சுற்றுச்சூழலியல்
மற்றும் உயிரியல் மேம்பாட்டுத்துறை நிபுணர்; குஜராத் மாநில அரசின்
சூழலியல் ஆணையத்தில் சதுப்புநில மேலாளர் என்ற பொறுப்பில் அமர்ந்து 2 ஆயிரம்
ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்தி மரக்கன்றுகள் நடுவது மற்றும் மேம்பாட்டு
பணிகளை கவனிப்பது; தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் இயற்கை
வள மேம்பாடு மற்றும் கடலோர பாதுகாப்பு போன்ற துறைகளில் ஈடுபாடு; குஜராத்
பாலைவன சூழலியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘அரிய மற்றும் சுருங்கி வரும்
உயிரினங்கள்’ மற்றும் சதுப்புநில காடுகள் ஆராய்ச்சி; சுற்றுச்சூழல் தாக்கம்
குறித்த ஆராய்ச்சி; Eco Balance Consultancy நிறுவனர்..
அத்தனை பொறுப்புகளுக்கும் பின்னால்
அடக்கமாகவும் அமைதியாகவும் சாதித்து நிற்கிறார் தெய்வா ஆஸ்வின் ஸ்டான்லி.
அவருடன் ஒரு நேர்க்காணல்..
உங்களைப்பற்றி?
தெய்வா ஆஸ்வின் ஸ்டான்லி:
அப்பா ஸ்டான்லி சுபமணி, உடற்கல்வி ஆசிரியராக இருந்தவர். அம்மா அமலா பேபி,
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்தவர். இருவரும் இப்போது இல்லை. ஒரு
தங்கை, ஒரு தம்பி. இவ்வளவுதான் என் குடும்பம்.
தூத்துக்குடி புனித மேரி கல்லூரியில்
தாவரவியலில் இளங்கலை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தாவரவியலில்
முதுகலை, பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சி நிலையத்தில்
எம்.பில்,. தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் ஆண்கள் கல்லூரியில் கடல் உயிரியல்
பாடத்தில் முனைவர் படிப்பு. சுமார் 4 ஆயிரம் ஆண்கள் மத்தியில் நான் ஒரே
பெண்ணாக 5 ஆண்டு காலம் இங்கு பயின்றது ஒரு புதுமையான அனுபவம்.
சதுப்பு நிலம் மற்றும் கடல்சார் ஆராய்ச்சியில் ஆர்வம் எப்படி வந்தது?
தெய்வா ஆஸ்வின் ஸ்டான்லி:
சின்ன வயதிலிருந்தே வனம் மற்றும் கடல் பற்றிய விஷயங்கள் என்னை மிகவும்
ஈர்த்தது. அதுதொடர்பான தகவல்களை விரும்பி படிப்பேன். அதனால்தான் +1 முதல்
ஆராய்ச்சி படிப்பு வரை, வனம் மற்றும் கடல் தொடர்பான பாடப்பிரிவுகளையே
தேர்ந்தெடுத்தேன். எந்தவொரு சூழலும் என் ஆர்வத்திற்கு உட்பட்டதாக இருக்க
வேண்டுமென நினைப்பேன். அதனால்தான் படிப்பு முதல் பணி வரை எல்லாமே என்
ஆர்வம் சார்ந்ததான வனம் மற்றும் கடல் ஆராய்ச்சிகள் என அமைந்துவிட்டன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment