ஒவ்வொரு
ஆசிரியரும் மாணவனுக்கு நம்பிக்கை தரும் வேர் போன்றவர். இந்த வேர்
மாணவர்களிடத்தில் உள்ள ஆளுமைப் பண்புகளை வளரச் செய்ய வேண்டும். உளவியல்
அறிஞர் வாட்சன் ‘என்னிடம் குறிப்பிட்ட குழந்தைகளைத் தாருங்கள். அந்தக்
குழந்தைகளை நீங்கள் விரும்பும் வண்ணம் அறிஞராக, மருத்துவராக, குற்றவாளியாக
மாற்றிக் காட்டுகிறேன்‘ என்று சவால் விட்டார். எனவே ஆசிரியர் பணி என்பது
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, அவர்களைப் பிறருக்குப் பயன்படும்
வகையில் நிழல் தரு மரங்களாக, கனிகளாக மாற்றிக் காட்டும் மகத்தான பணியாகும்.
எனவேதான் ஆசிரியர் பணி அறப்பணி என்றார்கள் . அர்ப்பணிப்பு இதயம்
உள்ளவர்களால் மட்டுமே இந்த மகத்தான பணியை மேற்கொள்ள முடியும். தற்போதைய
நிலைமையில் ஆசிரியர் பணி ‘சேவை‘ என்ற நிலையிலிருந்து முழுக்க முழுக்க
மாற்றமடைந்து தொழில் என்ற நிலைமைக்கு வந்து விட்டது.
ஆசிரியர்களை மட்டும் இதற்குக் காரணம் காட்டிவிடமுடியாது. கல்வி
நிறுவனங்களும் சேவை என்ற நிலையிலிருந்து மாறி வணிகம் என்ற நிலைமைக்கு மாறி
விட்டன. இந்நிறுவனங்களுக்கு பெற்றோர்கள் வாடிக்கையாளர்கள்.
வாடிக்கையாளர்களாகிய பெற்றோர்கள் விரும்பும் வகையில் மாணவர்களை உருவாக்கித்
தர வேண்டிய நிலையில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. பாடத்திட்டங்களை அப்படியே
மனனம் செய்து எல்லா மாணவர்களும் நூறு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
ஆழமாகப் படித்து பொருள் புரிந்து கொண்டுதான் மதிப்பெண் எடுத்தானா
என்பதெல்லாம் தேவையில்லை. பாடத்திட்டம் எப்படியிருந்தாலும் புரிந்தாலும்
புரியாவிட்டாலும் யாருக்கும் கவலையில்லை. நடைமுறைக்கு அப்பாடத்திட்டம்
தொடர்புடையதாக இருக்கிறதா? அவனுடைய உள் ஆற்றலை வளர்க்கிறதா? புரியும்
மொழியில் தான் பாடத்திட்டம் உள்ளதா? அதையெல்லாம் குறித்து யாருக்கும்
கவலையில்லை. பள்ளி மாணவன்விரும்பும் மேற்படிப்பை எடுக்குமளவிற்கு
மதிப்பெண் எடுக்க வேண்டும். கல்லூரி மாணவன் பன்னாட்டு நிறுவனத்தில் சென்று
எடுக்குமளவிற்கு மதிப்பெண் எடுக்க வேண்டும். பணிபுரிய வேண்டும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment