மகாகவி
பாரதியாரின் கவியாளுமையால் அவரைப் பின்பற்றித் தன் கவிதைப் பாதையை
வகுத்துக்கொண்டவராக விளங்கியவர் பாரதிதாசன் ஆவார். பாரதியின் கவிதை
நெறிகளான எளிய சொற்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம்
ஆகியவற்றாலான மரபுசார்ந்த கவிதைகளைப் படைத்துப் பாரதியின் பாதைக்கு
வலுசேர்த்தவர் பாரதிதாசன். இவர் பாரதியைப் போலவே உணர்வு மிக்கக்
கவிதைகளையும், சிறு கதையமைவு கொண்ட பாவியங்களையும் வரைந்தளிக்கும்
நன்முறையைக் கைக்கொண்டவர். பாரதியின் கவிதை நெறியோடுத் தமிழ்ச்சுவையை,
சமுதாய விழிப்புணர்வு பெறச் செய்யும் புரட்சிக் கருத்துக்களை, பகுத்தறிவுச்
சிந்தனைகளைக் கலந்து மரபுக் கவிதைகளைப் படைப்பது பாரதிதாசனின் தனித்த
நெறியாகின்றது. பாரதி கவிதா மண்டலத்திலிருந்து உதித்த பாரதிதாசன் தனக்கென
ஒரு கவிதா மண்டலத்தை அமைத்துக் கொள்ள விழைந்தமையும் பாரதியின் வழிப்பட்டதே
ஆகும்.
பாரதியாரின் கவிதைகளைப் படியெடுக்க,
அவருக்கு உதவிகள் பல செய்ய வந்த கனகசுப்புரத்தினம், பாரதியின் நட்பால்,
அவரின் கவித்திறத்தால் பாரதிக்குத் தாசன் ஆகின்றார். இதுபோலவே பாரதிதாசனைப்
பின்பற்றி அவருடன் பழகி வாழ்ந்தவர்கள், எழுதியவர்கள் பாரதிதாசன்
பரம்பரையாகின்றனர். பாரதியின் பரம்பரை பாரதிதாசன் பரம்பரையாகப்
பரிணமித்துள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment