இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது
என்கிறார்கள். இந்த ஆண்டு 8% உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (ஜிடிபி)
எட்டுவோம், அடுத்த ஆண்டு 10% வளர்ச்சியை எய்துவோம், 2025-இல் உலக வல்லரசாகி
விடுவோம் என்கிறார்கள். இதில் காங்கிரஸ் ஆட்சியா, பிஜேபி ஆட்சியா என்ற
வேறுபாடெல்லாம் இல்லை. ஆனால் நமக்குத் தெரிந்தவரை, இந்தியாவில் ஒருசில
பணக்காரர்களின் தொகை அதிகரித்துள்ளது. ஏழைகள் இன்னும் ஏழைகளாகவே
இருக்கிறார்கள். இலவசப் பொருள்களை நம்புகிறார்கள். அதையே நம்பி
வாக்களிக்கவும் செய்கிறார்கள். விவசாயிகள் பிழைப்புக்கு வழியின்றித்
தற்கொலை செய்துகொள்கிறார்கள். நடுத்தர மக்கள் தினசரி உயரும் விலைவாசியால்
அவதிப்படுகிறார்கள். 1947இல் இந்தியா விடுதலை பெற்றபோது 1 டாலருக்கு 1
ரூபாய் என்று இருந்த மதிப்பு, இன்று 1டாலருக்கு 68 ரூபாய் அளவுக்கு
வீழ்ந்துள்ளது (“வளர்ச்சியடைந்துள்ளது” என்று ஒருவேளை பிரதமர் மோதி,
மன்மோகன் சிங் போன்ற அரசியல், பொருளாதார நிபுணர்கள் சொல்லலாம்!)
அதனால்தான் இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்று தலைப்பிடாமல் பொருளாதார மாற்றம் என்று இக்கட்டுரைக்குத் தலைப்பிட்டுள்ளேன்.
சுதந்திர இந்தியாவின் பொருளாதார வரலாற்றை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment