பாண்டிச்சேரியை
விட்டு வெளியேறும் மருதநாயகம், தஞ்சை மண்ணில் தஞ்சம் அடைகிறார். அங்கு
அவர் தஞ்சாவூர் மன்னனின் படைப்பிரிவில் காலாட்படையில் ஒரு சிப்பாயாக தனது
பணியைத் தொடங்குகிறார். அங்கு சிறந்த முறையில் பணிசெய்து தஞ்சையிலிருந்து
தற்போது, ஆந்திராவில் உள்ள நெல்லூருக்கு இவர் அனுப்பப்படுகிறார். அங்கு
இராணுவத்தில் பணி செய்து கொண்டிருக்கிறார். அங்கு முகமது கமல் என்பவர்
மருத்துவராக இருக்கிறார். இவரின் கீழ் மருதநாயகம் அவரது பணியை செய்து
கொண்டிருக்கிறார். மருதநாயகத்திற்கு அங்கு தண்டலகர் (Thandalgar), வரி
வசூல் (Tax Collector), (Havidar)
இந்தப்பெயர்கள்அந்தக்காலகட்டத்தில்வரிவசூல்செய்பவர்களைக்குறிக்கும்.
வரிவசூல்செய்பவராகமருதநாயகம்பணிசெய்துகொண்டிருக்கும்போதுஆற்காடுநவாப்புடன்நட்புகொள்ளும்சந்தர்ப்பம்அமைகிறது.
ஆங்கிலேயர்களினால்மருதநாயகம்சுபேதார் (Subeder) என்ற பட்டம் பெற்று வரி
வசூல் செய்கிறார்.
நெல்லூரில் ஒரு சிறு இராணுவத்தின் தலைமைப்
பொறுப்பில் மருதநாயகம் அமர்த்தப்படுகிறார். இந்த இராணுவம் ஆற்காடு
நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆற்காடு நவாப்பிற்கு போரில் உதவ
வேண்டும் என்ற கட்டுப்பாட்டில் மருதநாயகம் பணியில் இருந்தார். ஆற்காட்டில்
நவாப் பட்டம் பெறுவதற்காக ஏற்பட்ட வாரிசு போரில், மருதநாயகமும் நவாப்புக்கு
ஆதரவாகக் கலந்து கொண்டு, தனது சிறு இராணுவத்தினைக் கொண்டு போரில் கலந்து
கொள்கிறார். இந்த கர்நாடக போர்தான் மருதநாயகத்தின் இராணுவ வாழ்க்கையைத்
தொடங்கி வைத்தது எனக் கூறலாம். இதன் மூலம் ஆற்காடு நவாப் மற்றும்
ஆங்கிலேயரின் நன்மதிப்பை அடைகிறார் மருதநாயகம்.
இந்த கர்நாடகப் போரில்கூட மருதநாயகம்
வெள்ளையனின் தலைமையின் கீழ்தான், Stringer Lawrence என்பவரின் கீழ்தான்
போரில் கலந்து கொண்டார் மருதநாயகம். இவரின் போர் பயிற்சிகள், போர் முறைகள்
அனைத்தும் ஐரோப்பியர்களின் போர் முறையினைக் கொண்டதாகவே அமைந்திருந்தது.
இவருக்குப் போர் பயிற்சி அளித்தவர்கள் அனைவரும் ஐரோப்பியர்களாக இருந்தனர்.
இவரின் இராணுவத்தினை செயல்படுத்தும் வீதம், வீரர்களை கட்டுக்கோப்புடன்
செயல்பட வைப்பது, வீரர்களுக்கு கட்டளையிடும் செயல் போன்றவை திறமைகளை
கவனித்து, சென்னை ஆளுநர் George Pigot என்பவர் மருத நாயகத்தினை பெரிதும்
ஆதரித்த வெள்ளையன் ஆவார். இவரின் ஆதரவின் மூலம் இவர் Commandant of
company’s sepoy’s என்ற உயர்வை அடைந்தார். பின்னர் 1760-ல் இவர் zenith
என்ற ‘all-conquering’ military commandant உயரிய நிலையை அடைந்தார்.
மருதநாயகத்தினைப் பற்றி 50 ஆண்டுகளுக்குப்
பிறகு john maccodm என்பவர் கூறுகையில், “இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு
சேவை செய்த துணிச்சலான வீரர், இவருக்கு ஈடு இணை எவரும் இல்லை” என்று
புகழாரம் சூட்டுகிறார். இவரின் இறப்புக்குப் பின் ஆங்கிலேயர்கள், “எங்களின்
போர் முறைகளைக் கற்றுக் கொண்டு அதில் மிகச் சிறந்த வீரர்களாக
திகழ்ந்தவர்கள் இருவர், மருதநாயகம் மற்றும் மைசூர் ஹதர் அலி இவர்கள் தான்
என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment