 May 2016

தலைவலியைப் போக்க வழிமுறைகள்


headache
  1. துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.
  2. ஐந்தாறு துளசி இலைகளும், ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 11 May 2016

எது பயங்கரவாதம்?(கவிதை)


bayangaravaadham1

அன்று தமிழர் என்றால்
ஸ்ரீலங்காவில் பயங்கரவாதி
இன்று தாடி வளர்த்த இஸ்லாமியர் எல்லாம்
உலகில் பயங்கரவாதி!

அடக்கி ஒடுக்கப்படும் இனம்
துணிந்து எதிர்த்து
தம் சுதந்திரத்துக்காக போராடினால்

அது பயங்கரவாதமோ?
தம் தேசத்து மக்களையே

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20542

Tuesday 10 May 2016

பெண்ணின் பெயர் அவள் அடையாளமில்லை


pennin peyar2
பெயர்சூட்டும் சம்பிரதாயம் குழந்தை பிறந்த சில நாட்களில் நடைபெறுகிறது. இந்த நிமிடம் பெயர் சூட்டப்படாமலே வளரும் மனிதர்களின் எண்ணிக்கையை விடுத்து, மீதமிருப்பவர்களை கவனத்தில் கொள்வோம். புனைப் பெயர், நட்சத்திர அந்தஸ்துக்காக பெயர் மாற்றம் செய்துக் கொள்வது போன்ற விதிவிலக்குகளையும் விட்டுவிடலாம்.

கருப்பு, உயரம், சுருட்டை முடி போன்ற நீண்ட வர்ணனைகளைத் தவிர்த்து, ஒரு மனிதனை சுருங்க அடையாளப்படுத்திக் கொள்ள அவனுடைய/ அவளுடைய பெயர் உதவுகிறது.


அவரவர் குடும்ப வழக்கப்படியோ, தங்கள் சொந்த விருப்பப்படியோ பெயரை மட்டும் அல்லது தங்கள் ஊர் பெயருடன் சேர்த்து அல்லது தங்கள் குடும்பப் பெயரை சேர்த்து அல்லது தங்கள் சாதியின் பெயரை சேர்த்து எழுதும் வழக்கம் இருந்து வருகிறது. பொதுவாக தந்தையின் பெயரோ தந்தை வழி குடும்பப் பெயரோ சேர்க்கப்படுகிறது. பெரும்பான்மையான நாடுகளில் தாய் வழிப் பெயர்களை இணைத்துக் கொள்ளும் வழக்கம் இல்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 9 May 2016

அமெரிக்கர்கள் இனக்கலப்பு உறவுகளுக்கு எதிரானவர்களா?


interracial marriage 7
கொலம்பஸ் மேற்குலகில் காலடி வைத்ததற்குப் பிறகு உள்ள குறுகிய வெகு சில நூற்றாண்டுகளே கொண்ட அமெரிக்க வரலாற்றை ஆராய்ந்தால், அதில்  இனஅழிப்புகள், இனபேதங்கள் அடிப்படையிலான வன்முறைகள், அமெரிக்கப் பழங்குடியினரைக் கொன்றுகுவித்தது, கறுப்பின மக்களை அடிமைப்படுத்தியிருந்தது என்று தற்கால உலகம் விரும்பாத பல நடவடிக்கைகள் நிறைந்ததாக இருக்கும். இன்றும்கூட ஆங்காங்கு பல துயர்களையும், சிலமுறை காவல்துறையின் பொறுப்பற்ற நடவடிக்கையில் அகப்பட்டு உயிரை விடுவதையும் கறுப்பின அமெரிக்கர்கள் எதிர்கொள்கின்றனர். இருப்பினும், அவர்களது நீதிக்காகப் போராடும் கூட்டத்தினரும் எண்ணிக்கையில் அதிகரித்துத்தான் வருகின்றனர். சட்டத்தை மதிக்கும் அமெரிக்க மண்ணில் இனபேத நடவடிக்கைகளால் அநீதி இழைக்கப்படுவதைத் தடுக்க சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மக்களின் மனப்பான்மை உண்மையில் மாறிவிட்டதா?

அமெரிக்க வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால், ஆங்கிலேயர் விர்ஜீனியாவில் தங்கள் ஆட்சியை நிலைநாட்ட முற்பட்ட 1600 களிலேயே அமெரிக்கப் பழங்குடிப் பெண் ‘பாக்கஹாண்டஸ்’ என்பவரும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘ஜான் ரால்ஃப்’ (Pocahontas and John Rolfe) என்பவரும் திருமணம் செய்து கொண்ட நிகழ்வும் அமெரிக்க வரலாற்றின் ஒரு பகுதியே. இடைப்பட்ட காலங்களில் இனக்கலப்பு உறவில் கறுப்பின தந்தைக்கோ, அல்லது கறுப்பின தாய்க்கோ பிறந்த குழந்தைகளுக்கு சுதந்திரம் கிடையாது, 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 8 May 2016

நுழைவுத் தேர்வுகள்


Entrance-Examination4
மருத்துவப்படிப்புக்காக, இந்தியா முழுமைக்கும் பொதுவாக ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கிறது. வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. ஒரே தேர்வு, ஒரே மதிப்பெண். அதன் மூலம் விரும்பும் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேர்வதற்கு தகுதி பெறலாம் – GMAT, GATE, SAT போன்ற தேர்வுகளைப் போல. பொறியியலுக்கும் இத்தகைய ஒரு பொதுத் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நிகழ்வதற்கான வாய்ப்புகள் உருவானால், தமிழகத்தில் தரம் தாழ்ந்து செல்லும் கல்வியை மீண்டும் மீட்க முடியலாம்.
அரசியல்வாதிகள் அவர்களின் சுயலாபத்திற்காக மாணவர்களிடையே ஒரு பிரிவினையை கற்பிதம் செய்து, அதை உரக்கச் சொல்வதன் மூலம் உண்மை என நிறுவி இருக்கிறார்கள். எவ்விதக் கருத்துக்களையும் உரக்கச் சொல்வதன் மூலம், பெரும்பாலானவர்களை நம்பும்படி வைத்தால் அவையே உண்மையாகி விடுகிறது. அரசியல்வாதிகளின் அர்த்தமற்ற கூச்சல்கள், இதன் அடிப்படையில்தான் நாள்தோறும் அதிகரிக்கிறது. சுமார் பத்து வருடங்களாக நுழைவுத் தேர்வு குறித்து இத்தகைய அர்த்தமற்ற கூச்சல்களை எழுப்பி, பெரும்பாலானவர்களை நம்பும்படி செய்திருக்கிறார்கள். இந்தக் கூச்சல்களுக்கிடையே, உண்மையென நம்ப வைக்கப்பட்டவற்றின் போதாமையை, தர்க்கமின்மையை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல கல்வியாளர்கள் முயன்றாக வேண்டும். தமிழகத்தின் கல்வியை மீட்டெடுக்க, இது மிகமிக அவசரமானத் தேவை.

Entrance-Examination7
நுழைவுத் தேர்வுக்கு எதிராகக் கூறப்படும் காரணம், கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்கள் என்னும் பிரிவினை. கிராமப்புற மாணவர்களால் நுழைவுத் தேர்வுகளில் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட இயல்வதில்லை என்னும் கருத்தை திரும்பத் திரும்பக் கூறி, அதை உண்மையென மாற்றியிருக்கிறார்கள். ஆனால் எதன் அடிப்படையில் இந்தக் கருத்தாக்கம் கூறப்படுகிறது?. கிராமப்புறப் பள்ளிகள் தரமற்றவை என்னும் அர்த்தத்திலா?, அவ்வாறெனில் அவற்றின் தரத்தை உயர்த்துவதும், உயர்த்தக் கோருவதும்தானே இயல்பான செயல்களாக இருக்க முடியும்?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 5 May 2016

உடல் எடை அதிகரிக்க வழிமுறைகள்


gain_weight3
  1. காய்ச்சிய பாலில் பூசணி விதையின் பருப்பை பொடி செய்து கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
  2. நெல்லிக்காய்த் தூளை அரை தேக்கரண்டி பாலில் சாப்பிட்டு வர உடல் சதைப்பிடிப்பு கூடுதலாகும்.
  3. நத்தை சூரி விதையை அரைத்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 4 May 2016

விலையான தாய்மடி(கவிதை)


vilayaana thaaimadi

ஏர்பிடித்தே   உழுதமண்ணாம்   ஆண்டு   தோறும்
எழில்பயிராய்   முப்போகம்   விளைந்த   மண்ணாம்
கார்முகில்கள்   ஒன்றுகூடி   மாதம்   மூன்றாய்
கருணையுடன்   பொழிந்தமழை   நீராய்த்   தேங்கி
ஆர்க்கின்ற   கடல்போல     ஏரி   கேணி
அனைத்திலுமே   வழிந்துவந்து   செழித்த   மண்ணாம்

ஊர்மகிழ   உறவெல்லாம்   மகிழ   வீட்டில்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20517

Tuesday 3 May 2016

சங்ககால மக்கள் கொண்டாடிய விழாக்களும் அவற்றின் தன்மைகளும்


sanga kaala vizhakkal15
எல்லாவித மக்களுக்கும் வெவ்வேறு வகையான விழாக்கள் சிறப்புடையதாகப் பார்க்கப்படுகின்றன. அவற்றிற்கு முக்கியக் காரணம் அவ்விழாக்களில் சில அவர்களது சமயம் சார்ந்தும் காணப்படுவதுமாகும். அவைகள் கொண்டாடப்பட்ட காலங்கள், அதன் தன்மைகள் பற்றிய குறிப்புகள் அவர்களது இலக்கியங்கள் மூலமாகவோ அல்லது அவர்களது காலத்திய தொல்லியல் ஆய்வுகள் மூலமாகவோ மற்றும் பயணக் குறிப்புகள் மூலமாகவோ கிடைக்கின்றன. பெரும்பாலும் ஒரு ஆய்விற்கு முக்கிய ஆதாரமாக அம்மக்களின் இலக்கியங்களை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, கிடைக்கின்ற சான்றுகளே முதன்மையானதாகும்.
அதனடிப்படையில் தமிழகத்தில் சங்ககால மக்கள் கொண்டாடிய விழாக்கள் பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. சங்ககால நூல்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களிலிருந்து ஆய்வு செய்தல் தக்கது என்ற முறையில் அவற்றினுள்ளே புதையுண்டு கிடக்கின்ற, இன்று நமது வாழ்விலிருந்து மறைந்து போயிருக்கின்ற சில விழாக்களின் தன்மைகள் பற்றியும் இங்கே காணலாம்.
கார்த்திகை திருவிழா:
sanga kaala vizhakkal2

தமிழர்கள் கொண்டாடிய விழாக்களில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற இவ்விழாவானது அடிப்படையில் சமய விழாவாகப் பார்க்கப்படுகிறது. இவ்விழாவினை இன்றும் நாம் கடைபிடித்தும் வருகிறோம். இவ்விழா பற்றிய குறிப்பை சங்ககால நூலான நற்றிணையில் கூறப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத் தக்கதாகும். ஏனெனில் சங்ககால நூல்களில் முன்னதாக வைத்துப் போற்றக்கூடிய நூல் என்பதாலேயே இத்தகைய முக்கியத்துவம் பெறுகிறது. இவ்விழாவானது கார்த்திகை மாதத்தில் நடைபெற்ற விழாவாகும். கார்த்திகை விண்மீனை “அறுமீன்” என்றும் அழைத்துள்ளனர். கார்த்திகைத் திங்களை “அறஞ்செய்; திங்கள்” (நற்றி-202). என்றும் அழைக்கப்பட்டுள்ளது. வீடுகளும், தெருக்களும் ஒளிவிளக்குகளால் அழகுறுத்தப்பட்டிருத்தல் வேண்டும். அதற்கு ஆதாரமாக அகநானூற்றுப் பாடல் ஒன்றும் நமக்கு சான்று பகர்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

முகநூல்(facebook) மற்றும் கட்செவி அஞ்சல் (whatsapp) பயன்படுத்தலாமா?


nalla kaalam1
“மனித மூளையை ஒடுக்கி சிந்தனைத் திறனை மழுங்கச் செய்பவை – முகநூல்(facebook) மற்றும் கட்செவி அஞ்சல் (whatsapp)“
நான் மேலே எழுதியிருக்கும் அந்த இரட்டை மேற்கோள் இட்ட  வரிகளைத் தொடர்ந்து  மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்து உங்கள் மூளையில் பதிவேற்றிக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளில்  என்ன அவ்வளவு சிறப்பு இருக்கிறது என்கிறீர்களா, அது தான் அறிவியல் விஞ்ஞானம் தற்போது நமக்குக் கொடுத்துள்ள சமீபத்திய ஆய்வின் முடிவு. நமது அன்றாட வாழ்க்கையை பாதிப்பதிலும் இவை பெரும்பங்கு வகிக்கிறது என்ற உண்மையை எவரும் மறுக்கமுடியாது.

உலகத்தில் இந்த இரண்டு செயலியையும் முதலில் அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் நம் இந்தியாவும் இருக்கிறது. இரண்டாம் இடம் என்றவுடன் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டாம், ஏனென்றால் இது பொருளாதார வளர்ச்சியோ, வளர்ச்சியில் தன்னிறைவோ  கிடையாது. சரி, நாம் விடயத்திற்கு வருவோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 2 May 2016

இந்தியாவில் மணவிலக்குச் சட்டங்கள் – ஒரு பார்வை


Divorce Act1

இந்தியாவைப் பொருத்தவரை ஒவ்வொரு மதத்திற்கும் மணவிலக்குச் சட்டங்கள் தனியே உண்டு. அதேபோன்று சாதி மற்றும் மதத்தை மறுத்து திருமணம் செய்தவர்களுக்கு சிறப்பு திருமணச் சட்டம்(Special Marriage Act ), 1954 உண்டு.
இந்து என்று அழைக்கப்படும் மக்கள் அனைவரும் இந்து திருமணச் சட்டம் (Hindu Marriage Act )1955 மூலம் மணவிலக்குப் பெற முடியும். சீக்கிய மதம்,  ஜெயினமதம்,  புத்த மதம் ஆகிய மதங்களும், இந்து மதத்தின் கிளை மதங்களாகவே இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்ற காரணத்தால் அவர்களுக்கும் இந்து திருமணச்சட்டம் பொருந்தும்.
இசுலாமியர்களைப் பொருத்தவரையில் இசுலாமிய திருமண ரத்துச் சட்டம் (Dissolution of Muslim Marriages Act, 1939)மூலம் மணவிலக்குப் பெறலாம். அதே போன்று கிறித்துவர்கள் இந்திய மணவிலக்குச் சட்டம் (Indian Divorce Act, 1869)மூலம் மணவிலக்குப் பெறலாம். பார்சி மதத்தினர் பார்சி திருமண மற்றும் மணவிலக்குச் சட்டம் (The Parsi Marriage and Divorce Act, 1936) மூலம் மணவிலக்குப் பெறலாம்.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மக்கள் – ஆட்சி – அரசு


தமிழகத்தின் மக்களாட்சி மக்களின் ஆட்சியா?

உலகில் அரசு தோன்றிய நாட்களிலிருந்து இன்று வரை அமைந்த அரசு அமைப்புகளிலே, மக்களாட்சி முறை தான் சிறப்பானதாகக் கருதப்படுகிறது 1970 ஆம் ஆண்டுகளில், நாற்பது நாடுகளில் மட்டும் பின்பற்றப்பட்ட மக்களாட்சி, முறை இன்று  நூற்றி இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மக்களாட்சி முறை பின்பற்றப்படாத நாடுகளில் வாழும் மக்களும் மக்களாட்சி முறைக்கு மாறிவிடவே விரும்புகின்றனர். இன்று பல நாடுகளில் அதற்கான போராட்டங்களும் நடந்து வருகின்றன. சுதந்திரம் அடைந்ததிலிருந்து நம் நாட்டிலும் மக்களாட்சி முறையைத்தான் பின்பற்றி வருகிறோம்.
மக்களுக்கான அரசு, மக்களாலே தேர்ந்தெடுக்கப்பட்டு, நடத்தப்படுவது தான் மக்களாட்சியின் சிறப்பு. ஆனால் நடைமுறையில் நமது மக்களாட்சி அப்படி செயல்படுவது இல்லை. மக்களாட்சியில் மக்களாகிய நாம் தான் முதன்மையானவர்கள். ஆனால் ஆட்சி, அதிகாரம் கையில் கிடைத்தவுடன் தம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்கு விரோதமாகவே அரசாங்கங்கள் செயல்படுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரசு மக்களுக்காக செயல்படுவது அரிதாகிவிட்டது. தவறான அதிகார பிரயோகம்,  ஊழல், நிர்வாக திறமையின்மை போன்றவை தலை தூக்குகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.