Wednesday, 13 July 2016

அகிலாவின் “மழையிடம் மௌனங்கள் இல்லை” கவிதைகளில் பெண் மௌனமும் மழை அதிர்வுகளும்

Siragu Akilaavin poem3

எழுத்து அனைவருக்கும் பொதுவானது எனினும் பெண்ணின் பார்வையில் பார்க்கும் போது பெண் எழுத்து தனித்துவமானது. தமிழிலக்கியச் சூழலில் இன்று உரக்க ஒலிக்கும் விவாதங்களிலொன்று பெண்கள் எழுதும் கவிதைகளைப் பற்றியது. எல்லா விவாதங்களையும் போல இதிலும் முன்னெடுத்துச் செல்வதற்கான கருத்துக்கள் குறைவு ஆரவாரங்கள் அதிகம். இது இயல்பானது என்று இலக்கிய வரலாற்றைப் பார்க்கும் போது தெளிவாகிறது. தமிழில் புதுக் கவிதையின் வருகை இது போன்ற விவாதங்களை உருவாக்கியது. இத்தகைய போக்கினால் அகிலாவின் கவிதை மொழி தனித்துவமானது. மக்கள் தங்கள் ஆற்றலின் வலிமையும், சிறப்பையும் நன்குணர்ந்து போராட்டக்களத்தில் இறங்குவர். எத்தகைய போராட்டமாயினும். புரட்சித்தன்மையில் வெடிப்பனவே சீர்திருத்தங்கள் தோன்றியதை இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. இந்த வகையில் கவிஞர்கள் இப்போராட்ட உணர்வடைய மக்களின் எழுச்சியைப் பாடும்பொழுது, தற்காலச் சமூக போக்குகளிலிருந்து திரண்டெழும் அனுபவ மூலங்களைக் கவிதை ஆக்குவர் மேலும் மக்களையும், மக்கள் சார்ந்த நிகழ்வுகளையும் அகிலா கவிதைகளில் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.


தமிழ்க் கவிதையில் பெண் விடுதலை பேசிய பாரதிக்கும், பாரதிதாசனுக்குப் பிறகு சுயமான பெண் விழிப்பை உணர்த்தியக் கவிஞராக விளங்குகிறார். பழைய சமூக அமைப்பில் தீண்டாதவர் என ஒதுக்கப்பட்டது போலவே, பெண்கள் பின்புத்தி உள்ளவர்கள் என ஒதுக்கிய காலம் மாறி இன்று எல்லாமே பெண்கள் என ஆனபோது போராட்டங்கள் ஏராளம். இந்த வகையில் அகிலா கவிதைகளில் பெண் மௌனத்தையும், அதன் அதிர்வையும் காணலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment