கட்டம் 2: சோதித்துப் பார்த்தல், 1977-1991
இந்தக் காலப்பகுதி, காங்கிரஸ் கூட்டுக்
கட்சிகள் அல்லாத, ஜனதாக் கட்சி 1977இல் முதன்முதலாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, 1980இல் இந்திரா
காந்தி பிரதமராகத் திரும்பினார். 1984இல் அவர் கொலை செய்யப்பட்டார்.
இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி, அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றி
1991இல் தான் கொல்லப்படும் வரை நீடித்தார். இந்தத் தாய்-மகன் இரட்டையர்,
முதல் கட்டத்தில் இந்திரா காந்தியின் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட
கடுமையான ஆனால் நன்னோக்குடைய திட்டங்களை இல்லாமல் செய்யும் பல
சீர்திருத்தங்களை முடுக்கிவிட்டனர்.
எல்லா நோக்கிலும், இடையில் குறைந்த காலமே
பதவியில் இருந்த ஜனதாக்கட்சி அரசாங்கம், பொருளாதாரச் சீர்திருத்தங்கள்
விசயத்தில் எந்த விளைவும் அற்றதாக இருந்தது. இப்போது தனது திறனின்மை, ஊழல்
ஆகியவற்றிற்காக மட்டுமே அது நினைவுகூரப்படுகிறது. ஜனதாக் கட்சி என்பது
பொதுவுடைமைக்கு எதிரான அரசியல் கட்சிகளின் கூட்டு; இந்திரா காந்திக்கும்
அவசரநிலைக்கும் எதிரானது. இந்தக் கூட்டில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு
முன்னோடியான பாரதிய ஜனசங்கமும், பிற சில கட்சிகளும் இருந்தன. இவை
அனுபவமிக்க சமதர்மவாதியாக இருந்து காந்தியவாதியாக மாறிய, ‘ஜே.பி’. என
அழைக்கப்பட்ட, ஜயப்பிரகாஷ் நாராயண் தொடங்கிய ‘முழுமைப் புரட்சி’ என்னும்
இயக்கத்தில் பங்கு கொண்டவை. கூட்டணியில்தான் என்றாலும், ஜனசங்கம் போன்ற ஓர்
இந்து தேசியக் கட்சி மையத்தில் ஆட்சிக்கு வருவது அதுவே முதல்முறை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment