கிரீன் பீஸ் (Greenpeace) பசுமைப்
போராளிகள் தலைமையகத்திற்கும், உலக ஐக்கியநாடுகளின் சபைக்கும், உலக
நாடுகளின் அரசாங்கங்களின் கவனத்திற்கும் ….
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை
திட்டத்தின் குறிக்கோளின் படி, வளரும் மக்கட்தொகையின் தேவையை நிறைவு
செய்யும் வகையில் உலகளாவிய முறையில் உணவு, தீனி, தீவனங்கள் உற்பத்தியின்
அளவு வரும் 2050ஆம் ஆண்டுக்குள் சுமார் இருமடங்காக அதிகரிக்கப்பட வேண்டும்
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரீன் பீஸ் பசுமைப் போராளிகள்
தலைமையின்கீழ் நவீன வேளாண்முறைகளை எதிர்க்கும் அமைப்புகள், தொடர்ந்து இந்த
உண்மைகளை மறுத்து வருவதுடன், உயிரியல் தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில்
புதுமைகளைப் புகுத்தும் செம்மை வேளாண் முறைகளையும் எதிர்த்து வருகின்றனர்.
இவர்கள் நவீன உயிரியல் தொழில்நுட்ப முறையில் முன்னெடுக்கப்படும் செம்மை
வேளாண் முறைகளின் பயன்,ஆபத்து, தாக்கம் ஆகியன பற்றிய தவறானக்
கருத்துக்களைப் பரப்புவதுடன், அனுமதிக்கப்பட்ட கள சோதனை முறைகள், வேளாண்
ஆய்வுத் திட்டங்களைத் தடைசெய்து குலைக்கும் குற்றங்களையும் தொடர்ந்து
செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment