தமிழகத்தில் தற்போது வரை ஏறத்தாழ 500
க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த வருடம் நடந்து
முடிந்துள்ள பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் ஒரு
இலட்சம் இடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் மட்டும் ஒரு ஆண்டுக்கு ஒரு
லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகின்றனர். இவர்களில்
வேலைக்கு தகுதி உள்ளவர்கள் என்று பார்த்தால், மிக சொற்பமாக உள்ளனர்.
இன்றைக்கு தமிழகத்தில் வேலை இல்லாமல் இருப்பவர்களில் முதலிடத்தில் உள்ளவர்கள் பொறியியல் பட்டதாரிகள் என்பது மறுக்க முடியாத உண்மை.
பெரிய நிறுவனங்கள் இதற்கு முன்னர்,
கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து வளாகத்தேர்வு நடத்தி, மாணவர்களை தேர்வு
செய்து, தத்தமது நிறுவனங்களில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பினை அளித்து
வந்தனர்.
இம்மாதிரி வளாகத் தேர்வில் தேர்ச்சி
அடைந்து, பணிக்குச் செல்பவர்களுக்கு, நிறுவனமே தங்களது வேலைக்குத் தேவையான
பயிற்சியை அளித்து, பணி வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்றது.
வளாகத் தேர்வில் தேர்ச்சி அடையாமல்,
பொறியியல் படிப்பை முடித்து விட்டு வெளிவரும் மாணவர்களின் நிலைமை மோசம்.
அதுவும் கிராமங்களில் உள்ள பொறியியல் கல்லூரியில், பொறியியல் கல்வியை
முடித்து விட்டு வெளிவரும் மாணவர்களின் நிலைமை மிகவும் மோசம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.