கேள்வி: தமிழ் மென்பொருளை உருவாக்குவதில் நீங்கள் சந்தித்த சிக்கல், சிரமங்கள் என்ன?
பதில்:
உருவாக்குவதில் சிக்கல்கள் கிடையாது. ஆனால் எந்த ஒரு உருவாக்குனருக்கும்
தன்னுடைய தயாரிப்பை யாராவது பயன்படுத்துவதைப் பார்க்க வேண்டும். அதுதான்
அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இங்கே பிரச்சனை என்னவென்றால் தமிழ்
மென்பொருட்களைப் பயன்படுத்தும் ஆட்கள் மிகக் குறைவு, இலவசமாகவே
கொடுத்தாலுமே கூட. எங்களிடம் கேட்டீர்கள் என்றால் மலேசியாவிலிருந்து
வருவார்கள், சிங்கப்பூரிலிருந்து வருவார்கள், அவர்கள் சொல்கிறார்கள்
பள்ளிகளில் எல்லாம் உங்களுடைய மென்பொருட்களைப் போட்டு வைத்திருக்கிறோம்,
குழந்தைகள் எல்லோரும் உங்களுடைய தமிழ் பார்த்துத்தான் வளர்கிறார்கள் என்று
சொல்வார்கள். அதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்குமே தவிர நம்மைப் பொறுத்தவரை
உந்து சக்தி இல்லை என்பதுதான் விசயம். மக்கள் பயன்படுத்த ஆரம்பிக்க
வேண்டும்.
கேள்வி: தமிழ்மொழி வளர்ச்சிக்கு தமிழ் மென்பொருள் எந்த அளவிற்கு பயன்படும்?
பதில்: முழுமையான
அளவிற்குப் பயன்படும். அதாவது ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்த ஒரு மொழி தன்னை
வந்து மாற்றிக்கொள்ளவில்லையோ அதுதான் அழிந்துபோகும். அதுதான் நாம்
வரலாற்றில் நாம் பார்த்துக்கொண்டிருக்கிற விசயம். நீங்கள் பார்த்தீர்கள்
என்றால் ஆங்கிலம் பேசிக்கொண்டு இருப்பவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் மொழிப்
பிரச்சனை ஒவ்வொரு விதத்திலும் நடந்துவந்து கொண்டிருக்கும். உதாரணமாக
ஆங்கிலம் பேசுபவர்களுக்கு சமற்கிருத கலப்பை நீக்குவதற்காக ஒரு சில
விசயங்கள் நடந்திருக்கும். அப்படியான மொழிப்போர் தொடர்ந்து நடந்துகொண்டே
இருக்கும். இப்பொழுது தொழில்நுட்பத்துடன் மொழிப்போர். ஆங்கிலத்தைப்
பார்த்தீர்கள் என்றால் எல்லா வார்த்தைகளையும் சொல்லுகிறோம், எல்லாமே
grid-ல் இருந்து தன்னை ஆங்கிலம் adapt பண்ணிக்கொள்வதால்தான்
வந்துகொண்டிருக்கிறது. இங்கு தமிழிலும் அதுதான் விசயம். எனவே எவ்வளவு தூரம்
நீங்கள் adapt பண்ணிக்கொள்கிறீர்களோ அதுதான். இப்பொழுது எல்லோருமே கணினி
சார்ந்து வளர்ந்துவந்துவிட்டார்கள். கணினியில் இந்தத் தமிழ் மொழி எவ்வளவு
adapt ஆகிறதோ அவ்வளவு தூரம் மொழி நிலைத்து நிற்கும் இல்லையென்றால் இப்பவே
அமெரிக்கா செல்லும் பிள்ளைகளுக்கு தமிழ் தேவைப்படுவதில்லை. பிரச்சனை
என்னவென்றால் அவர்கள் படிக்காமல் வருகிறார்கள். இந்த மொழி கணினியைப் போன்ற
தொழில்நுட்ப சாதனங்களுக்குள் எந்த அளவுக்கு நுழைந்து பயன்பாடு
அதிகரிக்கிறதோ அவ்வளவு தூரம் அதனுடைய வாழ்நாள் அதிகமாகும். நாளைக்கு கணினி
மாதிரி வேறு ஒன்று வரலாம், அலைபேசியில் தமிழ் வருவதுவும் அப்படிப்பட்ட
ஒன்றே. இது மொழி வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான செயல்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment